Ticker

6/recent/ticker-posts

தமிழ்ப்புத்தாண்டும், கல்வெட்டுகளும் | தமிழர் வாழ்வியல்

தமிழ்ப்புத்தாண்டு
தமிழ்ப்புத்தாண்டு

நமது முன்னோர்களின் வீரம், நாகரீகம், கொடை, கட்டிடக்கலை என பலவற்றை உலகிற்கு பறைசாற்றும் கோவில்களில் உள்ள கல்வெட்டுக்களில் தமிழ்ப்புத்தாண்டு குறித்து உள்ள செய்திகளை தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • தமிழ்ப்புத்தாண்டும், தமிழ் கல்வெட்டுகளும்
  • தமிழ்ப்புத்தாண்டு மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்


தமிழ்ப்புத்தாண்டும், தமிழ் கல்வெட்டுகளும்

தமிழர்களின் பாரம்பரியம் குறித்த சான்றுகள், பல்வேறு வரலாற்று உண்மைகள், அரசியல் காரணங்களால் யாரும் அறியாத வண்ணம் மறைக்கப்பட்டு வருகின்றன என்பது தான் உண்மை.

உண்மையில், அதிலும் சில உண்மைகள், வெளிவர தான் செய்கின்றன. அவற்றில் ஒருசில கல்வெட்டு ஆதாரங்கள் உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.

இன்றும் சரி, அன்றும் சரி தமிழர்கள் உலகில் அனைத்து இடங்களிலும் பரவி வாழ்ந்தது தான் வருகின்றனர்.

தமிழர்கள் பல்வேறு பழக்கவழங்கங்களால் வேறுபட்டு இருந்தான் என்பது உண்மை. தமிழர்கள் கட்டிடக்கலைக்கும், வடமாநிலத்தவர் கட்டிடக்கலைக்கும் பல்வேறு வேறுபாடுகள் உண்டு.

தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில்

அந்தவகையில் நமது முன்னோர்கள் கட்டிய கோவில்கள் யாவும், வரலாற்று சிறப்புகளை தாங்கி நிற்கின்றன.

அதில் பல கோவில்களையும், நமது வரலாற்றையும் தற்பொழுது இழந்து நிற்கின்றோம் என்பது தான் கசப்பான உண்மை.

சான்று 1:

காஞ்சிபுரத்தில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் 12-13 ஆம் நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டுகளில் சித்திரை முதல் நாளை தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சான்று 2:

தஞ்சை வலஞ்சுழி சடைமுடிநாதர் கோவிலில் உள்ள கி.பி 998 ஆம் ஆண்டை சார்ந்த கல்வெட்டுகளில் தமிழர்கள் சித்திரை முதல் தமிழர் புத்தாண்டு என குறிப்பிட்டு உள்ளனர்.

சான்று 3:

தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய மன்னன் பெருமானாகிய இராஜராஜசோழன் சித்திரை ஆண்டு பிறப்பிற்காக மக்களுக்கு அளித்த மானியங்களை குறித்த கல்வெட்டுகள் ஏராளம்.

உண்மையில் பல்வேறு கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், சுவடிகளில் உள்ள குறிப்புகள் ஏராளமானவை இன்றளவும் மொழிபெயர்க்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


தமிழ்ப்புத்தாண்டு மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள்

ஒருவனது சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களை அழிப்பதன் மூலமாக அவர்களது வரலாற்றையும் அழித்து விடலாம் என்பது தான் உண்மை.

ஆங்கிலேயர்கள் என்று நாம் பாடநூல்களில் படித்து வருகின்றோம். அவர்கள் கட்டிய அணைகள், அரண்மனைகள் என்று அவர்களது சிறப்புகளையும் படித்து வருகின்றோம்.

உண்மையில், மிகப்பெரிய ஏமாற்றுவேலை நமது மாநிலத்தில் மட்டுமே நடைபெறுகிறது என்பது தான் உண்மை.

கிறித்தவர்களை ஆங்கிலேயர்கள் எனக்குறிப்பிட காரணமாக அமைவது கிறித்தவர்கள் மீதான நல்லெண்ணத்தை சிதைக்காமல் இருக்கவே ஆகும்.

british flag
British flag

தமிழ்ப்புத்தாண்டை எவ்வாறாவது தடுக்க வேண்டும் என்றே அப்பொழுதே கிறித்தவர்கள் ஜனவரியை தை என்றும், பிப்ரவரியை மாசி என்றும் குறிப்பிட்டார்கள்.

இதுப்போல எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வர முயன்றார்கள் என்பதை டேனிஷ் 1800 முதல் 1845 ஆம் ஆண்டுவரை கிடைக்கப்பெற்ற சான்றுகளின் வாயிலாக தெரியவருகிறது.

இன்று திராவிடம் பேசும் அரசியல் தலைவர்கள் யாரும் தமிழர்கள் என்று குறிக்கொள்வதில்லை. காரணம், பெரும்பாலும், அவர்களுடைய முன்னோர்கள் தமிழர்கள் அல்ல என்பதே உண்மை.

திராவிடம் என்பது தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் ஒடிசா என மாநிலங்களின் கூட்டமைப்பாகும்.

தற்போதைய தமிழகத்தை தவிர்த்து, எந்த மாநிலமும் திராவிடம் என பேசாதப்பொழுது, நாம் திராவிடம் பேசுவது தேவையற்றது.

தமிழர் புத்தாண்டு என தைப்பொங்கலை கொண்டாடப்படும் என்றால், வருங்காலத்தில் தைப்பொங்கல் என்பது வருடப்பிறப்பிற்காக கொண்டாடப்படும் விழாவாக கருதப்படும்.

Sweet-Pongal
தைப்பொங்கல்

பின்நாட்களில், அது தமிழர்கள் அறுவடையை சிறப்பிக்கும் பொருட்டு சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் சிறப்பிக்க செய்யும் விழா என்பதை மறக்க நேரிடும்.

இதனால், தமிழர் பாரம்பரியமும் உடையும். தமிழர் என்கின்ற அடையாளமும் காலப்போக்கில் மறைந்து, தேவையற்ற, பயனில்லாத திராவிடம் மட்டும் நிலைக்கும்.


முடிவுரை

நமது பாரம்பரியங்கள் பல அரசியல் காரணிகளால் மாற்றுவது என்பது அவர்களின் நன்மைக்கே அன்றி, நமது பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கு அல்ல.

இதன் மேலும் தமிழர் புத்தாண்டு தை என கருதினீர்கள் என்றால், திராவிடம் என்கின்ற மாயையில் சிக்கி உள்ளீர்கள் என்று அர்த்தம்.

எதுவாக இருந்தால் எனக்கென்ன என்று இருப்பது, நமது முன்னோர்களை அவமதிப்பதும், எவ்வித சிறப்பும் இல்லாமல் நமது வாரிசுகளை வாழ வைப்பதற்கு சமமாகும்.

Post a Comment

0 Comments