Ticker

6/recent/ticker-posts

கணவன் மீது கொண்ட காதலும், வேண்டுதலும் | விக்ரமாதித்தன் கதைகள்

கணவன், மனைவி
கணவன், மனைவி

கதையின் தொடர்ச்சி...

முனிவர் மேலும் கதையை தொடர்ந்தார். மன்னன், தன்னுடைய மகள் செய்த செயலுக்கு மன்னிப்பு கோரினான்.

மந்திரிகள் மறைத்து வைத்திருந்த மந்திரியின் மகனான தனஜெயனை மன்னனுக்கு முன்பு நிறுத்தினர்.

மன்னன், தனஜெயனிடம் மன்னிப்பு கேட்டான். பிறகு இளவரசனின் உடலை என்ன செய்வது என கேட்டான்.

அதற்கு தனஜெயன், இளவரசனுடைய உடலை தகனம் செய்யாமல், ஒரு பேழையில் கிடத்தி, எண்ணெய் ஊற்றி, திவ்விய தலங்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தான்.

அவனை கொண்டு செல்லும் பொழுது, அனைத்து இடங்களிலும் தான தருமங்கள் செய்ய போவதாகவும், அப்படி செய்யும் பொழுது இறைவனது அருளால் இளவரசன் உயிர் பெறுவான் என நம்புவதாகவும் கூறினான்.

அவ்வாறு உயிர் பெறாவிட்டால், தன்னுயிரை விட்டுவிடுவேன். பின்னர் இளவரசனது உடலுடன், எனது உடலையும் சேர்த்து சிதையில் வையுங்கள் என்றான்.

இவ்வாறாக, தன்னுடைய நட்பின் பெருமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தான்.

நண்பர்கள்
நண்பர்கள்

தனஜெயன் கூறியவாறே, அனைத்து திவ்விய தேசங்களுக்கும் இளவரசனது உடலை எடுத்துக்கொண்டு சென்றான்.

பல ஊர்களில், பலவாறு தானதருமங்களை செய்தும் வந்தான். இறுதியாக, அவனுடைய மனைவியின் நியாபகம் வர கலிங்கதேசத்தை நோக்கி புறப்பட்டான்.

அந்நாட்டின் அமைச்சர், தன்னுடைய மருமகன் வருவதை எண்ணி, தனஜெயனுக்கு பல்லக்கினை அனுப்பினான்.

தனஜெயனும், அந்த பல்லக்கில் ஏறினான். பின்னர், தன்னுடன் இருந்த இளவரசியின் உடலை எடுத்துக்கொண்டு தனக்கென ஒதுக்கப்பட்டு இருந்த மாளிகைக்கு சென்றான்.

பின்னர், இளவரசனின் உடலை பத்திரப்படுத்துவிட்டு, தன்னுடைய மனைவியை பார்க்க சென்றுவிட்டான்.

தனஜெயன் மனைவியும், தன்னுடைய கணவனை அன்புடன் உபசரித்து வந்தாள். அவனுக்கு தேவையான அனைத்து பணிவிடைகளும் செய்தாள்.

பின்னர் நீண்ட நேரம், அவனுடைய முகத்தை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

பின்னர் அவன் உறங்கியதும், கையில் வீரவாளையும் ஏந்திக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றாள்.

தூங்குவதுப்போல நடித்துக்கொண்டு இருந்த தனஜெயனும், அவனது மனைவிக்கு தெரியாமல், அவளை பின் தொடர்ந்து சென்றான்.

அவனுடைய மனைவி நேரடியாக பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு சென்று, குளத்தில் மூழ்கி எழுந்தாள்.

அம்மன்
அம்மன்

பின்னர் கோவிலை மூன்று முறை வலம் வந்து, அம்மனை பார்த்து, தாயே! நான் வேண்டியவண்ணம், எனது கணவன் என்னை தேடி வந்துவிட்டார்.

இப்பொழுது, நான் கூறியவண்ணம், எனது உயிரை காணிக்கை ஆக்குகின்றேன் என்றுக்கூறி, தன்னுடைய வாளால் கழுத்தை அறுக்க முயன்றாள்.

அந்த கணத்தில் காளிதேவி, அவளுக்கு முன்னால் தோன்றினாள். பின்னர் அவளை தடுத்து, மகளே!, நீ வேண்டியதை கொடுக்கவே, நான் வந்தேன்.

நீ, என்மீது அன்புக்கொண்ட மகளாவாய், ஆகவே, உனக்கு வரமளிக்கவே வந்தோம்.

