புராணங்களில் இராவணன் |
இராவணன் அறியாத தமிழ் மக்கள் யாரும் இலர் என்பதே மாபெரும் உண்மை. இராமனை அறிந்த யாவரும், இராவணனையும் அறிந்தே ஆக வேண்டும்.
இராவணனை பற்றிய பல முரண்பட்ட தகவல்கள் இன்றளவும், நம்மில் இருந்து வருகிறது என்பது உண்மை தான்.
இந்த பதிவானது இராவணன் நல்லவனா? அல்லது தீயவனா? என்பதை பற்றியது அல்ல. மாறாக, இராவணனை பற்றி நாம் இதுவரை அறியாத, அறிய வேண்டிய சில தகவல்கள் பற்றியதே ஆகும்.
பொருளடக்கம்
- இராவணன்
- புராணங்களில் இராவணன்
- சீதையும், இராவணனும்
- இராவணனின் விதி
இராவணன்
இராவணன் என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அவனுடைய பத்து தலைகள் தான்.
உண்மையில், இராவணனுக்கு பத்து தலைகள் இருந்ததா? என்பது யாருக்கும் தெரியாது.
இராவணனுக்கு பத்து தலைகள் அல்ல. அவன் பத்து கலைகளில் சிறந்தவன் என்ற கருத்தும் உள்ளது.
இராவணன் மாபெரும் ஆற்றல் கொண்ட மகத்தான மன்னன். எண்ணற்ற கலைகளை தன்னகத்தில் கொண்ட, உலகிலேயே தலைசிறந்த சிவபக்தன்.
Lord Shiva, Srilanka |
இவையாவும் நாம் யாவரும் அறிந்ததே. இதில் எவ்விதமான மாற்று கருத்தும் இல்லை. தமிழை உணர்ந்தவர்கள் யாவரும் தனித்துவம் வாய்ந்தவர்களே!.
இராவணன் பற்றி இன்றளவும் தமிழ் மக்களில் பலர் மிகப்பெரிய நல்லெண்ணத்தை கொண்டுள்ளனர். இது மிகவும் மதிக்கத்தக்க ஒன்றே!.
புராணங்களில் இராவணன்
நமது புராணங்களின் வாயிலாக, இராவணனை அனைவரும் அறிவார். புராணங்கள் இல்லை என கூறும் நபர்கள் கூட இராவணன் உண்மையென கூறுவார்கள்.
ஆக, அவர்களும் மறைமுகமாக புராணங்களை ஏற்றுக்கொண்டவர்களே என்பது உண்மை.
முதலில் புராணங்களில் இராவணனை பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.
நமது புராணங்களில் கூறப்பட்டுள்ள பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகன் விஸ்ரவ முனிவருக்கும், அரக்க குல தலைவரான சுமாலி மகள் கைகேசிக்கு மகனாக இராவணன் பிறந்தார்.
இவருக்கு கும்பகர்ணன், வீடணம் (விபிஷ்ணன்) என்ற இரு சகோதரர்களும், சூர்ப்பனகை என்ற ஒரு தங்கையும் இருந்தனர்.
இராவணன் என்பதற்கு பிறர்க்கில்ல பேரழகு கொண்டவன் என்றும், கருமை நிறம் கொண்டவன் என்றும், பேருரிமை கொண்டவன் என்றும் பொருள்.
இராவணனுக்கு இந்திரசித்து, அட்சயகுமாரன், திரிசிரன், அதிகாயன், பிரகஸ்தன், நராந்தகன் மற்றும் தேவாந்தகன் என்று ஏழு மகன்கள் இருந்தனர்.
Statue |
இலங்கையானது, இராவணனின் ஒன்றுவிட்ட அண்ணன் ஆகிய குபேரனுக்காக விஸ்வகர்மா வடிவமைத்து கொடுத்தார். குபேரனிடம் இருந்து இராவணன் இலங்கையும், புஷ்பகவிமானத்தையும் கைப்பற்றினான்.
