விருந்து |
கதையின் தொடர்ச்சி,
கிழவன் உருவத்தில் இருந்த விக்ரமாதித்தன் கூறியதை கேட்ட பணிப்பெண்கள் குணவதியிடம் கூறினார்கள்.
அதைக்கேட்ட குணவதி, அதற்கு சற்றும் கோபம் கொள்ளாமல் கிழவன் உருவத்தில் இருந்த விக்ரமாதித்தனை அழைத்து வர கூறினாள்.
குணவதியை பார்த்த விக்ரமாதித்தன், பெண்ணே! நான் நெடுந்தொலைவில் இருந்து வருகிறேன்.
சிலகாலம் உன்னிடம் தங்கி அறுசுவை உணவு உண்ணலாம் என்று, உன்னை நாடி வந்தேன் என்றான்.
இதைக்கேட்ட குணவதி, உங்களுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறி, அன்புடன் கவனித்தாள்.
அதே சமயம், கிழவனை உலக்கையால் அடித்து விரட்டியதை யாரிடமாவது புகார் கொடுத்து விடக்கூடாது என எண்ணி பணிப்பெண்களை தனவதி கிழவனுக்கு பின்னால் அனுப்பி வைத்திருந்தாள்.
அந்த பணிப்பெண்கள், கிழவனுக்கு குணவதி இடத்தில் சகல மரியாதையும் கிடைக்கிறது என்று தனவதியிடம் வந்து கூறினார்கள்.
அழகிய பெண் |
இதைக்கேட்ட தனவதி, நாளை அரசவையில் குணவதியை தலைகுனிய வைக்கிறேன் என்று கூறினாள்.
காலைப்பொழுதும் புலந்தது. தனவதி மற்றும் குணவதி என இருவரும் அரசவைக்கு வந்தனர்.
அப்பொழுது தனவதி, குணவதி பார்த்து கிழவனுக்கு சகல மரியாதை கொடுக்கிறாய் போல? என கிண்டல் செய்தாள்.
இதைக்கேட்ட குணவதி, உன்னிடத்தில் பஞ்சாங்கம் பார்க்கும் பார்ப்பானுக்கு சகல மரியாதை தருகிறாய் போல? என்று கேட்டு வாயை மூட செய்தாள்.
அந்த நேரத்தில் மன்னர் வர இருவரும் அமைதியாக இருந்தனர். ஆனால் இருவரும் கோபமாக இருப்பதை மன்னர் உணர்ந்துக்கொண்டார்.
மன்னனை பார்த்த தனவதி, அரசவையில் சண்டையிட்டது தவறு தான் மன்னா!.
தங்கநாணயங்கள் |
அதற்கு அபராதமாக, இந்த பொற்காசுகள் அடங்கிய பையை தருகிறேன்.
இதற்கு சமமான பொருளை குணவதி தரவில்லை என்றால், குணவதி என்னிடம் தோற்று விட்டாள் என்று அர்த்தம் என்றாள்.
அந்த பையில் ஏராளமான பொற்காசுகள் இருந்தன. இதைக்கண்ட குணவதி, இவ்வளவு பொற்காசுகளுக்கு, நாம் எங்கே போவது என வருந்தினாள்.
குணவதி, அந்த வருத்தத்துடன் வீடு திரும்பினாள். அவளது வாடிய முகத்தை கண்ட விக்ரமாதித்தன், நீ எதை பற்றி கவலை கொண்டிருக்கிறாய் என்பது பற்றி எனக்கு தெரியும்.
அதை பற்றி கவலைக்கொள்ளாதே! என்றான். இதைக்கேட்ட குணவதி, எவ்வாறு தெரிந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டே உறங்கினாள்.
விக்ரமாதித்தன், வேதாளத்தின் உதவியுடன் அரசவையில் நடந்த அனைத்தையும் தெரிந்துக்கொண்டு இருந்தான்.
அரண்மனை |
காலைப்பொழுது புலர்ந்தது. விக்ரமாதித்தன் குணவதியிடம், ஒரு பையை கொடுத்து அரசரிடம் கொடு என்று கொடுத்தான்.
குணவதியும், அந்த பையைப் பெற்றுக்கொண்டு அரசவை நோக்கி சென்றாள்.
தனவதி, இன்று குணவதி அரசவையில் அவமானப்பட போகின்றாள் என்ற ஆவலுடன் அரசவைக்கு சென்றாள்.
குணவதி மன்னனை பார்த்து, தான் கொண்டு வந்த பையை கொடுத்தாள்.
அதைப்பிரித்து பார்த்த மன்னன் அதிர்ச்சியடைந்தார். அந்த பைக்குள்ளே ஏராளமான கிடைப்பதற்கு அரிய இரத்தினங்கள் இருந்தன.
அந்த இரத்தினங்களின் ஒளியால் அரசவையே ஜொலித்தது. இதைக்கண்ட அனைவரும் வியந்துப்போயினர்.
இதைக்கண்ட தனவதி வாயடைத்துப்போனாள். இந்த இரத்தினங்களை கிழவன் தான் கொடுத்திருக்க வேண்டும்.
கிழவன் என்று தவறாக எடைப்போட்டு விட்டோம் என்று எண்ணிக்கொண்டே, எவ்வாறாவது குணவதியின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்று அடுத்த திட்டத்தை தீட்ட தொடங்கினாள்.
இரத்தினங்கள் |
தனவதி மன்னனை பார்த்து, மன்னா! தாங்களும், அமைச்சர் பெருமக்களும் நாளை மாலை என்னுடைய வீட்டிற்கு விருந்து உண்ண வர வேண்டும் என கோரிக்கை விடுத்தாள்.
மன்னன், குணவதியும் தனவதியும் போட்டி போடுவதால், தமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று எண்ணி சம்மதம் தெரிவித்தான்.
குணவதி வீடு திரும்பியவுடன், விக்ரமாதித்தன் இன்று அரசவையில் நடந்ததை கூறவா? என்றான்.
விக்ரமாதித்தன், மிகப்பெரிய ஞானியாக இருக்கவேண்டும் என்று மனதினுள் நினைத்து கூறுங்கள் என்றாள்.
விக்ரமாதித்தன் நடந்த அனைத்தையும் கூற, குணவதி அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டாள்.
விக்ரமாதித்தன், நாளை மறுநாள் மன்னனையும், அமைச்சர் பெருமக்களையும் உணவு உண்ண வீட்டு அழை என்றான். குணவதியும் சம்மதம் தெரிவித்தாள்.
0 Comments