Ticker

6/recent/ticker-posts

காளியம்மனும், இளவரசனும் | விக்ரமாதித்தன் கதைகள்

குழந்தை
குழந்தை

கதையின் தொடர்ச்சி...

தலையணையும், கதை சொல்ல தொடங்கியது.

அந்த குழந்தையின் அழுகுரலை கேட்டு, அந்த புற்றில் இருந்த 5 தலை நாகம் வெளியில் வந்தது.

அந்த நாகம், குழந்தையை பார்த்த மறுகணமே அரசகுடும்பத்தை சேர்ந்தது என தெரிந்துக்கொண்டது.

பின்னர், குழந்தையை தலையில் ஏந்தி அருகில் இருந்த காளி கோவிலில் வைத்துவிட்டது.

அந்த கோவிலுக்கு, அந்நாட்டு மன்னனான குணசேகரன் தினமும் காலையில் அம்மனை தரிசிக்க வருவது வழக்கம்.

அன்று காலை வரும்பொழுது குழந்தை இருப்பதைக் கண்டு, காளி தேவியே மகனுக்கு பதிலாக குழந்தையை கொடுத்துள்ளார் என எண்ணி மகிழ்ந்தான்.

பின்னர், அரண்மனைக்கு எடுத்து செல்லும் பொழுது ராணி குழந்தையை பார்த்து மகிழ்ந்தாள். பின்னர், மன்னன் நடந்ததை கூறினான்.

குழந்தை
குழந்தை

அரண்மனையில் இருந்த அனைவரும், குழந்தை மகேசன் சாயலில் இருப்பதாக கூறினார்கள்.

இதைக்கேட்ட மன்னனும், ராணியும் குழந்தையை இளவரசனாக வளர்க்க தொடங்கினர்.

குழந்தைக்கு மகேந்திரன் எனும் பெயரையும் சூட்டினார்கள். மகேந்திரனும் அனைத்து கலைகளிலும் வல்லவனை வளர்ந்தான்.

அதுமட்டுமல்லாமல் விலங்குகள் பேசும் மொழியையும் தெரிந்துக்கொண்டான்.

ஆண்டுகள் ஓடின. இளமை பருவத்தை அடைந்த மகேந்திரன், ஒருநாள் அரசவைக்கு யானை மீது அமர்ந்து வீதி வழியாக ஊர் வளமாக சென்றான்.

அப்பொழுது தாசி வீட்டில் இருந்த இளவரசியான சந்திரவதி, மகேந்திரன் தன்னுடைய மகன் என்று அறியாமல், இளவரசனை பார்க்க வீதிக்கு வந்தாள்.

மகேந்திரன், தன்னுடைய கணவனான மகேசனது உருவில் இருப்பதை கண்டு வியந்துப்போனாள்.

இளைஞன்
இளைஞன்

மறுமுறையும் மகேந்திரனை உற்று பார்க்க, மகேந்திரன் சந்திரவதியை பார்த்தான்.

சந்திரவதிக்கு ஆண்டுகள் ஓடினாலும், தன்னுடைய இளமையானது குறையாமல் இளமையாகவே இருந்தாள்.

சந்திரவதியை பார்த்த மகேந்திரன், சந்திரவதிக்கு தன்மீது காதல் வந்துள்ளது. அதனால் தான் இவ்வாறு நடந்துக்கொள்கிறாள் என்று எண்ணினான்.

ஒருவழியாக அரண்மனைக்கு சென்ற மகேந்திரன், நடந்ததை தன்னுடைய நண்பனிடம் கூறி, தன்னுடைய தாய் என அறியாமல், அவளை அடைய வேண்டும் என எண்ணினான்.

அதனால் அவனிடம், ஆயிரம் பொற்காசுகள் கொடுத்து தாசியிடம், இன்றிரவு வருவதாக கூறு என்றான். அவனும் அவ்வாறே செய்தான்.

ஆயிரம் பொற்காசுகள் கிடைக்க பெற்ற தாசியோ, சந்திரவதியிடம் ஏதும் கூறாமல், அவளை அழகுப்படுத்தினாள்.

பொற்காசுகள்
பொற்காசுகள்

என்ன காரணம் என அறியாமல் சந்திரவதியும், தயாரானாள். அன்றிரவு மகேந்திரனும் தாசி வீட்டை நெருங்கினான்.

தாசியின் வீட்டின் வாசலில் இருட்டில் காராம்பசுவனது, கன்றுடன் படுத்து கிடந்தது. இதையறியாது கன்றை, மகேந்திரன் தாண்டினான்.

அதைக்கண்ட அந்த கன்று, தாயே! இந்த இளவரசன் என்னை தாண்டி செல்கிறான் என்றது.

அதற்கு அந்த பசுவானது, இவன் இதையும் செய்வான். இதற்கு மேலும் செய்வான்.

தன்னுடைய தாயை ஆசைநாயகியாக்க செல்கிறான் அல்லவா! அதனால் அவசரத்தில் அப்படி தான் இருப்பான் என்றது.

