Ticker

6/recent/ticker-posts

சங்கக்கால பெண்களின் கல்வி | உண்மையும், பொய்யும் | தமிழர் வாழ்வியல்

பெண் கல்வி
பெண் கல்வி

சங்கக்காலங்களில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதாக இன்றைய அரசியல் தலைவர்கள், சில மதத்தலைவர்கள் பேசி கேட்டிருப்பீர்கள்.

உண்மையில் சங்கக்காலங்களில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதா? என்பதை, இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • இன்றைய மக்களின் மனநிலை
  • அன்றைய காலத்தில் கல்வி
  • ஆராய்ந்து அறிதல் பண்பு
  • தமிழும், பெண்களும்
  • பெண்பால் புலவர்களில் சிலர்
  • ஆராய்வது எப்படி?
  • மூலங்களின் ஆதாரம்


இன்றைய மக்களின் மனநிலை

அன்றையக் காலக்கட்டத்தில் வாழ்ந்த நமது முன்னோர்களையும், அவர்கள் பின்பற்றிய வழிகளையும் பெரும்பாலான தமிழக மக்கள் இன்று மறந்து வருகின்றனர்.

அன்று வாழ்ந்த நமது முன்னோர்களையும், அவர்கள் பின்பற்றிய மரபுகளையும், இன்று பலர் தங்களுடைய சுய இலாபத்திற்காக பொய்யாக திரித்து வருகின்றனர்.

அவர்கள் நம்முடைய முன்னோர்கள் என்பதை மறந்து, இன்று வாழும் இவர்கள் அவர்கள் பின்பற்றிய மரபுகளையும், கலாச்சாரத்தையும் மூடநம்பிக்கை என கூறுகின்றனர்.

அக்காலத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்கப்பெறவில்லை என்றும், பெண்களுக்கு கல்வி மறுக்கப்ப்பட்டது என்றும் பொய்யான பல தகவல்களை பரப்பியும் வருகின்றனர்.

பெண் கல்வி
பெண் கல்வி

இன்று நாம் தலைவனாக பார்க்கும் ஒரு மனிதர், எந்த அளவிற்கு அறிவில் சிறந்தவர் என்று எவரும் ஆராய்வதில்லை.

மாறாக, அவர்கள் கூறும் அனைத்தும் உண்மையென்றும், அவர்கள் தங்களுடைய நன்மைகளுக்காக சொல்கிறார்கள் என்றும் கண்களை மூடிக்கொண்டு நம்புகின்றனர்.

நாம் நமது முன்னோர்கள் சொன்னபடி இன்று நடக்கின்றோம் என்று சொன்னால் அது முற்றிலும் தவறு.


அன்றைய காலத்தில் கல்வி

அன்றைய காலத்தில் கல்வியானது அனைவரது வாழ்க்கைக்கும் தேவைப்படவில்லை என்பது உண்மைதான்.

இன்றைய காலம் போல அல்லாமல் கல்வியை வைத்து வேலை என்ற சூழல் அன்று இல்லை.

மாறாக, படிப்பறிவு பெற்று விளங்கிய பெரும்புலவர்கள் அனைவரும் ஏழ்மையில் தான் இருந்தனர் என்பது பல்வேறு நூல்களில் இருந்து தெரியவருகிறது.

சாதாரண குடிமக்கள் கல்வியை வேண்டாத ஒன்றாக கருதினர். யாரும் யாரையும் ஏமாற்றி வாழவில்லை என்பதும் தெரியவருகிறது.

நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர் என்பது தெரியவருகிறது.

இதில் ஒரு சிலரே அந்த காலத்தில் கல்வியை பற்றி அறிந்து சிறந்து விளங்கினர்.

அவர்களே, தனது சொந்த வாழ்க்கையை கருதாது ஏழ்மையில் இருந்தாலும், பல்வேறு நூல்களை எழுதி சாதனை படைத்தனர்.

கல்வி
கல்வி

ஆராய்ந்து அறிதல் பண்பு

நாம் இன்றளவும் பெரும்பாலும், போற்றக்கூடிய ஒரு புலவர் என்றால் அது திருவள்ளுவர் தான்.

