Ticker

6/recent/ticker-posts

அதியமானும், ஔவையும் | தமிழர் வாழ்வியல்

நெல்லிக்கனி
நெல்லிக்கனி

தமிழ் மன்னர்களின் தமிழ்ப்பற்று பற்றி அறிந்துக்கொள்ள வேண்டுமென்றால், அத்தியமான் மற்றும் அவ்வையை பற்றி அறிந்துக்கொள்ளவதன் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • சங்க இலக்கியம்
  • அதியமானும், நெல்லிக்கனியும்
  • அதியமானின் வாழ்க்கை வரலாறு

சங்க இலக்கியம்

சங்கக்கால இலக்கிய, இலக்கணங்களால் பண்டைய மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்துக்கொள்கின்றோம்.

அதில் மக்களின் நாகரீகம், ஒழுக்கம், கொடை, வீரம் என அனைத்தையும் அறியவும் செய்கின்றோம்.

அதை அறிந்துக்கொள்ள, மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழியே காரணம்.

அந்த தமிழை நேசித்து வளர்த்த மன்னர்களும், புலவர் பெருமக்களும் தமிழுக்கு கிடைத்த செல்வங்கள்.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தான் தமிழ் மன்னன் என்பது அனைவரும் அறிவோம். 

Tamil picture 1
தமிழ்


தமிழ் மீது நமது முன்னோர்கள் கொண்ட பற்று மிகவும் அதிகம். பலர் பலவாறு தமிழை நேசித்து வளர்த்தனர்.

அவ்வாறு தமிழை வளர்த்த மன்னர்களில் அதியமான் மிகவும் குறிப்பிட தக்க ஒருவர்.

தமிழை மூச்சாக நினைத்து அதனால் பல கொடைகளை செய்த அதியமானை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.


அதியமானும், நெல்லிக்கனியும்

சங்கக்காலத்தில் தகடூர் என்கின்ற ஊரில் வாழும் மக்களாகிய அதியர் என்னும் குடிமக்களை அதியமான் நெடுமான் அஞ்சி (அதியமான்) என்னும் மன்னன் ஆண்டு வந்தான்.

இவனது எல்லைக்குட்பட்ட நாடானது தலைநீர் நாடு என அழைக்கப்பட்டது. இன்றைய ஒகேனக்கல் அருவியின் சங்கக்கால பெயரே தலைநீர் அருவி ஆகும்.

இந்த அதியமானை பற்றிய பல செய்திகள் சங்கக்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. 

பல்வேறு புலவர்கள், பல்வேறு நூல்களில் அதியமானை சிறப்பித்துள்ளனர்.

அதில் குறிப்பாக, அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததும், அதை ஔவை பெற்றுக்கொண்டதும் மாபெரும் கொடையாகவே பார்க்கப்படுகிறது.

Adhiyaman avvaikku nellikani vazhanguthal
அதியமானும், ஔவையும்

ஆயுளை அதிகரிக்க வல்ல, அதியற்புதமான நெல்லிக்கனியை பற்றிய செய்தியை அறிந்த அதியமான், கடும் சிரமங்களுக்கு பிறகு அதை அடைகின்றான்.

அதை நல்ல சுபமுகூர்த்ததில் உண்ண முடிவு செய்து காத்திருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ஔவையார் அவர்கள் அவனை சந்திக்க வருகின்றனர்.

ஔவை வந்த செய்தியறிந்ததும், அவரை வரவேற்று உபசரிகின்றான்.

பின்னர், தான் உண்ண நினைத்த அந்த அறிய நெல்லிக்கனியை, ஔவைக்கு அளித்தால், அவர் வாழும் காலம் வரை தமிழானது மென்மேலும் வளரும் எனக்கருதுகின்றான்.

நெல்லியின் சிறப்பை சொல்லி ஔவைக்கு அளித்தால், அவர் மறுத்துவிடுவார் என எண்ணி, அதன் சிறப்பை மறைத்து ஔவையை உண்ணச்செய்கின்றான்.