இராவணனின் வீரத்தில் ஆக சிறந்தவன். சாமவேதத்தில் நிபுணத்துவம் கொண்டவன் என்றும், மருத்துவம் மட்டுமல்லாது பல கலைகளில் தலை சிறந்தவனாகவும் இருந்தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராவணன் மிக சிறந்த சிவபக்தன். தினமும், சிவபெருமானை வணங்குவதற்காக கைலாயம் சென்று வருவான் என்றும், இமயமலையை தகர்த்து இலங்கைக்கு எடுத்து செல்ல முயன்றான் என்றும், இராவணன் சிவபெருமானின் மீதுக்கொண்ட பக்தியை தெரிந்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமில்லாமல், சிவபெருமானை மகிழ்விக்க வீணையை மீட்டும் பொழுது, வீணை நரம்பு அறுபட, தன்னுடைய கையில் இருந்து நரம்பை அறுத்து வீணையை மீட்டினான் என்றும் பலவாறு கூறப்பட்டுள்ளது.
சீதையும், இராவணனும்
தங்கையை அவமதித்ததற்காக, இராமனின் மனைவியான சீதையை கவர்ந்து, பின்னர் சீதையின் அழகில் மயங்கி, தன்னை மணக்க வற்புறுத்தி இலங்கையில் சிறைவைத்தான் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அடைய விரும்பி கைவைத்தால் எரிந்து சாம்பலாகி போவான் என்ற சாபத்தால் மட்டுமே, சீதை மீது கை வைக்காமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், சீதை தன்னுடைய விருப்பம் அன்றி தன்னை தொட்டால் எரிந்துபோவாய் என்று சாபமும் கொடுத்தால் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமாயணம் |
இராவணனின் விதி
இராவணனின் முன்ஜென்மத்தை அறிந்துக்கொண்டால், இது யாவும் முன்பே நிர்ணயிக்கப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ளலாம்.
சீதையை கவரும் பொழுது, தங்கையின் அவமானத்திற்காகவே அவ்வாறு செய்தான்.
ஆனால் சீதையை இலங்கைக்கு கொண்டு வந்ததும் அவனுடைய எண்ணம் மாறியது. இது இராவணனின் விதிப்பயனால் மட்டுமே.
இராவணனும், இராமனும் பிறந்து போர்களை புரிந்தது. மக்களுக்கு தர்மத்தின் மீதான நம்பிக்கையை கொண்டு வரவே ஆகும். இதுவே நமது புராணங்களில் உள்ள அர்த்தமாகும்.
புராணங்களில் உள்ள நல்ல கருத்துக்களை மனதார ஏற்றுக்கொண்டால், அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்க மனம் வராது.
அரசன் மக்களின் கட்டுப்பாட்டில் இருப்பான் என்பதை புரிந்து கொள்ளவே, சீதையை ராமன் காட்டிற்கு அனுப்பினான் என்ற கருத்து உள்ளது.
சீதையை அன்றி வேறொரு பெண்ணை மனதால் கூட நினைக்கத்தவன் ராமன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராவணன், வீரத்தில் சிறந்தவனாக இருப்பினும், தன்னுடைய விதியால் தவறான முடிவை எடுத்தான்.
வீரன் |
இராமனிடம் வீரனாக போரிடாமல், அவனுடைய மனைவியை கவர்ந்தது. அவனுடைய அழிவிற்கு வழிவகுத்தது.
அடுத்தவர் மனைவியின் மீது மோகம் கொள்ளாதவனே சிறந்த வீரன்.
மாபெரும் பக்தனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டனை உண்டு என்பதே நியதி.
இராவணன் தர்மத்திற்கு எதிராக எடுத்த, இந்த ஒரு முடிவே அவனது வாழ்க்கையை மாற்ற காரணமாக அமைந்தது.
முடிவுரை
இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டியது, வீரனானவன் (அரசனானவன்) தர்மத்தின் வழியில் இருந்து மாறும் பொழுது அவனது இராஜ்யம் அழிய தொடங்கும் என்பதே ஆகும்.
பிடிக்காத கருத்துக்களை தவிர்த்து, நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
0 Comments