நீயும், உனது கணவனும் சிரஞ்சீவியாக, எப்பொழுதும் இளமையாக வாழ்வீர்கள் என்று வரமளிக்கின்றேன் என்றாள்.

பின்னர், காளிதேவி அவளிடம் ஒரு பிரம்பு, ஒரு எலுமிச்சை பழம், மற்றும் திருநீறும் கொடுத்தாள்.

அதைப்பெற்றுக்கொண்ட தனஜெயனின் மனைவி, தாயே! இதைவைத்து என்ன செய்ய வேண்டும் என கேட்டாள்.

அதற்கு காளிதேவி, மகளே! உன்னுடைய கணவன் தன்னுடைய நண்பனுக்காக உயிரையும் விட துணித்துள்ளான்.

அவனுடைய நண்பன் உயிர் பெறாவிடில் கட்டாயமாக உயிரை விட்டு விடுவான்.

அவ்வாறு உயிர் விட்டான் எனில் என்னுடைய வரமானது பொய்த்து போய்விடும்.

ஆகையால், தனஜெயன் வைத்துள்ள இளவரசன் உடலை ஒன்றாக சேர்த்து, வெட்டுப்பட்ட இடத்தில், இந்த எலுமிச்சை பயத்தின் சாறை தடவுங்கள்.

இளைஞன்
இளைஞன்

பின்னர் திருநீறை பூசி பிரம்பால் மூன்று முறை தட்டுங்கள், தூங்கி எழுவது போல எழுவான் என்று ஆசிர்வதித்து மறைந்தாள்.

இதையனைத்தையும், தனஜெயன் மறைந்திருந்து கேட்டுக்கொண்டு இருந்தான். தன்னுடைய மனைவி தன்மீது வைத்துள்ள அன்பை எண்ணி பூரிப்படைந்தான்.

பின்னர் தன்னுடைய மனைவிக்கு முன்னால் வீடு திரும்பி, தூங்குவதுபோல் நடித்தான்.

வீடு திரும்பிய தனஜெயனின் மனைவி, தன்னுடைய கணவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

அப்பொழுது, தூங்கி எழுவதுப்போல எழுந்து, அவளை கட்டியணைத்துக்கொண்டு தனக்கு ஒரு கனவு வந்தது என்று கூறினான்.

தன்னுடைய கணவன் தன்மீது அன்பு வைத்து பேசுவதை கண்டு மனம் மகிழ்ந்தாள்.

தனஜெயன் கோவிலில் நடந்த அனைத்தையும், கனவாக கண்டதுபோல அவளிடம் கூறினான்.

இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த அவள், அவனை அணைத்துக்கொண்டாள்.

பின்னர், கணவனிடம் தான் வைத்திருந்த எலுமிச்சை பழம், பிரம்பு மற்றும் திருநீறு கொடுத்து இளவரசனை எழுப்ப செய்தாள்.

எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழம்

இளவரசனும் உயிர்பெற்று எழுந்தான். பின்னர், தனஜெயன் நடந்தது அனைத்தையும் அவனிடம் கூறினான்.

தனஜெயனின் மனைவி, இருவருக்கும் பலவகையான உணவுகளை கொடுத்து அன்புடன் உபசரித்தாள்.

பின்னர் மனைவியுடன் சிலகாலம் தங்கிருந்து, மனைவியை அழைத்துக்கொண்டு இளவரனுடன் நாடு திரும்பினான்.

பின்னர் இளவரசன், நல்ல அன்பான பெண்ணை மணந்து அவனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தான் என முனிவர் கதையை கூறி முடித்தார்.

அதுமட்டுமல்லாமல், நல்ல நண்பர்கள் என்றால் தனஜெயன் மற்றும் விமலன் போன்று தான் இருக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர், இப்பொழுது உனது நண்பன் என்று நினைத்துக்கொண்டு இருந்த மன்னன் செய்தது துரோகத்திலும் துரோகம்.

ஆகையால், இனி அவனை நீ பார்க்க கூடாது என்று கூறி ஏராளமான பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பினார்.

பின்னர் மனம் திருந்தி தவத்தில் ஈடுப்பட்டார் என கதையை கூறி முடித்தாள் செண்பகவல்லி.

பின்னர் விக்ரமவல்லியை பார்த்து, இனியாவது என்னிடம் சரியாக பேசாமல் இருப்பதற்குக்கான காரணத்தை கூறு என்றாள்.

விக்ரமவல்லி தொடர்ந்தாள்...

Post a Comment

0 Comments