Ticker

6/recent/ticker-posts

தமிழரின் வளைகாப்பு விழா | தமிழர் வாழ்வியல்

தமிழரின் வளைகாப்பு
தமிழரின் வளைகாப்பு

தமிழர்கள் தொன்று தொட்டு பின்பற்றும் சடங்குகளில் ஒன்று வளைகாப்பு விழா. தமிழர்கள் ஆகிய அனைவரும் தங்களுடைய குடும்பத்தில் இந்த விழாவினை கட்டாயமாக கொண்டாடியிருப்பர்.

ஆனால், அதை நம் முன்னோர்கள் பின்பற்ற முக்கிய காரணமாக அமைந்த அதன் உள்ளார்ந்த நோக்கம் பற்றி இன்று பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

நமது முன்னோர்கள் வளைகாப்பு விழாவை முக்கியமாக கொண்டாட காரணம் என்ன என்பதையும், அதன் உள்ளார்ந்த காரணம் என்ன என்பதையும், இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.

பொருளடக்கம்

  • வளைகாப்பு வைபவம்
  • கர்ப்பகாலத்தில் ஏற்படும் மாற்றங்கள்
  • கைகளில் காப்பு
  • பல்வகை சோறும், பலகாரமும்
  • தாய்வீடும், தலைப்பிரசவமும்


வளைகாப்பு வைபவம் 

பெரும்பாலும் முதல்முறையாக கருவுற்ற பெண்களுக்கு, பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஏழாவது மாதத்தில் பெண்ணுடைய புகுந்த வீட்டிற்கு வந்து நடத்தப்படும் விழவே வளைகாப்பு ஆகும்.

கண்ணாடி வளையல்கள்
கண்ணாடி வளையல்கள்

கருவுற்ற பெண்ணிற்கு தாய்மார்கள் அனைவரும் நலங்கு வைத்து, கண்ணாடி வளையல்கள் அணிவித்து, ஆரத்தி எடுத்து அட்சதை தூவி வாழ்த்துவார்கள். பின்னர், அப்பெண்ணை பிறந்த வீட்டிற்கு அழைத்து செல்வார்கள்.

நமது முன்னோர்கள், வளைகாப்பு விழாவை நடத்த முக்கிய காரணம், தலைப்பிரசவம் பெண்களுக்கு அதிக பயத்தை ஏற்படுத்தும். 

அதுமட்டும் இல்லாமல் பிரசவம் நன்றாக நடக்க வேண்டும் என்ற கவலையும், பயமும் அவர்களை ஆட்கொண்டு இருக்கும்.

இதை மனதில் கொண்டே பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள் கூடி வந்து, உன்னை பத்திரமாக பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கின்றோம் என்று நம்பிக்கை அளிக்கும் விழாவாக வளைகாப்பு நடத்தப்படுகிறது.


கர்ப்பகாலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

முதல் குழந்தையை பெற்று எடுக்க போகும் பெண்களுக்கு, பிரசவத்திற்கு முன்பாக வளைகாப்பு என்னும் சடங்கை தொன்று தொட்டு பின்பற்றி வருகின்றனர்.

இதற்கு பின்னால் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. முதல் குழந்தையை பெறப்போகும் கர்ப்பிணி பெண்கள் மனம் மற்றும் உடல் ரீதியில் பல்வேறு மாற்றங்களை உணர தொடங்குவார்கள். 

வளைகாப்பு
வளைகாப்பு விழா

இதனால் பிரவசவத்தை நினைத்து அச்சப்படுவார்கள். இதனால்  குழப்பத்திற்கு ஆளாகவும் செய்வார்கள்.

வாய்க்கு ருசியாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் குமட்டல் மற்றும் வாந்தி வரும் என்கின்ற அச்சத்தில் சாப்பிட தயங்குவார்கள். இதனால் சரியாக சாப்பிட முடியாமல் அவதிப்படுவார்கள்.


கைகளில் காப்பு

ஒரு பெண் கருவுற்று இருக்கும் பொழுது, அவளது உடல் மற்றும் மனநிலை, அக்குழந்தையை பெரும்பாலும் சார்ந்து இருக்க வைக்கும்.

அதாவது, கருவுற்ற பெண் மகிழ்வாக இருக்கும் பட்சத்தில், அவளது வயிற்றில் இருக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். 

அதுவே, அவள் கவலையில் இருக்கும் பட்சத்தில், குழந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும்.

அந்த பெண்ணிற்கு வளைகாப்பின் பொழுது, மணிக்கட்டு முதல் முழங்கை வரை வளையல்கள் அணிவித்து விடுவார்கள். 

வளைகாப்பு
வளைகாப்பு

அந்த வளையல்களின் ஓசையானது குழந்தையை துடிப்பாக வைத்திருக்க உதவும்.

அதுமட்டுமல்லாமல், குழந்தை மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க உதவுகிறது. இதனால் குழந்தையானது ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும், ஏழாவது மாதத்திற்கு மேல் தாம்பத்ய உறவில் இருக்க கூடாது. 

கணவன், மனைவியை பார்க்க வரும் சமயத்தில் கூட பெண்ணானவள் பார்த்து நடக்க வேண்டும் என கருதியே எளிதில் உடையக்கூடிய கண்ணாடி வளையல்களை அணிவிப்பார்கள். இதை கருதியை வளையல்களை காப்பாக கருதினார்கள். 


பல்வகை சோறும், பலகாரமும்

கருவுற்ற பெண்கள் குறிப்பிட்ட சில மாதங்கள் வரை குமட்டல் மற்றும் வாந்தியினால் அவதிப்பட்டு இருப்பார்கள். அவர்களுக்கு ஏழாவது மாதத்தில் அது முற்றிலும் நின்றுயிருக்கும்.

அப்பொழுது, அவர்களுக்கு புளிப்பு சுவை என்பது மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதை கருதியே! பல்வகையான சோறுகளை வளைகாப்பின் பொழுது கொடுப்பார்கள்.

பல்வகை சோறு
பல்வகை சோறு

தாய்வீடும், தலைப்பிரசவமும்

தலைப்பிரசவத்தின் பொழுது, தாயானவள் தன்னையும் இவ்வாறு தான் சுமந்து இருப்பாள் என்று தாய் மீது அதீத பாசம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல், தாயின் அருகில் இருப்பது பாதுகாப்பாக உணருவார்கள்.

இதை கருதியே! பெண்ணை தலைப்பிரசவத்தின் பொழுது, பெண்ணை தாய் வீட்டிற்கு அழைத்து செல்வார்கள்.


முடிவுரை

நமது முன்னோர்கள் எதை செய்தாலும், அதன் பின்னணியில் ஏதேனும் ஒரு அறிவியல் உண்மை மறைந்திருக்கும் என்பது ஆழமான உண்மை.

தமிழனாய் இருக்க பெருமிதம் கொள்வோம்!

Post a Comment

0 Comments