ஔவை நெல்லிக்கனியை சாப்பிட்டு முடித்ததும். அதன் சிறப்பை அவரிடத்தில் அவன் சொல்ல ஔவை கண்கலங்கி, அதியமான் தன்னுடைய தமிழ் மீது அளவுக்கடந்த பற்றுக்கொண்டதை எண்ணி கண்கலங்கி பாடல் பாடுகின்றார்.

இதுவல்லவா! தமிழ் மீது கொண்ட பற்று!

ஔவை வாழ்ந்த காலக்கட்டம் குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

கி.பி 18 நூற்றாண்டுகள் வரை ஔவை எழுதிய பல நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

நெல்லிக்கனி
நெல்லிக்கனி

இவைகள் அனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது அதியமானின், அற்புத நெல்லிக்கனியால் ஔவை அவர்கள் நூற்றாண்டுகள் கடந்தும் வாழ்ந்து வந்தாரா? என்கின்ற ஐயம் எழும்.

வரலாற்று ஆய்வாளர்கள் ஔவை பெயர்கொண்ட பல புலவர்கள் இருந்திருக்கக்கூடும் என கருதுகின்றனர்.

ஔவை போல் வரவேண்டும் என்றுக்கருதி பெற்றோர்கள், தங்களுடைய பிள்ளைகளுக்கு ஔவை என்கின்ற பெயரை வைத்திருக்கலாம் என கருதுகின்றனர்.


அதியமானின் வாழ்க்கை வரலாறு

அதியமான் வாழ்ந்தக்காலம் கி.பி 1 ஆம் நூற்றாண்டாகும். 

அதியமான், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பல்வேறு கொடைகளை அளித்துள்ளான்.

அந்தவகையில், சமணத்துறவிகளுக்கு தானமாக ஒரு மலையை அளித்துள்ளான்.

அதுகுறித்த கல்வெட்டுகள் பண்டைய தமிழ் பிராமி எழுத்துக்களில் ஜம்பை என்னும் ஊரில் கிடைக்கப்பெற்று உள்ளது.

Jambai Tamil Brahmi
தமிழ் பிராமி

அதியமான் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூரை தலைநகரமாக கொண்டு ஆட்சிப்புரிந்து வந்த சேர நாட்டு குறுநில மன்னனாகிய மலையமான் திருமுடி காரியை வென்றான்.

பின்னர், காரியின் சார்பாக வந்த சேரர்களின் போரிட்டான். சோழ மற்றும் பாண்டியர்களின் ஆதரவு இருந்தும், சேரர்களிடம் வீழ்ந்து, தன்னுடைய இன்னுயிரை இழந்தான்.

இந்த போரை நேரில் கண்ட பல புலவர்கள், இந்த போரை குறித்து எழுதிய நூலே தகடூர் யாத்திரை என்பதாகும்.

இந்த நூலானது முழுமையாக கிடைக்கப்பெறவில்லை. இதன் காரணமாக, அதியமானை பற்றிய பல அறிய தகவல்கள் கிடைக்கவில்லை.

அதியமான் இறந்தத்தால் வருத்தமுற்ற ஔவை, பெருஞ்சேரல் இரும்பொறையிடம் தருமத்தை கொலை செய்துவிட்டிர்கள் எனக்கூறி மனம் வருந்த செய்தார் எனவும் குறிப்புகள் உள்ளன.


முடிவுரை

கி.பி ஒன்றாம் நுற்றாண்டில் வாழ்ந்த நமது முன்னோர்கள் எவ்வளவு கோடை தன்மையும், தமிழ் மீது பற்றையும் கொண்டுயிருந்தார்கள் என்பதை அறிந்துக்கொண்டு இருப்பிர்கள் என நம்புகின்றேன்.

Post a Comment

0 Comments