Ticker

6/recent/ticker-posts

செண்பகவல்லியின் முன்ஜென்ம கதை | விக்ரமாதித்தன் கதைகள்

தீ
தீ

கதையின் தொடர்ச்சி...

விக்ரமவல்லி, செண்பகவல்லியை பார்த்து பேச தொடங்கினாள். நான் உன்னிடம் பேசாமல் இருந்ததுக்கு காரணம், உன்மீது அன்பு இல்லாமல் இல்லை.

பெண்கள், தன்னுடைய இளம் வயதில் எண்ணற்ற இன்பங்களை பெற்று மகிழ்வுடன் வாழ்வார்கள்.

ஆனால், வாழ்க்கையில் அதீத இன்பங்களை பெறாமல், ஆண்களை வெறுத்து வாழ்கிறாய். 

அதை பார்க்கும் பொழுது எனக்கு உன்னுடைய வாழ்க்கை இவ்வாறாக முடிந்துவிடும் என்று எனக்கு கவலை அதனால் தான் என்று புலம்பினாள்.

பின்னர், இதுபோல வாழ்ந்து உன்னுடைய வாழ்க்கை முடிந்து விடும் என்றே வருத்தமாக இருக்கிறது என்றாள்.

செண்பகவல்லி, இதைக்கேட்டு வருத்தமுற்றாள். பின்னர், விக்ரமவல்லியை பார்த்து தன்னுடைய முன்ஜென்ம கதையை கூற தொடங்கினாள்.

இந்த நாட்டின் எல்லையில் உள்ள இளங்காவனத்தில் இளங்காதேவி அம்மனின் கோவில் உள்ளது. அந்த கோவிலின் எதிரில், ஒரு மூங்கில் காடு உள்ளது.

மூங்கில் காடு
மூங்கில் காடு

அந்த மூங்கில் காட்டில், முன்பு ஒரு காலத்தில், சல்லரி, சல்லியன் என்று இரண்டு புறாக்கள் வாழ்ந்து வந்தது.

நீண்ட காலங்களாக, குழந்தை இல்லாமல் இருந்து, இளங்காதேவியின் அருளால், இரண்டு முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொரிந்து வந்தது.

அந்த இருபுறாக்களும், அவைகளை மிக அன்புடன் பாதுகாத்து வந்தது. ஒருநாள் இருபுறாக்களும் குஞ்சுகளுக்காக இரைதேடி சென்றது.

அந்த சமயத்தில், மூங்கில் ஆனது உராய்ந்து தீப்பற்றி மூங்கில் காடானது எரிந்துக்கொண்டு இருந்தது. அதில், அந்த புறாக்களின் குஞ்சுகளும் இறந்து போனது.

இதைக்கண்ட, அந்த இருபுறாக்களும் பிள்ளைகள் இல்லாமல் உயிர் வாழக்கூடாது என எண்ணியது. 

அதனால் எரிந்துக்கொண்டு இருக்கும் தீயில் விழுந்து இறந்துப்போகலாம் என முடிவு எடுத்தன.

அதனால், உயர பறந்து சென்று, பின்னர் வேகமாக தீயில் விழுந்து இறந்துப்போகலாம் என எண்ணி, வானத்தில் இருந்து தீயை பார்த்து விழ தொடங்கியது.

அந்த சமயத்தில், ஆண்புறாவன சல்லியன் தீயில் விழாமல் பின்வாங்கியது. இதைக்கண்ட பெண்புறாவும் பின்வாங்கியது.

தீ
தீ

பெண்புறாவான சல்லரி, ஆண்புறாவை திட்டி தீர்த்தது. குழந்தைகள் மீது அன்பில்லை என கோபத்தில் கடுமையாக திட்டியது. இதனால் ஆண்புறாவும் கவலையடைந்தது.

சல்லரியான பெண்புறா, பிள்ளைகள் இல்லாமல் இனி வாழ போவதில்லை என்று முடிவெடுத்து, இளங்காதேவியை பார்த்து ஒரு கோரிக்கை வைத்தது.

தாயே! என்னால் இனி வாழ முடியாது. பிள்ளைகள் மீது ஆண்களுக்கு என்றும் பாசமில்லை. அதனால், நான் மறுபிறவியில் இளவரசியாக பிறக்க வேண்டும்.

நான் பிறக்கும் பொழுதே, என்மீது செண்பகமலரின் மணமானது வீசவேண்டும். 

என்னுடைய வாழ்க்கையில் ஆண்களை வெறுத்து வாழ வேண்டும் என்று கேட்டது.

இளங்காதேவியும் அவ்வாறே வரமும் அளித்தாள். பின்னர், சல்லரியான பெண்புறா, தீயில் விழுந்து இறந்துபோனது என கதையை முடித்தாள் செண்பகவல்லி.

பின்னர், விக்ரமவல்லியை பார்த்து, அந்த சல்லரி தான் இன்றைய செண்பகவல்லி என்றாள்.

இதைக்கேட்ட விக்ரமவல்லி வேடத்தில் இருக்கும் விக்ரமாதித்தன் அதிர்ச்சியடைந்தான்.

அதே சமயத்தில் பட்டி, வேதாளத்தின் உதவியால் அணிலாக உருமாறி, செண்பகவல்லி பேசியதை அனைத்தையும் கேட்டு அறிந்துக்கொண்டான்.

அணில்
அணில்

பின்னர், தன்னுடைய இடத்திற்கு சென்று மீண்டும் மன்னர் வேடம் தரித்து, செண்பகவல்லியின் அரண்மனைக்கு சென்று, ஆயிரம் பொன்னை மன்னனிடம் கொடுத்து விக்ரமவல்லியை அழைத்தான்.

விக்ரமவல்லி, செண்பகவல்லியும் பிரிவதை எண்ணி கவலை கொண்டனர். பின்னர் செண்பகவல்லி, விக்ரமவல்லியை வழியனுப்பி வைத்தாள்.

அரண்மனையை விட்டு வெளியில் வந்ததும், விக்ரமவல்லி வடிவில் இருந்த விக்ரமாதித்தன், தன்னுடைய சுய உருவத்திற்கு வந்தான்.

பின்னர், பட்டி விக்ரமாதித்தனை பார்த்து, அண்ணா! போன காரியத்தில் வெற்றி தானே? எனக்கேட்க, நடந்தது அனைத்தையும் விக்ரமாதித்தன் கூறினான்.

சிரித்த பட்டி, தான் அணிலாக வந்து அனைத்தையும் அறிந்துக்கொண்டேன் என்றான்.

பின்னர், விக்ரமாதித்தன் செண்பகவல்லியை மணக்க, பட்டி திட்டம் ஒன்றை தீட்டினான்.

தொடரும்...

Post a Comment

0 Comments