Ticker

6/recent/ticker-posts

செண்பகவல்லியை மணந்த விக்ரமாதித்தன் | விக்ரமாதித்தன் கதைகள்

புறா
புறா

கதையின் தொடர்ச்சி,

விக்ரமாதித்தன், செண்பகவல்லியை மணக்க, பட்டி திட்டம் ஒன்றை தீட்டினான்.

அதன்படி, மாயாஜாலம் செய்யும் கூத்தாடி வேடம் போட்டு, விக்ரமாதித்தனை ஒரு இடத்தில் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு வேதாளத்துடன் அரண்மனையை நோக்கி புறப்பட்டு சென்றான்.

அரண்மனைக்கு எதிர்புறம் உள்ள வீதியில், மக்கள் இதுவரை பார்க்காத வண்ணம் வானவேடிக்கை, பல மாயாஜாலங்களை வேதாளத்தின் உதவியுடன் செய்துக்காட்டினான்.

இதைக்கண்ட மக்கள், ஆச்சரியத்தில் வியந்துபோயினர். இந்த விஷயம் அரண்மனைக்கு தெரியவர, பட்டி அரண்மனை அழைக்கப்பட்டான்.

பட்டி , மன்னன் மற்றும் செண்பகவல்லியின் முன்பு ஏராளமான மாயாஜாலங்களை செய்தான்.

இதைக்கண்ட மன்னன், ஆச்சரியத்தில் வியந்து போனான். பின்னர் பட்டிக்கு ஏராளமான பொற்காசுகளை பரிசாக கொடுத்தான்.

மாயாஜாலம்
மாயாஜாலம்

பின்னர், இதுபோல மாயாஜாலங்களை இதுவரையில் நாங்கள் பார்த்தது இல்லை. இந்த உலகத்தில் மிகசிறந்த மாயாஜாலங்களை உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்று பட்டியை புகழ்ந்தான்.

இதைக்கேட்ட பட்டி, மன்னா! என்னை விடவும் மிக சிறந்த மாயாஜாலங்களை செய்யக்கூடிய ஒருவர், இருக்கிறார். அவர் தான் எனக்கு இவைகளை கற்று கொடுத்தார்.

நான் அவருடைய சீடன் மட்டுமே. அவர் அளவுக்கு வல்லமை என்னிடம் இல்லை என்றான்.

இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த மன்னன். உன்னுடைய குருவை நான் பார்க்கலாமா? என்றார்.

இதைக்கேட்ட பட்டி, மன்னா! என்னுடைய குரு ஆனவர், பெண்களை வாழ்ந்து வருகிறார். பெண்களை பார்க்க கூட விரும்ப மாட்டார்.

ஆகையால், அவர் வருவது கடினம். நீங்கள் விருப்பப்பட்டால் என்னுடன் வாருங்கள் அழைத்து செல்கிறேன் என்றான்.

வானவேடிக்கை
வானவேடிக்கை


மன்னன், தன்னுடைய மகள் ஆண்களை வெறுத்து வாழ்வதை போல, பெண்களை வெறுத்து வாழும் ஒரு ஆண் இருக்கிறானா? கட்டாயம் பார்க்க வேண்டும் என கூறினான்.

மறுநாள், மன்னன் பட்டி கூறிய இடத்திற்கு செண்பகவல்லி, மற்றும் அமைச்சர்கள் என ஏராளமான நபர்களை அழைத்துக்கொண்டு சென்றான்.

விக்ரமாதித்தன், மாயாஜாலங்கள் புரிவது போல வேடம் தரித்து மன்னனை வரவேற்றான்.

விக்ரமாதித்தன், வேதாளத்தின் உதவியுடன் மன்னன் மற்றும் செண்பகவல்லி அமர்வதற்கும், அமைச்சர்கள் அமர்வதற்கும் மேடைகளை உருவாக்கி வைத்திருந்தான்.

அதில் அனைவரும் அமர்ந்து இருந்தனர். அந்த சமயத்தில் விக்ரமாதித்தன் மாயாஜாலங்களை புரிய தொடங்கினான்.

இதைக்கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் மெய்மறந்து போயினர். மன்னன், மாயாஜாலம் புரிபவர் வேடத்தில் இருக்கும் விக்ரமாதித்தனை புகழ்ந்தார்.

