Ticker

6/recent/ticker-posts

தமிழரும், திராவிடமும் | தமிழர் வாழ்வியல்

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

நம்மில் பலருக்கு திராவிடத்திற்கும், தமிழகத்திற்கும் சரியான வித்தியாசம் தெரியாது. பலர் தமிழன் என்பதும், திராவிடம் என்பதும் ஒன்று என்று நினைக்கிறார்கள்.

ஏறக்குறைய இரண்டும் ஒன்றாக தெரிந்தாலும், உண்மையில் முழுவதும் உண்மையில்லை என்பதே உண்மை தான்.

இந்த பதிவில் திராவிடத்திற்கும், தமிழனுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • திராவிடம்
  • திராவிடத்தின் அரசியல்
  • தமிழரா? திராவிடரா?

திராவிடம்

திராவிடம் என்பதை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் தமிழ் மொழியில் இருந்து பிறந்த மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளு ஆகிய மொழிகளை பேசும் நாடுகளை உள்ளடக்கிய பகுதியில் வாழும் மக்களை முழுமையாக குறிக்க பயன்படும் ஒரு சொல்.

தற்பொழுது திராவிடர்களாக கருதவேண்டிய தெலுங்கர்கள், கன்னடர்கள் மற்றும் மலையாளிகள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று கூறுவதில்லை.

உண்மையில் அவ்வாறு கூறப்பட வேண்டிய அவசியமும் இல்லை என்பது தான் உண்மை. 

காரணம் என்று மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ, அன்றே! திராவிடம் என்ற ஒன்றும் அழிந்துவிட்டது.

Indian language Wikipedias word cloud based on number of articles
Indian languages

இதை நன்கு உணர்ந்த மலையாளிகள், கன்னடர்கள் மற்றும் தெலுங்கர்கள் தங்களுடைய மொழியின் மீது கொண்ட பற்றை காட்டவே தங்களை மொழியால் வெளிக்காட்டிக்கொள்கின்றார்கள்.

சரி. அவர்கள் மொழியின் மீதுக்கொண்ட பற்றால் தங்களை மொழியால் கன்னடர்கள், மலையாளிகள் மற்றும் தெலுங்கர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்றால் தமிழர்கள் மட்டும் ஏன் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள்?.

உண்மையில் தமிழர்களுக்கு மொழிப்பற்று இல்லையா? அல்லது தங்களை திராவிடர்கள் என சொல்லிக்கொள்ள காரணம் என்ன? என்ற கேள்வி நம்மில் பலருக்கு வரலாம்.

இவ்வாறு கூறிக்கொள்ள பலவிதமான, ஆழமான கருத்துக்கள் உள்ளன. அவைகளை அறிவதன் மூலமாக நாம் ஒரு முடிவிற்கு வரலாம்.


திராவிடத்தின் அரசியல்

அரசியல் உண்மையை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் சில தகவல்களை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தமிழகத்தின் பூர்வக்குடி மக்களின் ஜாதிக்கு ஆதிதிராவிடர் என்று பெயரிட்டனர். உண்மையில் ஆதிதிராவிடர் என்பது தமிழரை குறிக்குமா?.

Dravida nadu
திராவிட நாடு

அப்படியென்றால், கேரளர், கன்னடர், தெலுங்கர் மற்றும் துளுவர் மக்களில் மட்டும் பூர்வக்குடிகளுக்கு ஆதிகேரளர், ஆதிதெலுங்கர், ஆதிகன்னடர் மற்றும் ஆதிதுளுவர் என ஏன் வைத்தனர்?.

பிற மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் அரசியல் செய்த பலரின் சூழ்ச்சியின் காரணமாகவே, ஆதித்தமிழர் என பெயரிடாமல் தடுத்து, திராவிடரும், தமிழரும் ஒரே சொல் என்று மக்களை முட்டாளாக்கினர்.


தமிழரா? திராவிடரா?

நமது தாய்மொழி, எந்த மொழியையும் சாராமல் தனித்து இயங்கும் வல்லமை கொண்டது.

ஆதி முதல் தனித்து இயங்கும் மொழியை மட்டும் திராவிடம் என்று கூறி, ஆதியான தமிழ் மொழியில் பிறந்து, வடமொழியில் கலந்த மற்ற மொழிகளை தனித்தும் பேசுவது எவ்வாறு சரியாக இருக்க முடியும்.

தமிழ் மொழியில் இருந்து பிறந்த மொழிகளை குறிக்க பயன்பட்ட திராவிட மொழிகள் என்பது, இன்று தமிழை மட்டுமே குறிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது நமது அறியாமையால், நமது தாய் மொழிக்கு நேர்ந்த இழிவு. தமிழின் பெருமைகளை கடல்கடந்து சென்றாலும் அறியலாம்.

Thai Engal Thamizh Naadey
தாய்த்தமிழ் நாடு

ஆனால் தமிழகத்தில் திராவிடம் என்ற சொல்லால், தமிழ் நசுக்கப்படுகிறது. 

திராவிடர் என்ற சொல்லால் கேரளர், கன்னடர், தெலுங்கர் மற்றும் துளுவர்கள் பயன்படுத்த விரும்பவில்லை.

அப்படியிருக்க, தமிழருக்கு எதற்கு திராவிடம் என்ற சொல் என்பதை யோசித்து பாருங்கள்.

நம்மில் இருந்து பிறந்த மற்ற மொழிகள் தங்களை தங்களுடைய பெயரால் பெருமைப்பட்டு கொண்டு இருக்க, நாம் மட்டும் அவ்வாறு இல்லாமல் இருப்பது. நாம் நமது தாய் மொழிக்கு ஏற்படுத்தும் கலங்கம் ஆகும்.

தமிழராக யோசித்து பாருங்கள் புரியும். திராவிடம் என்ற ஒன்று இப்பொழுது தேவையா? அல்லது வேண்டாமா? என்று யோசியுங்கள்.


முடிவுரை

நம்மை தமிழர்களா தான் அடையப்படுத்த வேண்டுமே  தவிர, திராவிடராக அல்ல. நாம் பல மொழிகளுக்கு தாயாகிய தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்.

நாம், நம்முடைய தாய்க்கு பெருமைதான் சேர்க்க வேண்டுமே தவிர, சிறுமைப்படுத்த கூடாது.

இன்று நாம் இந்தியாவில் நம்மை தமிழராகவும், மற்ற நாடுகளிடம் இந்திராவும் மட்டுமே காட்டிக்கொள்ள வேண்டும். இதில் திராவிடம் என்ற ஒன்று தேவையில்லாத ஒன்று.

Post a Comment

0 Comments