ஔவை |
ஔவையார் பற்றி அறியாதவர்கள் தமிழராக இருக்க இயலாது என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் ஔவையாரை பற்றி அறியாத தகவல்களும் பல இருக்கின்றது. அவற்றை இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.
பொருளடக்கம்
- ஔவையார்
- ஔவையும், அவரது காலமும்
ஔவையார்
ஔவை என்ற பெயர் தமிழர்களின் தமிழ் புலமை, பெண்களின் திறமை என அறிவரும் அறிய செய்யும் பெயர் என்பது மிகையாகாது.
ஔவையை அறியாத தமிழ் மக்கள் இருப்பது அரிது. அவர் தமிழ் மக்களின் மனதில் இன்றும் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றார் என்பது தான் உண்மை.
ஔவையார் என்றதும் அனைவருக்கும் நினைவிற்கு வருவது, வயதான பாட்டி, கையில் ஒரு கோல், நெற்றியில் திருநீற்று பட்டை தான்.
உதாரணமாக, இன்றளவும் சொல்லப்படும் கதை, யாவரும் அறிந்த கதை தான் அது. நிலவில் அவ்வை பாட்டி வடை சுடுகின்றார் என்று பெற்றோர், அவரது குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவார்கள்.
ஆனால், உண்மையில் ஔவை ஒருவரா? அல்லது பலரா? என்பது சற்று குழப்பமான ஒன்றாகவே இருக்கிறது.
அறிஞர்கள் பலர், அவர் வாழ்ந்த காலக்கட்டத்தை வைத்து ஔவை எனப்பெயர் கொண்ட பல பெண்பால் புலவர்கள், பல்வேறு காலக்கட்டத்தில் வாழ்ந்துள்ளார்கள் என கூறுகின்றனர்.
![]() |
புத்தகங்கள் |
ஔவையும், அவரது காலமும்
ஔவை அவர்கள் எழுதிய நூல்களின் காலத்தை வைத்து, ஔவை என்ற பெயர்க்கொண்ட பல பெண்பால் புலவர்கள் வாழ்ந்தார்கள் என கூறுகின்றனர்.
அதன் மூலமாக ஔவை என்பவர் பலர் எனக்கொண்டாலும், ஔவை எனக்கொண்டால், அவர் முதியவர் என்றே அனைவரும் கருத காரணம் என்ன என்பதை யாரும் விளக்கவில்லை.
ஔவை அவர் வாழ்த்த காலத்திற்கு ஏற்ப நூல்களை எழுதியுள்ளார் என்பதுதான் உண்மை.
அதியமானும், ஔவையும்
பலரும் அறிந்த அதியமானிடம் நெல்கனி பெற்ற ஔவை சங்கக்காலத்தை சேர்ந்தவர் ஆவார். அதியமானின் காலம் கி.பி முதலாம் நூற்றாண்டு ஆகும்.
அந்த காலத்தில் வாழ்ந்த ஔவை அவர்கள் எழுதிய நூல்கள் புறநானுறு, அகநானுறு, நற்றிணை மற்றும் குறுந்தொகையில் இடப்பெற்றுள்ளன.
அவர்கள், அந்த பாடலில் சேரன், சோழன் மற்றும் பாண்டியனை பற்றியும், பல சிற்றரசர்களை பற்றியும், சாதாரண குடிமக்களை பற்றியும் விவரித்துள்ளார்.
![]() |
அதியமானும், அவ்வையும் |
அங்கவை மற்றும் சங்கவை திருமணம்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் மகள்களுக்கு, பாரி இறந்தபின் ஔவை அவர்கள், பாரியின் நண்பரும், புலவரும் ஆன கபிலருடன் சேர்ந்து திருமணம் செய்து வைக்கின்றார்.
இந்த நிகழ்வு மற்றும் பாரியின் கோடை தன்மையை பற்றி அவர் பல்வேறு பாடல்கள் எழுதியுள்ளார்.