அவரை மதிக்கும் அளவிற்கு அவருடைய குறளை நாம் மதிக்கின்றோமா? என்றால் அதுவுமில்லை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)

இந்த குறளின் வாயிலாக திருவள்ளுவர், ஒரு செய்தியை, எத்தனை நபர்கள் கூறிவந்தாலும், அதனுடைய உண்மை தன்மையை அறிந்த பின்னரே நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றார்.

இந்த குறளானது, பெரும்பாலான மக்களுக்கு தெரியும் என்பது உண்மை தான். ஆனால், ஒரு தகவலை எத்தனை நபர்கள் ஆராய்ந்து ஏற்றுக்கொள்கின்றனர் என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாக உள்ளது.

இன்று நம்மை ஒருவன் அறிவாளி, புத்திசாலி என்று கூறிவிட்டால், உளமகிழ்ச்சியில் அவரை கொண்டாடுகின்றோம். உண்மையில், எதற்காக, நம்மை அவர் புகழ்கின்றார் என்று யாரும் சிந்திப்பதில்லை.

இவையே, இன்றைய தமிழர்களாகிய நாம் பின்பற்றும் கலாச்சாரமும், பண்பாடும் ஆகும்.

புத்தகம்
புத்தகம்

நமது முன்னோர்கள், அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு ஏற்ற பல வழிகளையும், இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற பல வழிகளையும் கூறியுள்ளனர்.

ஆனால், அதை பெரும்பாலானோர் ஏற்பதில்லை. மாறாக, அவர்கள் அதை மூடநம்பிக்கை என்று கூறுகின்றனர்.

இன்று நாம் பின்பற்றும் பலவற்றை, அன்று வாழ்ந்த நம் முன்னோர்கள் யாரும் பின்பற்றவில்லை என்பது அனைவரும் அறிந்ததே!.

அவர்கள் சொல்வதை மூடநம்பிக்கை என்று புறம் தள்ளும், நம்மில் பலர் அவர்களை போல நோய்களின்றி நூற்றாண்டுகள் கடந்தும் வாழ்கின்றார்களா? என்பது யோசிக்க வேண்டிய விடயம்.

இன்று இவர்களை போல அல்லாமல், ஏனைய பலரும் அன்று நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்ந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

அன்று நாகரிகம் என்று பார்த்தது வேறு, இன்று பார்ப்பது வேறு. அன்று பெரும்பாலானோர் தங்களுடைய கற்பையும், சுயவொழுக்கத்தையும் நாகரிகமாக பார்த்தனர்.

ஆனால், இன்றைய தமிழர்களாகிய நாம், ஆடம்பர வாழ்க்கையும், மேற்கத்திய கலாசாரத்தையும் தான் விரும்புகின்றோம்.

அதனால் தான், நம்முடைய ஆயுட்காலத்தை வெகுவாக குறைத்து சராசரி ஆயுட்காலம் 79 ஆக மாற்றி சாதனை புரிந்துள்ளோம்.


தமிழும், பெண்களும்

உள்நோக்கம் கொண்ட பலர், அக்கால பெண்களுக்கு மரியாதை மற்றும் கல்வி, இரண்டும் கொடுக்கப்படவில்லை என்று கூறுவது எந்த அளவிற்கு உண்மை என்று யாரும் யோசிப்பதில்லை.

மாறாக, அவர்கள் கூறுவதை உண்மையென்று பலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

பெண் கல்வி
பெண் கல்வி

இதற்கு காரணமாக, நமது முன்னோர்கள் பின்பற்றிய சமயங்களை குறை கூறுகின்றனர். இது சரியா?

இது எந்தளவிற்கு உண்மை என்று யோசித்து பாருங்கள். அவர்கள் கூறுவதை போல பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு இருந்தால், இன்று அனைவர்க்கும் தெரிந்த ஔவையார் என்ற பெண்புலவர் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஔவையார் போன்ற பல பெண்பால் புலவர்களை நாம் பெற்றிருக்கிறோம் என்பது தான் உண்மை.


பெண்பால் புலவர்களில் சிலர்

நமது தாய்த்தமிழ் மொழியில் ஏராளமான பெண்பால் புலவர்களை நாம் பெற்று இருக்கின்றோம்.

அவர்கள் அனைவரும் சமயங்களை பின்பற்றிய காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்பது தான் உண்மை.

