Ticker

6/recent/ticker-posts

மணம் வீசும் பெண்ணும், மன்னனும் | விக்ரமாதித்தன் கதைகள்

இளவரசி
இளவரசி

கதையின் தொடர்ச்சி,

இதுநாள் வரை நடந்தது அனைத்தையும் பட்டியிடம் விக்ரமாதித்யன் கூறினான். பட்டியும் அண்ணனது திறமைகளை கண்டு மகிழ்ந்தான்.

நாடாறு மாதங்கள் ஓடின. விக்ரமாதித்யனும், பட்டியும் நாட்டை துறந்து காடாறு காலம் செல்வது என முடிவு எடுத்தனர்.

அன்று காலை, தங்களுடைய குலதெய்வமான பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று வணங்கிய பின்னர், தங்களுடைய பயணத்தை தொடர்ந்தனர்.

விக்ரமாதித்யன், பட்டி மற்றும் வேதாளம் என மூவரும் கால் போன போக்கில் நடந்துக்கொண்டு இருந்தனர்.

அப்பொழுது, ஒரு குளத்தில் எண்ணற்ற தாமரை மலர்கள் பூத்திருந்தன. அந்த மலர்களை இரசித்துக்கொண்டே மூவரும் கடந்தனர்.

அப்பொழுது அந்த குளத்திற்கு அருகில், ஒரு சத்திரம் இருப்பதை பார்த்த பட்டி, அங்கு சென்று ஒய்வு எடுக்கலாம் என கூறினான்.

தாமரைக்குளம்
தாமரைக்குளம்

அதைக்கேட்டு விக்ரமாதித்யனும் சரி என்று கூற, மூவரும் அங்கு சென்று ஒய்வு எடுத்தனர்.

அப்பொழுது காற்றில் செண்பகப்பூவின் மணமானது வந்தது. இதைக்கண்ட விக்ரமாதித்யனும், பட்டியும் இந்த மணம் எங்கிருந்து வருகிறது என யோசிக்க தொடங்கினர்.

அப்பொழுது விக்ரமாதித்யன் பட்டியிடம், தம்பி! இந்த செண்பகப்பூவின் மணம் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை.

ஆகையால் அருகில் ஏதேனும் நந்தவனம் உள்ளதா? என பார்த்து வா எனக்கூறினான்.

இதைக்கேட்ட பட்டியும், நாலாபுறமும் தேடியலைந்து, விக்ரமாதித்யனிடம், அண்ணா! இங்கு எந்தவொரு நந்தவனமும் இல்லை என்று கூறினான்.

இதைக்கேட்ட விக்ரமாதித்யன், செண்பகப்பூவின் மணம் எங்கிருந்து வருகிறது என தெரியாமல் குழம்பினான்.

அப்பொழுது தெருவில் இருவர் நடந்து வருவதை கண்ட பட்டி, அவர்களிடம் செண்பகப்பூவின் மணத்தைப் பற்றி விசாரித்தான்.

செண்பகப்பூ
செண்பகப்பூ

அதற்கு அவர்கள், நாங்கள் கட்டாயமாக சொல்கிறோம். இப்பொழுது நீங்கள் தங்கியிருக்கும் சத்திரத்தை விட்டு முதலில் வெளியில் வாருங்கள்.

அங்கு ஆண்கள் யாரும் செல்லக்கூடாது என்று கூறினார்கள். இதைக்கேட்ட பட்டியும், விக்ரமாதித்யனும் சத்திரத்தை விட்டு வெளியேறினார்கள்.

பின்னர் அவர்கள் காரணத்தை கேட்ட, அந்த வழிப்போக்கர்கள் காரணத்தை கூற தொடங்கினார்கள்.

இந்த நாட்டை ஆள்கின்ற மன்னனின் பெயர் விக்ரமசிங்கன். அவனுக்கு அழகே வடிவமான ஒரு பெண் பிறந்தாள். அவளுடைய பெயர் செண்பகவல்லி.

அவள் பிறக்கும் பொழுதே செண்பகப்பூவின் மணமானது, அவளிடமிருந்து வெளிப்பட்டு கொண்டிருந்தது.

ஆகையால் அவளுக்கு செண்பகவல்லி என்ற பெயரை மன்னன் சூட்டினான் என்றார்கள்.

அந்த செண்பகவல்லி, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஆண்வாடை இல்லாமல் வாழப்போவதாக சபதம் எடுத்து உள்ளாள்.

அழகிய பெண்
அழகிய பெண்

அவள் ஒவ்வொரு வாரமும், வெள்ளிக்கிழமை இந்த சத்திரத்திற்கு வந்து, குளத்தில் குளித்து விட்டு தங்கி செல்வது வழக்கம் என்றார்கள்.

அவள் வருவதற்கு முன்பும், செல்வதற்கு முன்பும் முரசு கொட்டி செல்வார்கள். அந்த சமயத்தில் ஆண்கள் வெளியில் வரக்கூடாது.

ஆண்களை வெறுத்து தனக்கென தனி மாளிகை அமைத்து, அதில் வசித்து வருகிறாள்.

அவளது பக்கம் யாரேனும் ஆண்கள் வந்தால் அவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்படும்.