இந்த நிகழ்வுகள் நடந்த காலமானது கி.பி 10 ஆம் நூற்றாண்டுக்கும் முன்பாக இருக்கும் என கருதப்படுகின்றது. இந்தக்காலத்தை இடைக்காலம் என கூறுவார்கள்.
சோழர்களின் காலம்
கி.பி 12 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஔவை அவர்கள் சோழர்களையும், தனக்கு உணவளித்த ஒரு மனிதனை(அசதி) பற்றி பாடியுள்ளார்.
இக்காலக்கட்டத்தில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை மற்றும் அசதிக்கோவை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
![]() |
நந்தி |
சமயக்காலம்
அயல்நாட்டவர்களின் வருகையாலும், மக்களிடம் அவர்கள் விதைத்த தவறான சிந்தனைகள் காரணமாகவும், பாரம்பரியமாக பின்பற்றிய கலாச்சாரத்தில் சிதைவுகள் ஏற்பட்டன.
இதனை போக்கும் விதத்தில் அக்காலத்தில் வாழ்ந்த, நமது தமிழ்க்குடிகள் சமயத்தில் உள்ள நற்சிந்தனைகளை மக்களுக்கு போதித்தனர். இந்தக்காலத்தை சமயக்காலம் என்கின்றோம்.
இக்காலத்தில் வாழ்ந்த ஔவை அவர்கள், ஔவைக்குறள் மற்றும் விநாயகர் அகவல் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
இவர் எழுதிய விநாயகர் அகவல், இன்றளவும் விநாயகரை போற்ற முதலாக பயன்படுத்தப்படுகிறது.
இன்றளவும் தமிழ் மக்கள் பெரும்பாலும் கேட்கக்கூடிய பாடலாக இருப்பதும், ஔவை பெருமாட்டி எழுதிய விநாயகர் அகவல் என்பது மிகையாகாது.
பிற்காலம்
கி.பி 16 முதல் கி.பி 18 ஆம் நுற்றாண்டுகள் வரைஉள்ள காலத்தை பிற்காலம் என்கின்றோம். இக்காலத்தில் வாழ்ந்த ஔவை அவர்கள் தமிழறியும் பெருமான் கதை, பந்தன் அந்தாதி போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
![]() |
திருவள்ளுவர் |
ஔவை, திருவள்ளுவரும்
மதுரை தமிழ் சங்கத்தில் திருக்குறளை அரகேற்ற முடியாமல் தவித்த திருவள்ளுவருக்கு, ஔவை அவர்கள் உதவியதாகவும், அதன் பின்னர் திருக்குறள் அரங்கேற்றப்பட்டது என்றும் செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.
இந்த செய்தியானது பெரும்பாலான மக்களிடையே இன்றளவும் நம்பப்படுகிறது. இவற்றை பொய்யென நிரூபிக்க எவ்விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
ஆக, திருவள்ளுவரின் காலமாக கருதப்படும், கிறிஸ்து பிறப்பு முன்பே ஔவை பெயர்கொண்ட புலவர் வாழ்ந்துள்ளார் என தெரியவருகிறது.
ஔவையும், இறைவனும்
ஔவை பெருமாட்டி அவர்கள் முதியவராக கருத காரணமாக அமைவது, ஔவை அவர்கள் காரைக்கால் அம்மையார் போல, எம்பெருமான் ஈசனிடம் இளமையிலேயே முதியவர் போன்ற தோற்றம் வேண்டும் என வரம் பெற்றார் என செய்திகள் கிடைக்கின்றன.
அதியமான் அளித்த நெல்லிக்கனியின் காரணமாக, ஔவை அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு வாழ்ந்தார் எனவும், பின்னர் கயிலாயத்தை அடைந்தார் எனவும் நம்பப்படுகிறது.
எவ்வாறாக இருப்பினும், ஔவை பெருமாட்டி அளித்த கொடையானது விலைமதிப்பற்றது.
![]() |
ஔவையார் கோவில் |
முடிவுரை
ஔவையின் காரணமாக, தமிழும், தமிழ்க்குடிகளின் பெருமையும் இன்றளவும் நிலைத்து நிற்கின்றது என்பது தான் உண்மை.
0 Comments