இராவணன் தமிழரா? |
இராவணன் தமிழரா? அல்லது வடநாட்டினரா? என அறியும் முன்பு சிலவற்றை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இராவணனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், புராணங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
காரணம், புராணங்களின் வழியாகவே, இராவணனை பற்றிய நல்ல கருத்துக்களும், தீயக்கருத்துகளும் தெரிய வருகின்றது.
பொருளடக்கம்
- தமிழகத்தில் இராவணன்
- வடஇந்தியாவில் இராவணன்
- இராவணனின் கோவில்கள்
- சிவதாண்டவ ஸ்தோஸ்திரம்
தமிழகத்தில் இராவணன்
இன்று பெரும்பாலும் இராவணன் தமிழன் என்றே நினைக்கின்றோம். முதலில் அவ்வாறு நினைப்பதற்கான காரணத்தை தெரிந்துக்கொள்வோம்.
இராவணன் ஆண்ட இடமான இலங்கை தமிழர்களின் பூர்விகமான இடம் என்பது தான், இராவணன் தமிழன் என்பதற்கு முதல் காரணமாக உள்ளது.
இராவணன் தமிழ் மீத்துக்கொண்ட பற்று, இராவணன் தமிழில் எழுதிய நூல்கள் இரண்டாவது காரணமாக அமைகின்றது.
தமிழர்களின் கோவில் சிற்பங்களில், இராவணனின் சிவபக்தியை சிறப்பிக்கும் பல்வேறு சிற்பங்களை காணலாம். இது தமிழர்களின் கட்டிடக்கலையில் உள்ள குறிப்பிட்ட சிறப்பம்சம் ஆகும்.
இவையன்றி வேறு எவ்வித காரணிகளும் இல்லை.
தமிழ்நாடு |
வடஇந்தியாவில் இராவணன்
இப்பொழுது இராவணன் வடநாட்டவர் என்பதற்கான காரணங்களை தெரிந்துக்கொள்வோம்.
இராவணன் உண்மையென ஏற்க நினைப்பதற்கான முதல் காரணம் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே!.
அவ்வகையில் இராவணன் நொய்டா அருகில் உள்ள பிஸ்ராக் என்ற ஊரில் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இராவணனின் மனைவியான மண்டோதரி மத்தியப்பிரதேசத்தில் உள்ள விதிஷா என்ற ஊரில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம், குஜராத், மற்றும் இராஜஸ்தான் மாநிலத்தில் வாழும் கொண்ட் இனப்பழங்குடி மக்கள், தங்களை இராவணனின் வழித்தோன்றலாக கருதுகின்றனர்.
நொய்டா |
இராவணனின் கோவில்கள்
இராவணனுக்கு என்று பல கோவில்கள் வடநாட்டில் உள்ளன. அதில் இராவணன் பிறந்த ஊராக கருதப்படும் பிஸ்ராக்கில் ஓர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில், இராவணன் இறந்த தினத்தில் துக்கம் ஆனது அனுசரிக்கப்படுகிறது.
மத்திய பிரதேசத்தில் உள்ள விதிஷா என்கின்ற ஊரில் வாழும் குப்ஜா என்கின்ற பிராமண பிரிவை சார்ந்தவர்கள், இராவணன் தங்களுடைய முன்னோர் என்று கருதுகின்றனர்.
அங்கு இராவணனுக்கு தனி கோவிலும் உள்ளது. அந்த கோவிலில் தினமும் பூஜைகளும் நடைபெறுகின்றன.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள கான்பூரில் இராவணனுக்கு ஒரு கோவில் உள்ளது. அந்த கோவில் ஆனது, வருடத்திற்கு ஒருமுறை தசரா பண்டிகையின் பொழுது திறக்கப்பட்டு பூஜைகளும், சடங்குகளும் நடைபெறுகின்றது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஜோத்புரில் உள்ள தேவ் இனத்தை சார்ந்த பிராமண மக்கள், இராவணனிற்கான கோவிலை பாராமரிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், பூஜைகளும், தசரா பண்டிகையின் பொழுது துக்கமும், இறந்தவர்களுக்கு செய்கின்ற சடங்கான பிண்டம் வைத்து வழிபடுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் சிலர் தமிழகத்தில் ராவணனுக்கென்று சிறிய கோவில்களையும் கட்டியுள்ளனர். இலங்கையை ஆட்சி புரிந்தததால், அங்கு இராவணனின் பல குறிப்புகள் கிடைக்க பெறுகின்றன.
சிவன் |
சிவதாண்டவ ஸ்தோஸ்திரம்
இராவணன் மிகசிறந்த சிவபக்தன் என்பது அனைவரும் அறிந்ததே!. அந்த இராவணனால் சிவபெருமானை சிறப்பிக்க இயற்றிய சிவதாண்டவ ஸ்தோஸ்திரம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது.
இன்றளவும் மிகவும் பிரசித்தம் பெற்ற பாடலாகவே சிவதாண்டவ ஸ்தோஸ்திரம் உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இராவணன் தமிழ் மொழி மட்டுமல்லாது ஏனைய பல மொழிகள் அறிந்த மகான். அவர் தமிழ் மொழி மட்டுமல்லாது பல மொழிகளில் நூல்களை எழுதியுள்ளார்.
இப்பொழுது சிந்தியுங்கள். தமிழனாக நாம் நினைக்கும் இராவணன் பற்றி நம் மாநிலத்தில் வடமாநிலத்தில் உள்ளது போல ஏதேனும் சடங்குகளும், வழித்தோன்றல்கள் என்று கூறும்படியாக எவரேனும் இருக்கின்றனரா?.
பின்னர் ஏன் இராவணன் தமிழன் என்கின்ற கருத்து மேலோங்கி உள்ளது. காரணம் அரசியல் மட்டுமே. இராமனை வில்லனாக கட்டுவதற்காக, இராவணனை சிறப்பித்து காட்டினார்.
இருவரும் தனித்தனி வழிகளில் சிறந்தவர்கள் தான். இறைவனின் விதியால், அவன் தவறாக எடுத்த ஒரு முடிவால் ஏற்பட்ட விளைவே இவையாவும்.
மொழிகள் |
முடிவுரை
முற்காலத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் எவ்வித பேதமும் பார்க்கவில்லை என்பதே உண்மை. ஆகையால் மொழியால் பிரிவு பட வேண்டாம்.
நாம்மை அடிமையாக்கிய ஆங்கிலத்தை ஏற்றுக்கொண்டோம். உறவாக இருந்த சமஸ்கிருதத்தை ஒரு சாரார் பயன்படுத்தும் மொழியாக மாற்றிவிட்டோம்.
மொழிகள் மக்களை ஒன்றிணைக்கவே உருவாக்கப்பட்டவை. ஆக, மொழிகளால் பிரியாமல் இணைந்து வாழுங்கள். இயன்றவரை மொழிகளை கற்று, திறன்களை மேம்படுத்துங்கள்.
0 Comments