விலங்குகள் பேசும் மொழி தெரிந்த மகேந்திரன், உள்ளே இருப்பது தன்னுடைய தாய் என்று அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்தான்.

பசு கூறியது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை என்ற சந்தேகத்துடன் உள்ளே சென்றான்.

பசு
பசு

தாசி அவனிடம் சந்திரவதியை அனுப்பி வைக்க, இந்த தாசி இவ்வளவு நாட்கள், இதற்கு தான் நம்மை பாதுகாத்து வந்தாலோ! என நொந்துக்கொண்டே, இளவரசனுக்கு அறிவுரை வழங்கலாம் என எண்ணி உள்ளே சென்றாள்.

தன்னுடைய தாய் தான் என்று எண்ணிக்கொண்டு இருந்த மகேந்திரன் சந்திரவதியை பார்த்தான்.

அப்பொழுது சந்திரவதியின் தனங்களில் இருந்து பால் சுரந்து மகேந்திரன் முகத்தில் அடித்தது.

இதைக்கண்ட மகேந்திரன், இவள் கண்டிப்பாக தன்னுடைய தாயாக இருக்க வேண்டும் என வணங்கி, தாயே! என்னை மன்னித்து கொள்ளுங்கள்.

நான் தவறு செய்துவிட்டேன் என கூறினான். மகேந்திரன், தாய்! என கூறியதும், சந்திரவதிக்கு கண்ணீர் கடலாக வடிந்தது.

மகேந்திரன், ஏதும் கூறாமல் அங்கிருந்து சென்றான். இதைக்கண்ட தாசி, சந்திரவதியிடம் விசாரித்தாள்.

அதற்கு சந்திரவதி, மகேந்திரன் என்னை பார்க்க அவனுடைய தாய்ப்போல இருப்பதாக கூறினான் என்றாள்.

தாயும், குழந்தையும்
தாயும், குழந்தையும்

இதைக்கேட்ட தாசி, தனக்கு ஆயிரம் பொன் கிடைத்ததை எண்ணியும், சந்திரவதி, இளவரசனின் தாய் போல இருப்பதால் ஏதேனும் பயன் கிடைக்கும் என எண்ணியும் மகிழ்ந்தாள்.

அரண்மனைக்கு சென்ற இளவரசன், நடந்ததை எண்ணி துயரத்தில் அழுதான்.

தன்னுடைய தாயை தவறாக எண்ணிவிட்டோம் என நொந்து இரவெல்லாம் அழுதுக்கொண்டு இருந்தான்.

பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும், மகேந்திரன் வராததை எண்ணி மன்னன், மகேந்திரன் அறைக்கு சென்றார்.

அப்பொழது மகேந்திரனது முகத்தை கண்டு காரணத்தை விசாரித்தான்.

அதற்கு பதில் ஏதும் கூறாமல், தன்னை பற்றிய உண்மையை கேட்க, மன்னன் கூறாமல் நின்றான்.

அதற்கு மகேந்திரன், தன்னுடைய உயிரை விட துணிய, மன்னனும் தன்னுடைய மகனான மகேசன் காணாமல் போனது முதல், காளி கோவிலில் இருந்து கிடைத்தது வரையென அனைத்து உண்மையையும் கூறினான்.

கோவில்
கோவில்

இதைக்கேட்ட மகேந்திரன், நேற்றிரவு நடந்ததை கூற, மன்னன் தாசியை அழைத்து விசாரித்தால் அனைத்தும் தெரியுமென எண்ணி காவலர்கள் மூலமாக தாசியை அரண்மனைக்கு அழைத்து வந்தான்.

அரண்மனைக்கு வந்த தாசியுடன், சந்திரவதி மற்றும் மருத்துவம் பார்க்கும் பெண் என அனைவரும் வந்து சேர்ந்தனர்.

சந்திரவ்தியை பார்த்த மன்னன், தன்னுடைய மருமகள் என்று அறிந்துக்கொண்டான். ஆனால், ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

சந்திரவாதியும் அமைதியாக இருந்தாள். மன்னன், தாசியை மிரட்டி, நடந்ததை கேட்க, அவளும் சந்திரவதி கிடைத்தது முதல், குழந்தையை கொல்ல கொடுத்தது வரை அனைத்து உண்மையையும் கூறினாள்.

மருத்துவம் பார்க்கும் பெண்ணும், பாம்பு புற்றிற்கு அருகில் குழந்தையை வைத்தது முதல் அனைத்தையும் கூறினாள்.

மன்னனுக்கு, இதற்கு மேல் எந்த உண்மையையும் அறிந்துக்கொள்ள இயலவில்லை.

பாம்பு புற்றிற்கு அருகில் விட்ட குழந்தையும், காளி கோவிலில் இருந்து எடுத்த குழந்தையும் ஒன்ற என்பதை காளி அம்மன் தான் கூற வேண்டும் என்று அனைவரும் காளி கோவிலுக்கு சென்றனர்.

அனைவரும் மனமுருகி காளியம்மனை வணங்கி நிற்க, காளியம்மனும் காட்சியளித்தாள்.

தொடரும்...

Post a Comment

0 Comments