பறவைகள் |
செண்பகவல்லியும் கதையை தொடர்ந்தாள். விந்தியவர்மனின் மடிமீது தலைவைத்து தூங்கிக்கொண்டு இருந்த முனிவர், ஒருவழியாக கண்விழித்தார்.
முனிவர் கண்விழித்ததை கண்ட விந்தியவர்மன், பயத்தில் நடுங்கிக்கொண்டே நின்றான்.
அவனைக்கண்ட முனிவர், யார் நீ? அந்த பெண் எங்கே? அவளை என்ன செய்தாய்? என கோபத்துடன் கேட்டார்.
விந்தியவர்மனும், நடந்ததை ஒன்று விடாமல் முனிவரிடம் கூறி முடித்தான்.
விந்தியவர்மனின் நிலையை கண்டு, தனக்காக இவன் செய்யவில்லை என்று முடிவுக்கு வந்தார்.
பின்னர் விந்தியவர்மனிடன் அமைதியாக பேசினார். தன்னுடைய நண்பனை ஆபத்தில் விட்டு செல்வது உண்மையான நட்பல்ல.
உண்மையான நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறேன் கேள் என்று சொல்ல தொடங்கினார்.
வேதகிரி என்னும் நாட்டை மௌசிகன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு அழகான ஒரு ஆண் மகன் இருந்தான்.
அவனுடைய பெயர் விமலன். அந்த நாட்டை ஆண்டு வந்த மன்னனின் சபையில் நந்தசேகரன் என்னும் அமைச்சர் இருந்தான்.
நண்பர்கள் |
அவனுக்கு தனஜெயன் என்றொரு அழகான ஆண்மகன் இருந்தான். விமலனும், தனஜெயனும் சிறுவயது முதல் மிக சிறந்த நண்பர்களாக இருந்து வந்தனர்.
இருவரும் அனைத்து விதமான கலைகளிலும் தேர்ச்சி பெற்று சிறந்த வீரர்களாக இருந்து வந்தனர்.
விமலன், அதிசுந்தரி என்னும் அரசகுமாரியை திருமணம் செய்துக்கொண்டான். தனஜெயன், கலிங்க நாட்டின் அமைச்சர் மகளை மணந்துக்கொண்டான்.
இருவரும் திருமணம் செய்துக்கொண்டாலும், அவரவர் வீட்டிலேயே வசித்து வந்தனர்.
திருமணம் ஆகி பல நாட்கள் ஆகியும், இருவரும் அவர்களுடைய மனைவியை பிரிந்து இருப்பது சரியல்ல என முடிவு செய்தனர்.
பின்னர் இருவரும், அவரவர் மனைவியை பார்க்க புறப்பட்டு சென்றுக்கொண்டு இருந்தனர்.
இளவரசன் முன்னே செல்ல, அவனுக்கு பின்னே தனஜெயன் குதிரையில் சென்றுக்கொண்டு இருந்தான்.
அப்பொழுது வழியில் இருந்த மரத்தில் இருந்த இரண்டு பறவைகள் பேசிக்கொண்டு இருந்தன.
பறவைகள் |
அதில் ஒரு பறவை, இன்னொரு பறவையை பார்த்து, இங்கு செல்லும் இருவரில், முதலில் செல்பவன் இறக்க போகிறான் எனறது.
தனஜெயனுக்கு பறவை பேசும் மொழி தெரியும் என்பதால், பறவைகள் பேசுவதை கேட்டு அதிர்ச்சியடைந்தான்.
இளவரசனுக்கு பறவைகள் மொழி தெரியாததால் அமைதியாக சென்றுக்கொண்டு இருந்தான்.
தனஜெயன், பறவைகள் சொன்னதை பலிக்க விடக்கூடாது என முடிவு செய்து, இளவரசனை முந்தி சென்றான்.
இளவரசனும், நண்பன் என்று அமைதிக்காக குதிரையில் வந்துக்கொண்டு இருந்தான்.
தனஜெயன், தன்னுடைய மனைவியை பார்க்க செல்லாமல், இளவரசனுடன் வருவதாக கூறினான்.
இளவரசனும் சரியென கூற, தனஜெயனும் இளவரசன் உடன் சென்றான். இளவரசன் ஆன விமலனை அழைக்க மன்னன் பல்லக்கை அனுப்பினான்.
விமலனுக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என எண்ணி, அவன் ஏற வேண்டிய பல்லக்கில் தனஜெயன் ஏறிக்கொண்டான்.
விமலனும், தனஜெயன் எது செய்தலும், அமைதியாகவே இருந்தான். விமலனுக்கும், தனஜெயனுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
தனஜெயன், விமலனுக்கான அறையை எடுத்துக்கொண்டான். விமலனும், தனஜெயனுக்கான அறையை எடுத்துக்கொண்டான்.
தனஜெயன், பறவைகள் கூறியது 24 மணிநேரத்தில் நடந்துவிடும் என பயந்து இளவரசனை காத்துக்கொண்டு இருந்தான்.
Sleeping Man |
ஆகையால், இளவரசனது அறையில் மறைந்து காவலுக்கு நின்றான். இரவு உணவு வரும் பொழுது, இளவரசன் தூங்கியதால், இளவரசனது மனைவி அங்கிருந்து புறப்பட்டு வெளியில் சென்றாள்.
இதைக்கண்ட தனஞ்செயனும், அவளுக்கு பின்னால் சென்றான். அவள் ஊர் எல்லையில் உள்ள ஒருவனை சந்தித்து பேசினாள்.
