Ticker

6/recent/ticker-posts

நேர்மையற்ற மன்னனின் நட்பு | விக்ரமாதித்தன் கதைகள்

அழகான பெண்
அழகான பெண்

கதையின் தொடர்ச்சி...

விக்ரமாதித்யன் நீண்ட நேரமாகியும், சென்ற பட்டியை காணாது தவித்தான்.

அந்த நேரத்தில், பட்டியும் அரண்மனையை நோக்கி வர, விக்ரமாதித்யன் முதியவர் வேடத்தை கலைந்து பட்டியை பார்த்து மகிழ்ச்சிக்கொண்டான்.

பட்டி நடந்தது அனைத்தையும், விவரமாக விக்ரமாதித்யனிடம் கூறினான்.

பின்னர், ஒரு திட்டத்தை தீட்டினான். விக்ரமாதித்யனிடம் ஆணாக மாற்றும் மந்திரத்தையும், வேரையும் கொடுத்தான்.

பின்னர் விக்ரமாதித்யனை பெண்ணாக மாற்றி, வேதாளத்தின் உதவியுடன் அழகுப்படுத்தினான்.

பின்னர், வேதாளத்தின் உதவியுடன் பட்டி மன்னனாகவும் மாறினான். பின்னர், பெண் உருவில் இருந்த விக்ரமாதித்யனை அழைத்துக்கொண்டு சென்றான்.

மன்னன் விக்ரமசிங்கன், அவர்களை அன்புடன் வரவேற்றான். மன்னன் உருவில் இருந்த பட்டி தன்னை அறிமுகப்படுத்த தொடங்கினான்.

தன்னுடைய பெயர் ராஜசேனன் என்றும், தன்னுடைய மனைவி பெயர் விக்ரமவல்லி. இவள் விக்ரமாதித்ய மாமன்னரின் தங்கையாவாள்.

அழகிய பெண்
அழகிய பெண்

என்னுடைய நாட்டில் சிலகாலங்களாக கடுமையான வறட்சி ஏற்பட்டது. ஆகையால், சில மாதங்களாக விக்ரமாதித்ய மன்னனுக்கு வரி கட்ட இயலவில்லை.

இதனால் கோபம் கொண்ட விக்ரமாதித்யன், தங்கை எனக்கூட பாராமல், உன் மனைவியை விற்றாவது வரியை கட்டு என்று கூறிவிட்டான்.

ஆகையால், வேறு வழியின்றி இங்கு வந்தேன். என் மனைவியை உங்களது மகளுக்கு தோழியாக சில மாதங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என்றான்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த விக்ரமசிங்கன், மன்னரே! விக்ரமாதித்ய மன்னன். இவ்வளவு கொடிய குணம் கொண்டவரா? தன்னுடைய தங்கை என்றுக்கூட பாராமல் இவ்வாறு செய்கிறார்.

தன்னுடைய தங்கை கணவருக்கே, இந்த நிலைமை என்றால், எங்களது நிலைமை கடினம் தான் என்றான்.

ஆண்மகன்
ஆண்மகன்

பின்னர் மன்னர் வேடத்தில் இருந்த பட்டியை பார்த்து, மன்னரே! உங்களது மனைவியை அழைத்து செல்லுங்கள். உங்களுக்கு தேவையான பொன்னையும் தருவதாக கூறினார்.

ஆனால் மன்னர் வேடத்தில் இருந்த பட்டி, உங்களது பெருந்தன்மைக்கு நன்றி மன்னா!.

ஆனால் என்னுடைய மனைவியுடன் சென்று, நான் ஆயிரம் பொன்னை வாரியாக செலுத்தினால், நான் பொன் வைத்துக்கொண்டே ஏமாற்றினேன் என நினைப்பார் என்றான்.

அதற்கு விக்ரமசிங்கனும், நீங்கள் கூறுவது சரிதான் என்று, பெண் உருவில் இருந்த விக்ரமாதித்யனை செண்பகவல்லியிடம் தோழியாக பாதுகாத்துக்கொள்ளும் படி கூறினான்.

மன்னர் வேடத்தில் இருந்த பட்டி, விக்ரமசிங்கனிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

பொற்காசுகள்
பொற்காசுகள்

விக்ரமாதித்யன், எவ்வாறேனும் செண்பகவல்லி எதற்காக சபதம் மேற்கொண்டாள் என தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து செண்பகவல்லி உடன் புறப்பட்டு சென்றான்.

மாதங்கள் கடந்தன. செண்பகவல்லியும், பெண் உருவில் இருந்த விக்ரமாதித்யனும் மிக சிறந்த நண்பர்களாக மாறினார்.

