Ticker

6/recent/ticker-posts

பேசாமடந்தையும், பத்து வாயில்களும் | விக்ரமாதித்தன் கதைகள்

வீரர்
வீரர்

கதையின் தொடர்ச்சி...

விக்ரமாதித்தன் பண்டாரத்தின் வேடத்துடன், குணவதி மன்னரிடமிருந்து வாங்கி கொடுத்த பல்லாக்கு, வீரர்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு காடு, மலை, ஆறு என அனைத்தையும் கடந்து பேசாமடந்தை வசிக்கும் நகருக்கு வந்து சேர்ந்தான்.

அழகான நகரில் இருபுறமும் பல அடுக்கு மாளிகைக்கு மத்தியில் வண்ணமயமான அழகிய அரண்மனையை கண்டான். பேசாமடந்தை வசிக்கும் மாளிகை என புரிந்துக்கொண்டான்.

நகரில் நடந்து செல்லும் பொழுது, விக்ரமாதித்தன் முன்பே அனுப்பி வைத்திருந்த, அவனது தம்பியான பட்டி ஒரு திண்ணையில் பரமபதம் விளையாடி கொண்டிருப்பதை கண்டான்.

விக்ரமாதித்தனும், பட்டிக்கு சைகை கொடுக்க, அதை பட்டியும் புரிந்துக்கொண்டு தனியாக புறப்பட்டான். 

விக்ரமாதித்தன், மன்னர் கொடுத்த பொற்காசுகளில் ஆயிரம் பொன்னை வீரர்களிடம் கொடுத்து, தான் வர ஒரு மாதக்கலாம் ஆகும்.

அழகிய இளவரசி
அழகிய இளவரசி

அதுவரையில், நீங்கள் அனைவரும் விடுதியில் தங்கி இருங்கள். என்னை எவரும் தேட வேண்டாம் எனக்கூறி புறப்பட்டு சென்றான்.

பின்னர், பண்டார வேடத்தில் இருந்து கலைந்து, தன்னுடைய சுய உருவத்திற்கு வந்தான். 

பின்னர் பட்டி விக்ரமாதித்தனை, தான் தங்கியிருக்கும் பாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றான்.

அந்த பாட்டியிடம், விக்ரமாதித்தனை தன்னுடைய அண்ணன் எனக்கூறி அறிமுகப்படுத்தி விட்டு, தான் வைத்திருக்கும் பொற்காசுகளை எண்ண ஆரம்பித்தனர்.

அவர்கள் பொற்காசுகளை எண்ணுவதை பார்த்து பாட்டி, இருவரும் ஏதேனும் தொழில் ஆரம்பிக்க போக்கின்றிர்களா? என கேட்டார்.

அதற்கு பட்டி, இல்லை பாட்டி. நாங்கள் பேசாமடந்தையை பேச வைக்கும் போட்டிகளில் கலந்துக்கொள்ள போகின்றோம் என்றான்.

இதைக்கேட்ட பாட்டி, பேசாமடந்தையை பேச வைக்க வந்த பல பல மன்னர்கள் மொட்டை தலையுடன் சென்றது தான் அதிகம் என கூறினாள்.

இதைக்கேட்ட பட்டி, பாட்டி நீங்கள் பேசாமடந்தையை பற்றி எங்களிடம் கூறினால், அது எங்களுக்கு உதவியாக இருக்கும் என்றான். 

அதற்கு பாட்டியும் சரி என்று பேசாமடந்தையை பற்றி கூறத்தொடங்கினாள்.

பேசாமடந்தை வசிக்கும் அரண்மனையை அடைய பத்து வாயில்களை கடந்து செல்ல வேண்டும்.

முதல் வாயிலில், பெரிய கொடி பறக்கவிடப்பட்டு இருக்கும், அதன் அடியில் பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டு இருக்கும், அங்கு சில கணக்கர்களும் இருப்பார்கள்.

வாயிற்கதவு
வாயிற்கதவு

முதல் வாயிலில் உள்ள மணியை அடித்தால், கணக்கர்கள் வந்து ஆயிரம் பொன்னை கேட்பார்கள். அவர்களிடம், அதை உடனடியாக கொடுக்க வேண்டும்.

பின்னர், அவர்கள் விருந்து வைப்பார்கள், அதில் பாதி வெந்தசோறும், பாதி வேகாத சோறும், உரித்த பழமும், உரிக்காத பழமும் இருக்கும்.

பின்னர் இரண்டாவது வாயிலை அடையலாம். அங்கு மூன்று புதுமைகள் இருக்கும். அதில் ஒன்று நாற்காலியை போடும், ஒன்று தலையை மொட்டை அடிக்க ஆரம்பிக்கும். 

