Ticker

6/recent/ticker-posts

"க்ரீன் டீ" குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் | ஆரோக்கியம்

க்ரீன் டீ
க்ரீன் டீ

Benefits of Drinking "Green Tea" | Health

இன்றைய தலைமுறையில் பெரும்பாலும் விரும்பி குடிக்கும் ஓர் பானம் தான் "க்ரீன் டீ". வாலிபர்கள் மட்டுமின்றி வயோதிகர்கள் என அனைவரும் விரும்பி குடிக்கும் ஒரு பானமாக "க்ரீன் டீ" ஆகும்.

சிலருக்கு உண்மையில் "க்ரீன் டீ" குடிக்கலாமா?, அது குடிப்பதால் நன்மைகள் ஏற்படுமா? என்கின்ற சந்தேகமும் இருந்து வருகின்றது.

பொருளடக்கம்

  • க்ரீன் டீ
  • க்ரீன் டீயால் ஏற்படும் நன்மைகள்
  • கவனிக்க வேண்டிய சில விடயங்கள்


க்ரீன் டீ

உலகிலேயே ஜப்பான் நாட்டினர் தான் அதிகமாக க்ரீன் டீயை குடிக்கிறார்கள். இதன் காரணமாகவே, அவர்கள் நீண்ட ஆயுளுடனும், இளமையுடனும் இருக்கின்றனர்.

உலகிலேயே மிகவும் பிரபலமான டீ என்றாலும், அது க்ரீன் டீ தான். உண்மையில், க்ரீன் டீயின் சுவையானது குறைவாக இருக்கலாம். 

அதுபோல, இதில் எண்ணற்ற பல நன்மைகள் இருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.

க்ரீன் டீ
க்ரீன் டீ


க்ரீன் டீயால் ஏற்படும் நன்மைகள்

பெரும்பாலும், க்ரீன் டீ குடிப்பவர்கள் நன்றாக தெரிந்த ஒரு நன்மை என்றால் அது உடல் பருமனை குறைக்கும் என்பது தான். 

க்ரீன் டீ குடிப்பதால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரைக்க உதவுகின்றது.

பெரும்பாலும், அதிக உடல் பருமன் கொண்டவர்கள், அதிக கொலஸ்ரால் உள்ளவர்களும் க்ரீன் டீ குடிக்க மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது.

இது கெட்டக்கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல், கெட்டக்கொழுப்பு சேர்வதையும் தடுக்க உதவுகின்றது. 

இதனால் மாரடைப்பு வருவதையும், புற்றுநோய் வருவதையும் தடுக்க பயன்படுகின்றது.

தினமும் க்ரீன் டீ குடிப்பதால் வயதான தோற்றத்தை குறைத்து புத்துணர்ச்சியையும் கொடுக்கின்றது. 

அதுமட்டுமல்லாமல், சருமத்தில் உள்ள இறந்த செல்களையும், பாதிப்படைந்த செல்களையும் புதுப்பிக்க உதவுகின்றது.

க்ரீன் டீ
க்ரீன் டீ

இந்த க்ரீன் டீயில், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய அமினோ அமிலமான தயனைன் உள்ளதால், இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் அமினோ அமிலத்தை வழங்கும்.

இதனால், நமக்கு எண்ணற்ற நோய்கள் வருவதையும் தவிர்க்க செய்யலாம்.

இந்த க்ரீன் டீ குடிப்பதால், வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கி, புத்துணர்ச்சி அளிக்க செய்கின்றது.

தாது உப்புக்களும், விட்டமின் சியும் நிறைந்த டீ என்பதால், இதை கொதிக்க வைப்பதற்கு பதிலாக, கொதிக்க வைத்த தண்ணீரில் தேயிலை துளையோ? அல்லது டீ பேக் கையோ போட்டு மூடி வைத்து, சாறு இறங்கியதும் பருகலாம்.

அதுமட்டுமல்லாமல், இத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் சேர்த்து பருகலாம். இதனால், இதில் விட்டமின் சி கூடுதலாக இருக்கும்.

இந்த க்ரீன் டீ குடிப்பதால், இரத்த அழுத்தம் குறைந்து, இதயநோய் ஏற்படுவதில் இருந்து தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, இந்த க்ரீன் டீ மூளைக்கு புத்துணர்ச்சியும் அளிக்க வல்லது.

கவனிக்க வேண்டிய சில விடயங்கள்

நாம் தினமும் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

சிலருக்கு அசிடிட்டி பிரச்சனை ஏற்படும் என்பதால், இதை வெறும் வயிற்றில் அருந்துவதை தவிர்க்கலாம்.

மாறாக, காலை 11 மணி மற்றும் மாலை 5 மணி போன்ற உணவு இடைவெளிகளில், க்ரீன் டீ அருந்துவது மிக நல்லது.

டீ
டீ

ஒரு நாளைக்கு சுமார் மூன்று கப் வரை க்ரீன் டீயை அருந்தலாம்.

குறிப்பாக, க்ரீன் டீயில் பால் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடக்கூடாது. இதனால் க்ரீன் டீ உடைய தன்மையானது மாறிவிடும்.


முடிவுரை

க்ரீன் டீ குடிப்பதால் நன்மைகள் பல கிடைப்பதால் தயங்காது பருகி, உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வையுங்கள்.

Post a Comment

0 Comments