விருந்து |
பண்டாரத்தின் வேடத்தில் இருந்த விக்ரமாதித்தன், குணவதியிடம் தனவதியை போல நாமும் மன்னருக்கும், அமைச்சர்கள் அனைவருக்கும் விருந்து கொடுத்து உபசரிக்கலாம்.
அதை அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இரு என்று கூறினான்.
இதைக்கேட்ட குணவதி ஆச்சரியம் கலந்த, ஆனந்தத்துடன் விக்ரமாதித்தனை பார்த்தாள்.
காலை பொழுதும் புலர்ந்தது. மன்னரும், அமைச்சர்களும் தனவதியின் உண்ட உணவை பற்றி பெருமை கூறினார்கள்.
இதைக்கேட்ட குணவதி, மன்னரையும், அமைச்சர் பெருமக்களையும், தன்னுடைய வீட்டிற்கு மாலை விருந்து உண்ண வருமாறு அழைத்தாள்.
விருந்து |
மன்னா! தனவதியின் அளவிற்கு இல்லாவிடினும், என்னால் முடிந்த அளவிற்க்கு தங்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் விருந்தளிக்க விரும்புகின்றேன். மறுக்காது வரவேண்டும் எனக்கூறினாள்.
இதைக்கேட்ட தனவதி, குணவதி தான் கொடுத்ததை போல கொடுக்க இயலாது என்று குணவதி தன்னுடைய தோல்வியை ஏற்றுக்கொண்டாள் என்று எண்ணி பெருமைக்கொண்டாள்.
மன்னரும், அமைச்சர்களும் விருந்து உண்ண சம்மதம் தெரிவித்தனர். சம்மதம் பெற்றவுடன் குணவதி வீட்டை நோக்கி நடந்தாள்.
விக்ரமாதித்தன், வேதாளத்தை அழைத்து, இதுவரை யாரும் கனவில் கூட காணக்கிடைக்காத அலங்காரத்தையும், அறுசுவை உணவுகளையும் தயார் செய்ய சொன்னான்.
வேதாளமும், இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அழகிய மலர்களை கொண்டு பந்தலை அமைத்தது. வீட்டிற்கு முன்பு வண்ணமயமான மலர்களும், அதிலிருந்து வரும் மனமும் மனதை மயக்கும் வண்ணம் அமைந்தது.
மலர்க்கொத்து |
குணவதி, தன்னுடைய வீட்டின் நிலையைக்கண்டு, உண்மையில் தன்னுடைய வீடு தானா? என சந்தேகம் கொண்டாள்.
பின்னர், சமைத்து வைத்திருந்த உணவுப்பண்டகளை கண்டு வாயடைத்து போனாள்.
பலவகையான இனிப்பு வகைகள், எண்ணற்ற கூட்டுப்பொரியல்கள், பலதரப்பட்ட பழரசங்கள் என தயார் செய்யப்பட்டு இருந்தன.
அரசனும், அமைச்சர்களும் அமர்ந்து உணவு உண்ண அழகான பலவகையான நாற்காலிகளும், மேசைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.
இதைக்கண்ட குணவதி ஆச்சரியத்தில் வாயடைத்து போனாள். பின்னர், மன்னனும், அமைச்சர் பெருமக்களும் வீட்டிற்கு வருகை புரிந்தனர்.
குணவதியின் வரவேற்பையும், வீட்டில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தையும் கண்டு வாயடைத்து போயினர். அங்கிருந்த உணவு பொருட்களை கண்டு மெய்மறந்து போனார்கள்.
குணவதி, இவ்வளவு சிறப்பாக வரவேற்பு ஏற்பாடு செய்துவிட்டு, மிக பணிவாக தனவதியின் அளவிற்கு இல்லாவிடினும், தன்னால் இயன்றவரை செய்கிறேன் என்று எவ்வளவு பணிவாக பேசினாள் என்று பெருமை பேசினார்கள்.
பழரசம் |
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய வாழ்நாளில் இவ்வளவு ருசிமிக்க உணவுகளை நாங்கள் கனவில் கூட கண்டதில்லை. பழங்களும், பழரசங்களும் எவ்வளவு அருமையென புகழ்ந்து தள்ளினார்கள்.
குணவதி, இதையெல்லாம் கேட்டும் மிகவும் பணிவுடன் நின்றாள். பின்னர் பண்டாரத்தின் வேடத்தில் இருந்த விக்ரமாதித்தனை பார்த்து நன்றி கூறினாள்.
குணவதியின், விருந்து உபசரிப்பை கேள்விப்பட்ட தனவதி பொறாமை தீயில், மீண்டும் எவ்வாறாவது குணவதியை அசிங்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்து, அடுத்த திட்டத்தை திட்டினாள்.
0 Comments