அவ்வாறு மொட்டை அடிக்கப்பட்டால் நீங்கள் வெளியேற்ற படுவீர்கள். பின்னர் மூன்றாவது வாயிலை அடைந்தால், குத்துச்சண்டை வீரர்கள் இருப்பார்கள் அவர்களிடம் போரிட்டு, வென்று தான் நான்காவது வாயிலை அடைய முடியும்.

அவ்வாறு அடைந்துவிட்டால், அங்கு கருங்குரங்குகள் இருக்கும். அவற்றை சாமர்த்தியமாக ஏமாற்றி ஐந்தாவது வாயிலுக்கு செல்லவேண்டும். இல்லையேல், அவைகள் உங்களுக்கு தொல்லை கொடுக்கும்.

வீரன்
வீரன்

ஐந்தாவது வாயிலை அடைந்தால், அங்கு ஒரு புலி இருக்கும். அதனிடமிருந்து தப்பித்து ஆறாவது வாயிலுக்கு சென்றால், அங்கு ஒரு யானை இருக்கும்.

அதையும் கடந்து ஏழாவது வாயிலுக்கு சென்றால், ஒரு தரைக்கிணறு இருக்கும். அதில் விழுந்து இறக்காமல் இருக்க வேண்டும். 

பின்னர், எட்டாவது வாயிலிற்கு சென்றால், அங்கு ஒரு சேறு நிறைந்த வாய்க்கால் ஒன்று இருக்கும். 

அதில் இறக்கி மறுபுறம் செல்லவேண்டும். பின்னர் ஒரு நத்தைக்கூட்டில் தண்ணீரும், ஒரு ஓலையும் இருக்கும்.

அந்த நத்தைக்கூட்டில் உள்ள பாதி நீரைக்கொண்டு, உடலை சுத்தமாக்கி கொண்டுமீதியை அங்கு வைக்க வேண்டும்.

பின்னர் ஒன்பதாவது வாயிலுக்கு சென்றால், வழுக்கும் தரை ஒன்று இருக்கும். அதில் நடந்து செல்ல வேண்டும். அதில் வழுக்கி விழுந்தால் தலை நொறுங்கி போய்விடும்.

அதைக்கடந்து பத்தாவது வாயிலை அடைந்தால், இருள் நிறைந்த ஆயிரம் கால் மண்டபம் இருக்கும். இருளில் தூணில் மோதி மண்டை உடைந்து சாகாமல் இருந்தால், பேசாமடந்தை வசிக்கும் அரண்மனைக்கு செல்லலாம்.

அந்த அரண்மனையில் இரவு பகல் என எப்பொழுதும் ஆயிரம் விளக்குகள் எரிந்துக்கொண்டே இருக்கும். அதனால் இரவு எது, பகல் எது என்று யாரும் அறிய இயலாது.

அந்த அரண்மனையில் விசித்திரமான பலவகையான நவரத்தினங்கள் பதிக்கப்பெற்ற ஒரு கட்டில் இருக்கும். அந்த கட்டிலில் தலைமாடு எது, கால்மாடு எது என அறிந்து உட்கார வேண்டும்.

வாசனை திரவியம்
வாசனை திரவியம் 

தவறாக அமர்ந்தால், அந்த கட்டிலில் இருந்து புதுமைகள் தோன்றி மொட்டையடித்து, சாணத்தை தலையில் ஊற்றி, கரும்புள்ளி மற்றும் செம்புள்ளி குத்தி பலவிதமாக அசிங்கப்படுத்தி வெளியே தள்ளிவிடும்.

அதுவே சரியாக அமர்ந்தால், வேறு புதுமைகள் தோன்றி முகம் பார்க்கும் கண்ணாடியளித்து, நறுமணமும் வீசும் திரவியங்கள் பூசும், பணிவாக பணிவிடைகள் செய்யும். அவைகளை சொர்க்கத்தில் கூட பார்த்து இருக்க இயலாது.

அதுமட்டுமல்லாமல், பேசாமடந்தையும் பல வித சோதனைகளை வைப்பாள். அதிலிருந்தும் தப்பித்து விடிவதற்குள் மூன்று வார்த்தைகளை பேச வைத்து விடவேண்டும்.

அவ்வாறு பேசவைத்து விட்டால், அவளை மணந்துக்கொள்ளலாம். இல்லையேல், அசிங்கப்படுத்தி வெளியேற்றப்படுவார்கள் எனப் பாட்டி கூறி முடித்தாள்.

தொடரும்...

Post a Comment

0 Comments