தனஜெயன் மறைந்து நின்று கவனித்தான். அப்பொழுது, அவள் அவனிடம் தன்னுடைய கணவன் வந்துவிட்டான்.
அதனால், சிறிது நேரமானது. மன்னியுங்கள் என்றாள். இதைக்கேட்ட அவன், உனக்கு திருமணம் ஆகிவிட்டதா? அப்படியெனில், இனி இங்கு வராதே என்றாள்.
அப்பொழுது அவள், மன்னித்து விடுங்கள். உங்களை பார்க்காமல் என்னால் இருக்க இயலாது என்று அழுதாள்.
அதற்கு அவன் அப்படியென்றால், நான் சொல்வதை செய் என்று கூறி, ஒரு வாளை எடுத்துக்கொடுத்து, உன்னுடைய கணவனது தலையை வெட்டிவிடு என்றான்.
அவளும், அவன் கொடுத்த வாளுடன் புறப்பட்டு சென்றான். தனஜெயன் இருட்டில் தடுமாறி செல்வதற்குள், விமலனுடைய தலையை வெட்டிவிட்டாள்.
இதைக்கண்ட தனஜெயன், கொடுமைக்காரியே! அவன் சொன்னபடியே எனது நண்பனை கொன்று விட்டாயே என்று வாளை ஓங்கினான்.
தனஜெயனுக்கு உண்மை தெரிந்துவிட்டது எனக்கருதி, அவள் கொலை, கொலை என்று கத்த தொடங்கினாள்.
அனைவரும் வருவதற்குள் தலைவிரி கோலமாக மாறிவிட்டாள். இதை சற்றும் எதிர்பார்க்காத தனஜெயனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
காவலர்கள், தனஜெயனை பிடித்து அரசவைக்கு இழுத்து சென்றனர். அரசன், என்ன செய்வது என தெரியாமல், தனது மந்திரிகளிடம் ஒப்படைக்க கூறினான்.
காவலர்கள் |
அவர்களும், அவ்வாறே செய்தனர். தனஜெயன் வந்தது முதல் செய்த அனைத்தையும் கூறினார்கள்.
இளவரசனின் வசதிகளை அடைய எண்ணியே இவ்வாறு செய்தான் என குற்றம் சாட்டினார்கள்.
முதல் மந்திரி, தனஜெயனிடம் விசாரிக்க, சிறிதும் பதற்றமின்றி நடந்த அனைத்தையும் கூறினான்.
முதல் மந்திரி இரண்டாவது மந்தியிடம் அனுப்பி வைத்தார். அவரும் விசாரித்து மற்ற மந்திரிகளிடம் அனுப்பி வைத்தார்.
இவ்வாறாக நான்கு மந்திரிகளும், நடந்தது அனைத்தையும் விசாரித்து முடித்தனர்.
இந்த நான்கு மந்திரிகளும் ஒரே முடிவையே எடுத்தனர். அது தனஜெயன் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதே.
அப்பொழுது தனஜெயன், அவர்களிடம் விமலனுடைய உடலை, அவர்களது பெற்றோர் வரும்வரை பத்திரப்படுத்தி வைக்க கூறினான்.
அவர்களும் சம்மதம் தெரிவித்து, ஒரு மிருகத்தை கொன்று தனஜெயனுக்கு மரணதண்டனை கொடுத்துவிட்டதாக பொய் கூறினார்கள்.
தன்னுடைய இரகசியத்தை தெரிந்துக்கொண்ட ஒருவனும் இறந்துவிட்டான் என சந்தோஷத்தில், அந்த கொலைக்காரி குதித்தாள்.
நான்கு மந்திரிகளும், அவளுக்கு தெரியாமல் கண்காணிக்க தொடங்கினார்கள்.
அன்று இரவே! தன்னை அழகுப்படுத்தி கொண்டு, சிறிதும் வருத்தமின்றி அங்கிருந்து மறைந்து சென்றுக்கொண்டு இருப்பதை கண்டனர்.
அலங்கரித்தல் |
மந்திரிகள், சில காவலர்களுடன் அவளை பின்தொடர்ந்து சென்றனர். அப்பொழுது, அவள் அவனுடைய கள்ளக்காதலனை சந்தித்து அனைத்தையும் கூறனாள்.
இதைக்கேட்ட மந்திரியும், காவலர்களும் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அரசவைக்கு சென்று மன்னனிடம் ஒப்படைத்தனர். மன்னனிடம் நடந்தது அனைத்தையும் கூறினார்கள்.
மன்னனும், தன்னுடைய மகள் என்றும் பாராமல், அவளுக்கும், அவளுடைய கள்ளகாதலனுக்கும் மரணதண்டனை விதித்தான்.
மன்னனின் ஆணையும் நிறைவேறியது என்று வேடனான விந்தியவர்மனிடம் முனிவர் கூறினார் என செண்பகவல்லி விக்ரமவல்லியிடம் கூறினாள்.
இதைக்கேட்ட விக்கிரமவல்லி, இந்தக்கதையிலும் பாக்கி உள்ளதே. மந்திரியின் மகன் என்னவானான்? இளவரசனின் பிணம் என்னவானது? என கூறவில்லையே? என்றாள்.
இதைக்கேட்ட செண்பகவல்லி, இதே கேள்விகளையே, விந்தியவர்மனும், முனிவரிடம் கேட்டான் என்று கதையை தொடர்ந்தாள்.
0 Comments