முழுநிலவு |
கதையின் தொடர்ச்சி...
இளவரசியின் தந்தை, 56 தேசங்களை சேர்ந்த இளவரசர்கள் இருக்கும் பொழுது, ஒரு சாதாரண இரத்தின வியாபாரியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன? எனக் கேட்டான்.
இதைக்கேட்ட இளவரசி, தந்தையே! எனது மனதிற்கு பிடித்த மணவாளனை தேர்ந்தெடுத்துள்ளேன். இவர் கண்டிப்பாக மிகசிறந்த மாவீரனாக தான் இருக்க இயலும் என்றாள்.
மன்னனும், இளவரசி செல்லமகளாக வளர்ந்தவள் என்பதால், அவளது விருப்பம் போல திருமணத்தை நடத்த முடிவு எடுத்தான்.
இளவரசி, சாதாரண இரத்தின வியாபாரியை தேர்ந்தெடுத்தால் என எண்ணி அனைவரும் சோகமாக இருந்தனர். இதனால் இளவரசியும் சோகமாக இருந்தாள்.
இதைப்பார்த்த விக்ரமாதித்யன், அனைவரையும் சந்தோஷப்படுத்த எண்ணினான்.
அதனால் அமைதியாக இருந்த சூழலை மாற்றுவதற்க்காக ஒரு திட்டம் தீட்டினான்.
வேதாளத்தை அங்கிருந்த திரைசீலையில் நுழைய செய்தான். பின்னர் திரைசீலையை பார்த்து, ஏ திரைசீலையே! இங்கு யாரும் பேசுவதாக தெரியவில்லை.
திரைசீலை |
ஆகையால், நீயாவது ஒரு கதை சொல் என கேட்டார். உடனே, திரைசீலையில் இருந்த வேதாளம், கதை சொல்ல தொடங்கியது.
திரைசீலை கதை சொல்வதாக எண்ணி அங்கிருந்த அனைவரும் வியப்பில் ஆழ்ந்துப்போயினர்.
வல்லநாட்டை குணசேகரன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மனைவிமார்கள் இருந்தும், ஒரு குழந்தைக்கூட இல்லை.
இதனால் மனமுடைந்த மன்னன், குழந்தை வரம் வேண்டி ஈசனை எண்ணி தவம் இருந்தான்.
அவனது தவத்திற்கு இணங்கி, ஈசனும் அழகிய ஆண்மகன் பிறப்பான் என வரம் கொடுத்தார்.
ஈசன் வரம் கொடுத்ததைப் போல அழகான ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.
மன்னன் குணசேகரன், அந்த குழந்தைக்கு மகேசன் என்னும் பெயர் சூட்டினான்.
ஆண் குழந்தை |
குழந்தை பருவத்தில், அனைத்து விதமான கலைகளையும் கற்று தேர்ந்தான்.
சிறுவயதில் அனைத்து கலைகளையும் கற்று தேர்ந்ததால், அந்த நாட்டு மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் வியந்து போயினர்.
மகேசனுக்கு திருமண வயது நெருங்கியதால், மன்னன் குணசேகரன் வரன் பார்க்க மந்திரியை அனுப்பி வைத்தான்.
இதே சமயத்தில், அங்கிருந்து பதினாறு மைல் தொலைவில் மகேந்திரபுரி என்னும் நாட்டை சோழவழவன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.
அவனுக்கு இருப்பதினாறு மனைவிமார்கள் இருந்தும் குழந்தை இல்லாததால் மனமுடைந்து போனான்.
குழந்தை வரம் வேண்டி பார்வதி தாயை எண்ணி பெரும் யாகம் புரிந்தான். ஏராளமான பொன்னையும், பொருளையும் தனமாக கொடுத்தான்.
இதன் விளைவாக பார்வதி தாயும், அழகிய பெண் குழந்தை பிறக்கும் என வரம் கொடுத்தாள்.