மாதங்கள் ஆனாலும் விக்ரமவல்லியால்(விக்ரமாதித்யன்), செண்பகவல்லி எதனால் சபதம் எடுத்தால் என்பதை தெரிந்துக்கொள்ள இயலவில்லை.

அதனால் ஒரு நாள் விக்ரமவல்லி, செண்பகவல்லியிடம் சரியாக பேசாமல் தன்னுடைய அறையில் இருந்தாள்.

விக்ரமவல்லி சரியாக பேசாதத்தை எண்ணி, செண்பகவல்லி கவலையடைந்தாள்.

பின்னர், விக்ரமவல்லியை பார்த்து, எதனால் என்னிடம் சரியாக பேச மறுக்கிறாய் என கேட்டாள்.

அதற்கு விக்ரமவல்லி, பதில் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தாள். செண்பகவல்லி எவ்வளவு கேட்டும், விக்ரமவல்லி பதில் சொல்லாததை எண்ணி வருந்தினாள்.

பின்னர் விக்ரமவல்லியிடம் இரண்டு நண்பர்களின் கதையை சொல்ல தொடங்கினாள்.

அசோகப்பட்டினம் என்னும் நாட்டை ஆண்டு வந்த மன்னனுக்கு, நித்தியசேகரன் என்றொரு மகன் இருந்தான்.

மன்னன், தன்னுடைய மகனை கல்விக்கற்க, பாடசாலைக்கு அனுப்பினான். அந்த பாடசாலையில் விந்தியவர்மன் என்றொரு வேடனின் மகனும் கல்வி கற்று வந்தான்.

பாடசாலை
பாடசாலை

நித்தியசேகரனும், விந்தியவர்மனும் மிக சிறந்த நண்பர்களாக கல்வி கற்று வந்தனர்.

இருவரும், அனைத்துக்கலைகளிலும் மிக சிறந்தவர்களாக மாறினார்கள். பின்னர் குருவிடம், ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

நித்தியசேகரன், தந்தைக்கு பின்னர் அரசவையில் மன்னன் பொறுப்பேற்று நாட்டை ஆண்டு வந்தான்.

விந்தியவர்மன், காடு வறட்சியால் பாதிக்கப்பட்டதை எண்ணி துயருற்றான். பின்னர் தன்னுடைய ஆருயிர் நண்பனான நித்தியசேகரனை பார்க்க முடிவு செய்தான்.

தன்னால் இயன்ற கனிகளை எடுத்துக்கொண்டு அரசவைக்கு சென்றான். ஆனால் அங்கிருந்த காவலர்கள் விந்தியவர்மனை அரசவைக்குள் அனுமதிக்கவில்லை.

தன்னுடைய நண்பனான அரசனுக்கு தெரிந்தால், உங்களுக்கு கட்டாயமாக தண்டனை கிடைக்கும் என்று கூறி அங்கேயே நின்றான்.

தண்டனை
தண்டனை

தன்னுடைய கஷ்டங்கள் அனைத்தும், தன்னுடைய நண்பனான அரசனை பார்த்ததும் தீர்ந்து விடும் என்று அமைதியாக காத்திருந்தான்.

விந்தியவர்மனால் எவ்வளவு நேரம் காத்திருந்தாலும், மன்னனை பார்க்க இயலவில்லை.

பலநாட்களாக, பலமுறை மன்னனை பார்க்க முயற்சித்தும் மன்னனை பார்க்க முடியாததால், இனி ஒருபொழுதும் திரும்பி வரக்கூடாது என திரும்பி சென்றான்.

தன்னுடைய இடத்தில் வசிக்கும் பெரியோர்கள் அறிவுறுத்தலால் வேட்டையாட சென்றான். தன்னுடைய நண்பனான விந்தியவர்மனை பார்க்க இயலவில்லை.

தன்னுடைய காலம் முழுவதும் வேட்டையாடி தான் வாழ வேண்டும் என நொந்துக்கொண்டே சென்றான்.

சிறுவயதில் இருந்தே காடு பழக்காததால், கால் போன போக்கில் சென்றுக்கொண்டு இருந்தான்.

நெடுந்தொலைவு சென்ற பின்னர், ஒரு குகை வாயிலில், பேரழகுக்கொண்ட பெண் ஒருத்தி அமர்ந்திருப்பதை கண்டான்.

குகை
குகை

அவளிடம் பேசலாம் என்று அருகில் செல்ல முயலும் பொழுது, அவளது மடியில் ஒரு முனிவர் தலை வைத்து படுத்தியிருப்பதை கண்டான்.

விந்தியவர்மனை கண்ட அந்த பெண்ணும், அவனை அங்கிருந்து செல்லமாறு சைகை மூலமாக தெரிவித்தாள்.

