நடனம் |
விக்ரமாதித்தன், தன்னுடைய நாடான உஜ்ஜியினி மாகாளிப்பட்டினத்தை சீறும், சிறப்புமாக ஆண்டு வந்தான்.
நாடாறு மாதங்கள் முடிந்தது. விக்ரமாதித்தன், பட்டி மற்றும் வேதாளம் என மூவரும் காடாறு மாதங்கள் செல்ல முடிவு எடுத்தனர்.
முதலில் மூவரும், தங்களுடைய குலதெய்வமான பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சென்று வணங்கினர்.
பின்னர் கால் போனப்போக்கில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது, அந்த பாதையின் மையத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதை கண்டனர். அந்த கல்வெட்டை பார்த்த பட்டி, அதை படிக்க தொடங்கினான்.
வடக்கு பக்கம் செல்லும் பாதையில் சென்றால், அழகாபுரியை அடையலாம்.
அந்த நாட்டில், தனவதி மற்றும் குணவதி என்று இரண்டு நடனப்பெண்கள் உண்டு.
கல்வெட்டு |
அவர்களின் வீட்டு வாசலில் ஒரு மணி கட்டி தொங்கவிடப்பட்டு இருக்கும். ஆயிரம் பொன்னை கொடுப்பவர், அந்த மணியை அடிக்கலாம்.
அவ்வாறு ஆயிரம் பொன்னை கொடுத்து மணியடித்தல் அரசமரியாதையுடன், தங்களது வீட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று பொறிக்கப்பட்டு இருந்தது.
அடுத்து தெற்கு பக்கமாக உள்ள பாதையில் சென்றால் வீமாபுரி என்ற நாட்டை அடையலாம். அங்கு பேசாமடந்தை என்னும் பெயரில் இளவரசி இருக்கிறாள்.
அவளை பேச வைத்துவிட்டால், அவளை திருமணம் செய்துக்கொள்ளலாம்.
இல்லையெனில், அவர்களது தலை மொட்டையடிக்கப் பட்டு, கழுதையில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும், இரு வழிகளிலும் ஒருவர் தான் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைப்படித்த பட்டியும், கேட்ட விக்ரமாதித்தனும் பெரிதும் வியப்படைந்தனர்.
இருவழிகள் |
பின்னர் பட்டி விக்ரமாதித்தனை பார்த்து, அண்ணா! நீங்கள் வேதாளத்துடன் வடக்குப்பாதை வழியாக சென்று குணவதி மற்றும் தனவதியை பாருங்கள்.
நான் தெற்குப்பாதையின் வழியாக சென்று பேசாமடந்தையை பற்றி அறிந்துக்கொண்டு இருக்கின்றேன்.
நீங்கள் இருவரையும் பார்த்துவிட்டு, பின்னர் என்னை பார்க்க வாருங்கள் என்றான்.
விக்ரமாதித்தனும், பட்டி சொன்னபடியே வடக்கு பாதையின் வழியாக வேதாளத்தின் துணையுடன் புறப்பட்டு சென்றான்.
விக்ரமாதித்தன் வேதாளத்தின் உதவியால், கிழவனாக உருவத்தை மாற்றிக்கொண்டு, நீண்ட நேர பயணத்துக்கு பிறகு தனவதி வீட்டை அடைந்தான்.
தனவதியின் வீட்டு வாசலில் கட்டியிருந்த மணியை அடித்தான்.
அப்பொழுது தனவதி, பணிப்பெண்களை அழைத்து, வந்திருப்பது ஆடவனாக இருந்தால், ஆயிரம் பொற்காசுகளை வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்பி வை.
அதுவே! பண்டாரம் என்றால் உணவிட்டு அனுப்பி வை என்றுக்கூறினாள்.
முதியவர் |
கதவை திறந்துப்பார்த்த பணிப்பெண்கள், கிழவனாக இருக்கும் விக்ரமாதித்தனை பார்த்து உணவு கொண்டுவருவதாக கூறினார்கள்.
அதைக்கேட்ட விக்ரமாதித்தன், எனக்கு உணவு வேண்டாம். உங்களுடைய தனவதி தான் வேண்டும் என்றான்.
இதைக்கேட்ட பணிப்பெண்கள், தனவதியிடம் சென்று கூறினார்கள்.
இதைக்கேட்ட தனவதி, கையில் ஒரு உலக்கையை எடுத்து வந்து விக்ரமாதித்தனை பார்த்து, இந்த வயதில் உனக்கு நான் வேண்டுமா? பண்டார பயலே! என்றுக்கூறி அடித்து தெருவில் தள்ளினாள்.
விக்ரமாதித்தன் தள்ளாடி எழுந்து, இனி குணவதி எவ்வாறு இருக்கிறாள் என்று பார்க்கலாம் என்று குணவதி வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றான்.
விக்ரமாதித்தன் குணவதி வீட்டை அடைந்து, அவளது வீட்டில் தொங்கவிடப்பட்டு இருந்த மணியை அடித்தான்.
குணவதி மணியோசையைக் கேட்டு, பணிப்பெண்களை அழைத்து, வந்திருப்பது ஆடவர் என்றால் ஆயிரம் பொற்காசுகள் வாங்கிக்கொண்டு உள்ளே அனுப்புங்கள்.
பசு |
பண்டாரம் என்றால் வயிறார உணவிட்டு அனுப்புங்கள். பசு என்றால் புல்லும், தண்ணீரும் கொடுத்து அனுப்பி வையுங்கள் என்றாள்.
கதவை திறந்த பணிப்பெண்கள் விக்ரமாதித்தனை கிழவன் என்று நினைத்து உணவு எடுத்து வருவதாக கூறினார்கள்.
இதைக்கேட்ட விக்ரமாதித்தன், எனக்கு உணவு வேண்டாம். குணவதி தான் வேண்டும் என்றான்.
இதைக்கேட்ட பணிப்பெண்கள், கிழவனுக்கு இந்த வயதில் கொழுப்பை பாருங்கள் என்றுக்கூறி குணவதியிடம் நடந்ததை கூறினார்கள்.
0 Comments