நாளை வெள்ளிக்கிழமை என்பதால் இன்றே காவல் ஆனது அதிகமாக இருக்கும்.

ஆகையால் தான், உங்களை அங்கு தங்கியிருக்க வேண்டாம் என்றேன் என்றார்கள்.

இதைக்கேட்டு ஆச்சரியத்தில் பட்டியும், விக்ரமாதித்யனும் உறைந்தனர்.

பின்னர் விக்ரமாதித்யன், பட்டியிடம், அவளது சருமத்தில் இருந்து வரும் மணமே இப்படி என்றால், அவள் கண்டிப்பாக பேரழகு கொண்டவளாக தான் இருப்பாள்.

எப்படியாவது அவளை, நான் மணக்க வேண்டும் என்று விக்ரமாதித்யன் கூறினான். இதைக்கேட்ட பட்டியும், அதற்கு சம்மதம் தெரிவித்தான்.

திருமணம்
திருமணம்

பின்னர் விக்ரமாதித்யனை பார்த்து, அண்ணா! எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பு கட்டாயம் ஒரு திட்டம் தீட்டி செய்ய வேண்டும்.

ஒரு அரசகுமாரி இவ்வாறு ஒரு சபதம் மேற்கொண்டு உள்ளாள் எனில் ஏதேனும் காரணம் கட்டாயமாக இருக்கும்.

ஆகையால், முதலில் அதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றான்.

விக்ரமாதித்யனுக்கு, தன்னுடைய தம்பியின் அறிவு திறமைகளை பற்றி நன்கு தெரியும். அதனால் அவள் சொற்படியே கேட்டு கொண்டான்.

பட்டி ஒரு திட்டம் தீட்டினான். வேதாளத்தின் உதவியால், தான் பெண் வேடமும், விக்ரமாதித்யனை முதியவர் வேடமும் தரிக்க செய்தான்.

பட்டி, விக்ரமாதித்யனை அரண்மனைக்கு அருகில் இருக்க சொல்லிவிட்டு, செண்பகவல்லியின் இரகசியத்தை தெரிந்துக்கொண்டு வருகின்றேன் என்றுக்கூறி புறப்பட்டான்.

செண்பகவல்லி, மேளதாளங்கள் முழங்க, அந்த தாமரை குளத்தில் குளித்துவிட்டு, சத்திரத்தில் ஒய்வு எடுக்க தொடங்கினாள்.

தாமரை குளம்
தாமரை குளம்

பட்டி, பெண்வேடத்தில் செண்பகவல்லியின் பணிப்பெண்களை போல சேர்ந்துக்கொண்டான்.

செண்பகவல்லி ஒய்வு எடுத்த பின்னர், மீண்டும் அரண்மனைக்கு திரும்ப, அவர்களுடன் பட்டியும் சென்றான்.

செண்பகவல்லியுடன் வந்த பணிப்பெண்கள் ஒவ்வொரு வாயிலிலும் சிலர் நின்றுவிட, இறுதி வரை சென்றால் மாட்டிக்கொள்வோம் என எண்ணி பட்டி திரும்பினான்.

அண்ணனை, எடுத்த காரியத்தை முடிக்காமல் பார்க்க கூடாது என எண்ணி காளியம்மன் கோவிலுக்கு சென்றான்.

வெயிலில் திரிந்து வந்ததால், ஒரு குளத்தில் நீர், அருந்தி விட்டு தன்னுடைய பெண் வேடத்தை கலைந்து விட்டு, அருகில் இருந்த மரத்தின் நிழலில் சற்று ஒய்வு எடுக்க தொடங்கினான்.

அந்த குளத்திற்கு அருகில் ஒரு முனிவர், அவருடைய மனைவி உடன் வசித்து கொண்டிருந்தார்.

குளம்
குளம்

அந்த முனிவர் குளத்திற்கு குளிக்க வர, பட்டியின் அழகை கண்டு வியந்து போனார்.

பின்னர், தன்னுடைய மனைவி பட்டியை பார்த்து, அவனது அழகில் மயங்கிவிடுவாள் என எண்ணி, அருகில் இருந்த ஒரு வேரை எடுத்து ஒரு மந்திரம் கூறி, பட்டியை பெண்ணாக மாற்றி விட்டார்.

பட்டி முனிவர் செய்ததை, உறக்கத்தில் நன்கு கவனித்து கொண்டிருந்தான்.

சற்றுநேரம் கழித்து, குளத்தில் குளிக்க முனிவரது மனைவி வர, பெண் உருவில் இருந்த பட்டியை பார்த்து, இவளது அழகில் தன்னுடைய கணவர் மயங்கி விட கூடும் என்று எண்ணினாள்.

பின்னர், அருகில் இருந்த ஒரு வேரை எடுத்து ஒரு மந்திரம் கூறி, மீண்டும் பட்டியை ஆணாக மாற்றி விட்டாள்.

இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த பட்டி, அந்த வேர்களை எடுத்துக்கொண்டு விக்ரமாதித்யனை பார்க்க புறப்பட்டு சென்றான்.

தொடரும்...

Post a Comment

0 Comments