பார்வதி தாய் கொடுத்த வரத்தின் படியே, அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
பெண் குழந்தை |
அந்த பெண்குழந்தைக்கு சந்திரவதி என்னும் பெயரை சூட்டி வளர்த்து வந்தான்.
சந்திரவதியும், அனைத்து கலைகளையும், தன்னுடைய சிறு வயதில் கற்று, மிக பெரும் கல்விமானாக வளர்ந்து வந்தாள்.
சந்திரவதிக்கு திருமண வயது வந்ததால், சோழவழவன் மந்திரியை அழைத்து, வரன் தேடி சொன்னான். மந்திரியும் வரன் தேடி சென்றான்.
அப்பொழுது, ஒரு மரத்தின் அடியில் இளைப்பாற தொடங்கினான்.
அந்த சமயம், அங்கு இளைப்பாறிக் கொண்டிருந்த வல்லநாட்டின் அமைச்சரை சந்தித்தான்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, தாங்கள் மேற்கொண்டிருந்த பணியை கூறினார்.
அப்பொழுது இருவரும், இளவரசன் மற்றும் இளவரசியின் ஓவியத்தை பார்த்து, இருவருக்கும் அனைத்து பொருத்தங்களும் இருப்பதாய் கருதினர்.
பின்னர் இருநாட்டு மன்னர்களுக்கும் செய்தி அனுப்பினார். இளவரசனும், இளவரசியும் பார்த்த மறுகணம் காதலில் விழுந்தனர்.
காதல் |
பின்னர் இருவருக்கும் திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது. இருவருக்கும் ஏழடுக்கு மாளிகை ஒன்றை பரிசாக குணசேகரன் அளித்தான்.
அந்த மாளிகையில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டு இருந்தனர்.
ஒருநாள், இருவரும் மாளிகையின் மாடியில் படுத்து நிலவொளியை ரசித்துக்கொண்டு இருந்தனர்.
அவ்வாறாக இருவரும் துயில் கொண்டனர். அப்பொழுது வானத்தில் சென்றுக்கொண்டிருந்த ஏழு தெய்வ கன்னிமார்கள், இளவரசனை பார்த்தனர்.
அவனது அழகைக்கண்டு, அவனை தங்களுடைய இடத்திற்கு தூக்கி சென்றனர்.
காலையில் கண்விழித்து பார்த்த இளவரசி, கணவனை காணாது துயருற்றாள்.
கணவன் காணாததை, மாமனார் மற்றும் மாமியாரிடம் தெரிவிக்க, இளவரசனை நாடும் முழுவதும் தேடியலைந்தனர்.
எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால், இளவரசி மிகவும் வேதனையடைந்தாள் என திரைசீலை கதையை முடித்தது.
கவலைக்கொண்ட பெண் |
இரத்தினவியாபாரி உருவில் இருந்த விக்ரமாதித்யன், ஏன் இத்துடன் கதையை முடித்து விட்டாய், பிறகு நடந்தது என்ன? என்பதை கூறு என்றான்.
திரைசீலையானது, எனக்கு இவ்வளவு தான் தெரியும் என்றது. உடனே அங்கு கூடியிருந்த அனைவரும், பிறகு என்ன நடந்தது என்பதை கூறு என்றனர்.
இளவரசியும், மன்னனும் விக்ரமாதித்யனை பார்த்து, பிறகு நடந்தததையும் கூற சொல்லுங்கள் என்றனர்.
உடனே விக்ரமாதித்யன், திரைசீலையை பார்த்து மீண்டும் கேட்க, அந்த திரைசீலையானது, அருகில் உள்ள சரவிளக்கிடம் கேளுங்கள்.
அதற்கு தான் தெரியும் என்றது. விக்ரமாதித்யன் சரவிளக்கிடம் கேட்க, திரைசீலையில் இருந்த வேதாளம் சரவிளக்கிள் நுழைந்து கதையை கூறத்தொடங்கியது.
சரவிளக்கு பேசுவதை கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
தொடரும்...
0 Comments