காதலர்கள் |
கதையின் தொடர்ச்சி,
அனைவரின் முன்பாக காளிதேவி தோன்றினாள். மன்னன், காளியம்மனை பார்த்து, தாயே! இவர்கள் சொல்வதை போல மகேந்திரன் தான், பாம்பு புற்றிடம் விடப்பட்ட குழந்தையா? எனக் கேட்டான்.
அதற்கு காளியம்மனும், மன்னன் பார்த்து, அவர்கள் அனைவரும் கூறியது உண்மை தான்.
மகேந்திரன் தான், பாம்பு புற்றிடம் விடப்பட்ட சந்திரவதியின் குழந்தை என்றாள்.
இதைக்கேட்ட மகேந்திரனும், சந்திரவதியும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் மன்னனது முகத்தில் மகிழ்ச்சி இல்லை.
காளிதேவி, மன்னா! உனது இன்னொரு சந்தேகத்தையும் என்னிடம் கேக்கலாம் அல்லவா என கேட்டாள்.
மன்னன், தாயே! இந்த குழந்தை உண்மையில் யாருக்கு பிறந்தது. இது என்னுடைய மகனான மகேசனுக்கு பிறந்தது தானா? எனக்கேட்டான்.
குழந்தை |
அதற்கு காளியம்மனும், அதில் சிறிதும் சந்தேகம் இல்லை. உனது மருமகள் தங்கத்திலும் தனி குணம் கொண்டவள். உலகம் போற்றும் பத்தினியாவாள் என்றாள்.
தாயே! எனக்கு இன்னும் ஒரு சந்தேகம், எனது மகன் காணாமல் போயும், எவ்வாறு என்னுடைய மகனால், சந்திரவதி தாய்மை பெற்றாள் என்றான்.
அதற்கு காளியம்மன், மகனே! உனது மகன் காணாமல் போகவில்லை.
மகேசனும், சந்திரவதியும் தனிமையில் இருப்பதை பார்த்த தேவலோக 7 கன்னிகள், மகேசனுடைய அழகில் மயங்கி அவனை கவர்ந்து சென்று விட்டனர்.
அதுமட்டுமல்லாமல், மகேசனை 7 நாள்கள் அவர்களிடமும், 8 ஆவது நாள் சந்திரவதி இடமும் இருக்க செய்தனர். பின்னர் சந்திரவதியின் நினைவுகளை மறக்க செய்தனர் என்றாள்.
இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மன்னன், சந்திரவ்தியை பார்த்து, தான் செய்த தவறிற்கு மன்னிப்பு கேட்டான்.
சந்திரவதி, காளியம்மனை பார்த்து, தாயே! எனது கணவனை மறுபடியும் அடைய வழிக்கூறுங்கள் என்றாள்.
கணவன், மனைவி |
அதற்கு காளியம்மனும், சந்திரவ்தியை பார்த்து, மகளே! சோமவாரத்தில் விரதமிருந்து, அந்த 7 கன்னியரை நினைத்து தவமிருந்து மாங்கல்ய தானம் கேள். கவர்ந்து சென்ற கணவனை திருப்பி தருவார்கள் என்றாள்.
அனைவரும் காளியம்மனுக்கு நன்றி தெரிவித்து வணங்கி நிற்க, காளியம்மன் மறைந்து போனாள்.
மன்னன், தாசி மற்றும் மருத்துவச்சியை அரண்மனைக்கு அழைத்து வர செய்தான்.
தாசியை பார்த்து, நீ செய்த செயல்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும்.
இருந்தாலும், எனது மருமகளுக்கு உணவு அளித்ததாலும், குடும்பம் மீண்டும் சேர காரணமானதாலும் உன்னை மன்னித்து விடுகிறேன் செல் என்றார்.
இதைக்கேட்ட தாசி மன்னித்தால் போதும் என்று ஓடி சென்றாள். மன்னன், அடுத்து மருத்துவச்சியை பார்த்து, நீ செய்த செயல்கள் அனைத்தும் பாராட்டுதலுக்கு உரியது என்றார்.
தாசி |
பின்னர், மருத்துவச்சிக்கு ஏராளமான பொன்னும், பொருளும் கொடுத்து, அவளுக்கு சொந்தமாக ஒரு ஊரையும் பரிசாக அளித்தான்.
சந்திரவதியும், சோமவாரத்தில் விரதமிருந்து இழந்த கணவனை திரும்ப பெற்றாள்.
அனைவரும் ஒன்று சேர்ந்தனர் எனக்கூறி கதையை முடித்தது தலையணை.
பின்னர், விக்ரமாதித்யனை பார்த்து, விக்ரமாதித்ய மன்னரே! கதை எவ்வாறு இருந்தது? என கேட்டது.
அப்பொழுது தான், அங்கிருந்த அனைவருக்கும் இரத்தினவியாபாரி உருவில் இருந்தது விக்ரமாதித்ய மாமன்னர் என தெரியவந்தது.
இதனால் அங்கிருந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
பின்னர், இளவரசியை பார்த்து, நீ மிகசிறந்த புத்திசாலி என போற்றினர்.
பின்னர் விக்ரமாதித்யன், சிலகாலம் அந்த தீவில் தங்கிருந்தான். பின்னர், தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு, தான் சுறாவிடம் இருந்து காப்பாற்றிய சிறுவனை முனிவரிடம் இருந்து அழைத்துக்கொண்டு நாடு திரும்பினான்.
அந்த சிறுவனிடம் ஏராளமான பொன்னும், பொருளும் அளித்து அவனது குடும்பத்திடம் ஒப்படைத்தான்.
அந்த பிராமணன், விக்ரமாதித்யனை பார்த்து மன்னிப்பு கோரினான்.
தொடரும்...
0 Comments