    • ஔவையார், 
    • அஞ்சில் அஞ்சியார், 
    • அஞ்சியத்தை மகள் நாகையார், 
    • அள்ளூர் நன்முல்லையார், 
    • அணிலாடு முன்றிலார், 
    • ஆதிமந்தி, 
    • ஒக்கூர் மாசாத்தியார், 
    • ஓரிற் பிச்சையார், 
    • முள்ளியூர் பூதியார்.

சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை நூல்களின் மூலமாக, ஒரு பெண்ணிற்கு எந்த அளவிற்கு மரியாதை கிடைத்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.

ஆனால், அவற்றை நினைவில் கூறாமல், கடந்தக்காலத்தில் பெண்களின் நிலையை தவறாக சித்தரித்து கூறுவதை கண்களை மூடிக்கொண்டு நம்புகின்றோம்.

அன்றைய தமிழக பெண்கள்
அன்றைய தமிழக பெண்கள்

ஒரு தலைவன் வேகமாகவும், சப்தமாகவும் பேசினால் அது உண்மை என நம்மில் பலர் நம்புகின்றனர்.

மேற்கூறிய பெண்பால் புலவர்களில் பெரும்பாலும் வெவ்வேறு குலத்தை சார்ந்தவர்கள் ஆவார்கள்.


ஆராய்வது எப்படி?

தமிழர்களாகிய நாம் அறிவில் சிறந்தவர்கள் என்பது உலகறிந்த ஒன்று தான். அதற்க்கு காரணமாக அமைவது, நம்முடைய முன்னோர்களும், அவர்கள் பின்பற்றிய கலாச்சார பண்பாடே ஆகும்.

நீங்கள் நேசிக்கும் ஒரு தலைவன், கூறுவதை முதலில் ஆராய்ந்து பின்னர் ஏற்றுக்கொள்ளுங்கள். அது உங்களை மேம்படுத்தும்.

ஒரு செய்தியை ஆராய்வதென்றால், முதலில் அந்த செய்தியை கூறியவர் பின்புலமும், அவர் எடுத்த மூலத்தின் பின்புறத்தையும் ஆராய்யுங்கள்.

ஒரேவொரு மூலத்தை கொண்டு எவ்விதமான முடிவையும் எடுக்காதீர்கள். அது உங்களை மேம்படுத்தாது. நீங்கள் முன்னேறும் பொழுது, உங்களை சார்ந்தவர்களும் முன்னேறுவார்கள்.

நமது முன்னோர்களாகிய தமிழர்கள், எந்தவொரு தகவல்களையும், சோதனைக்கு உட்படுத்தியே, அதை ஏற்றுக்கொள்வார்கள். அவ்வாறே, நீங்களும் செய்யுங்கள்.

புத்தகம்
புத்தகம்

தமிழன் என்பது பெயரில் உள்ளதல்ல, அவன் பின்பற்றும் வழியில் உள்ளதே.

நமது முன்னோர்கள் எழுதிய நூல்களை படியுங்கள். குறிப்பாக, அரசியல் சார்ந்து எவற்றையும் படிக்காதீர்கள்.

அது, உங்களுடைய அறிவை, ஒரு குறுகிய வட்டத்தில் அடங்கிவிடும். நமது முன்னோர்கள் எழுதிய, அரசியல் சார்ந்து இல்லாத சமயம், கல்வி, மருத்துவம், காதல், உறவு, வாழ்க்கை, போர், மற்றும் வீரம் என எல்லாவற்றையும் படியுங்கள்.

உண்மை புரியும். யார் தமிழனென்று!.

இதுபோன்ற ஏராளமான உண்மைகளையும், பொய்களையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். அது ஒரு சாராளர் இடையே வெறுப்பை ஏற்படுத்தும்.

அது நம்முடைய நோக்கம் அல்ல. இன்றும் என்றும் தமிழன், தமிழாகவே வாழ வேண்டும் என்பதே நம்முடைய நோக்கம்.


மூலங்களின் ஆதாரம்

மேற்கூறிய பொய்களில் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டது.

மேற்கண்ட உண்மைத்தகவல்கள் அனைத்தும் பல்வேறு புத்தகங்கள், செய்தித்தாள்களில் வெளிவந்த ஆய்வு கட்டுரைகளில் இருந்து திரட்டப்பட்டது.

Post a Comment

0 Comments