இல்லாவிடில், முனிவர் உங்களை கொன்று விடுவார் என்றும் சைகை மூலமாக தெரிவித்தாள்.

இதைக்கண்ட விந்தியவர்மன், அங்கிருந்து பயந்து ஓடினான். தட்டுத்தடுமாறி ஊருக்கு வந்ததும், தன்னுடைய நண்பனுக்கு, அந்த பெண் பொருத்தமாக இருப்பாள் என எண்ணினான்.

ஆகையால், எவ்வாறாவது மன்னனிடம் இதைக்கூற வேண்டும் என முடிவு செய்து, அங்கிருந்து அரண்மனைக்கு புறப்பட்டு சென்றான்.

காவலாளிகளிடம், தான் மன்னனை சந்திக்க வேண்டும் என்றும், இதனால் மன்னனுக்கு நன்மை உண்டாகும் என்று கூறினான்.

இதுநாள் வரையில், மன்னனான நித்தியசேகரன், நட்பை மறந்து, அவனை பார்க்க விரும்பாமல் தட்டி கழித்து வந்தான்.

இப்பொழுது நன்மை கிடைக்கும் என்றதும், காவலாளிகள் மூலமாக பார்க்க வர சொன்னான்.

பயணித்தால்
பயணித்தால்

நித்தியசேகரன், விந்தியவர்மன் இருக்கின்ற ஆர்வத்தை பார்த்ததும், தனக்கு ஏதோ பெரிய நன்மை கிடைக்க போவதாக எண்ணினான்.

ஆகையால், விந்தியவர்மன் மனம் குளிரும்படி பேசி அவனுக்கு விருந்து கொடுத்து உபசரித்தான்.

ஆனால் விந்தியவர்மன், வந்த செய்தியை உடனே சொல்ல வேண்டும் என்று அனைத்தையும் நித்தியசேகரனிடம் கூறி முடித்தான்.

அதைக்கேட்ட நித்தியசேகரன் உடனே, அந்த பெண்ணை அடைய வேண்டும் என விரும்பி, விந்தியவர்மனை அழைத்துக்கொண்டு புறப்பட்டு சென்றான்.

ஒருவழியாக, அந்த பெண் இருக்கும் குகைக்கு அருகில் இருவரும் வந்து சேர்ந்தனர்.

விந்தியவர்மன், நித்தியசேகரனை நிற்க கூறிவிட்டு, அப்பெண்ணை நோக்கி புறப்பட்டு சென்றான்.

அந்த பெண் மீண்டும், விந்தியவர்மன் வந்திருப்பதை பார்த்து சைகை மூலமாக புறப்பட்டு செல் என்றாள்.

சைகை
சைகை

ஆனால் விந்தியவர்மன், பயந்தால் பேச இயலாது என எண்ணி, தைரியத்துடன் அவளது அருகில் சென்று மன்னன், காத்திருக்கிறான்.

நீ அவனுடன் சென்றால், அவன் உன்னை மணந்துக்கொள்வான். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்றான்.

அதற்கு அந்தப்பெண், ஆனால் அது எவ்வாறு செய்வது, நான் எழுந்தால் முனிவர் முழித்துக்கொள்வார் என்றாள்.

அதற்கு விந்தியவர்மன், நான் எனது மடியில் படுக்க வைத்துக்கொள்கிறேன். நீ புறப்பட்டு சென்று விடு என்றான்.

அதுப்போல செய்யவே, அந்த அழகானப்பெண் அங்கிருந்து தப்பித்து நித்தியசேகரனை அடைந்தாள்.

நித்தியசேகரன், அவளது அழகில் மயங்கி, அவளை அனைத்து முத்தமிட்டு, தன்னுடைய நண்பனை மறந்து, அந்த பெண்ணுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

விந்தியவர்மன், தன்னுடைய நண்பனும், அந்த பெண்ணும் சேர்ந்து வந்து தன்னை காப்பாற்றுவார்கள் என எண்ணி காத்திருந்தான்.

ஆனால், அவர்கள் வரவில்லை என்று கூறி, செண்பகவல்லி, விக்ரமவல்லியை பார்த்து, அழகி கிடைத்ததுடன் நண்பனை மறந்து சென்று விட்டான் என்றாள்.

அதற்கு விக்ரமவல்லி கதை நன்றாக தான் உள்ளது. ஆனால் பாதியில் நிறுத்தி விட்டாயே? விந்தியவர்மனின் நிலை என்ன? முனிவர் ஏதேனும் சாபம் கொடுத்து விட்டாரா? அதைக்கூறு என்றாள்.

செண்பகவல்லியும் கதையை தொடர்ந்தாள்.

தொடரும்...

Post a Comment

0 Comments