பின்னர், விக்ரமாதித்தனை பார்த்து பெண்களை வெறுப்பதற்கான காரணத்தை கேட்டார்.

புறாக்கள்
புறாக்கள்

விக்ரமாதித்தன் சொல்ல தொடங்கினான். முன் ஜென்மத்தில் இளங்காவனத்தில் நான் புறவாக வாழ்ந்து வந்தேன்.

அப்பொழுது என்னுடைய பெயர் சல்லியன் என்றும், என்னுடைய மனைவி பெயர் சல்லரி என்றும் கூறினான்.

இதைக்கேட்ட அனைவரும் ஆச்சரியத்தில் திகைத்தனர். ஆனால் செண்பகவல்லி பேரதிர்ச்சியில் இருந்தாள்.

விக்ரமாதித்தன் தொடர்ந்தான். நீண்ட காலமாக குழந்தை இல்லாத எங்களுக்கு இளங்காதேவியின் அருளால் முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொரித்தது.

பின்னர், நானும் சல்லரியும் இரை தேட சென்ற பொழுது, காட்டுத்தீயில் எங்களுடைய குஞ்சுகள் இறந்தன.

இதனால், நானும் சல்லரியும் தீயில் விழுந்து இறக்க முடிவு செய்தோம். ஆனால் என்னுடைய மனைவி சல்லரி என்னை ஏமாற்றிவிட்டால் என்றான்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த செண்பகவல்லி, இவன் சொல்வது அனைத்தும் பொய் என்று கத்தினாள்.

பின்னர், இவன் கூறியது அனைத்தும் பொய், பெண் புறா தான் தீயில் விழுந்து இறந்தது. ஆண் புறா, பெண் புறாவை ஏமாற்றியது என்றாள்.

தீ
தீ

இதைக்கேட்ட அனைவரும் திகைத்து போயினர். மன்னன், செண்பகவல்லியை பார்த்து, ஏனம்மா அவருடைய கதையில் நீ குறுக்கிடுகிறாய்? அவர் சொல்வது பொய் என்று உனக்கு எப்படி தெரியும்? என்றார்.

இதைக்கேட்ட செண்பகவல்லி அமைதியாக இருந்தாள்.

விக்ரமாதித்தன் தொடர்ந்தான். நான் கூறுவது அனைத்தும் உண்மை தான் மன்னா! முன்ஜென்மத்தில் சல்லரி என்னை ஏமாற்றியதால் தான், இதுவரை காட்டிலேயே வசித்து வருகிறேன்.

எந்த பெண்ணையும் விரும்பாமல் உள்ளேன். அதுமட்டுமல்லாமல், இளங்காதேவி கொடுத்த வரத்தால் தான், இந்த பிறவி எனக்கு கிடைத்தது என்றான்.

இதைக்கேட்டு கோபமடைந்த செண்பகவல்லி, தன்னுடைய முன்ஜென்ம கதையை கூறினாள்.

இதைகேட்ட அனைவரும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பிப்போயினர்.

பின்னர் மன்னனும், அமைச்சர்களும், இவர்கள் முன்ஜென்மத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்து மனமுடைந்து இறந்ததால் தான், இப்பொழுது மனிதர்களாக பிறந்து உள்ளனர்.

திருமணம்
திருமணம்

ஆகவே, இவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என முடிவு செய்து செண்பகவல்லி மற்றும் விக்ரமாதித்தனிடம் பேசி சம்மதம் வாங்கினர்.

பின்னர், இருவருக்கும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது. இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

காடாறு காலம் முடியும் நேரமானதால், பட்டி விக்ரமாதித்தனை பார்த்து, விக்ரமாதித்த மன்னரே! இன்னும் எத்தனை காலம் தான், இவர்களை ஏமாற்றி கொண்டு இருப்பீர்கள். நம்முடைய நாட்டிற்கு செல்ல வேண்டாமா? என்றான்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மன்னன். எனது மகள், இத்தனை ஆண்டுகள் காத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்து விட்டது என்று மகிழ்ந்தான்.

பின்னர் விக்ரமாதித்தன், செண்பகவல்லி மற்றும் பட்டியுடன் வேதாளத்தின் துணைக்கொண்டு, தன்னுடைய நாட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

Post a Comment

0 Comments