தீபாவளி |
Tamizhans with Deepavali festival | Tamizhar Vazhviyal
நமக்கு சிறுவயது முதல் பிடித்தமான ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான்.
நாம் கொண்டாடும் தீபாவளி என்றால் புத்தம்புதிய ஆடைகள், பட்டாசு மற்றும் பலகாரங்கள் என எங்கு பார்த்தாலும் மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்.
நமது முன்னோர்கள் கொண்டாடிய தீபாவளி எப்படி இருக்கும் என தெரிந்துக்கொள்ள இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்ளலாம்.
பொருளடக்கம்
- தீபாவளி
- தீபாவளி கொண்டாட காரணங்கள்
- தமிழர்களின் தீபாவளி
- தீபாவளியும், கல்வெட்டு சான்றுகளும்,
- தீபாவளியும், செப்பேடுகளும்
தீபாவளி
புத்தம் புதிய ஆடைகள், பலவகையான இனிப்புகள், பட்டாசுகள் என அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து சிறப்பிக்கும் அருமையான பண்டிகை என்றால் அது தீபாவளி திருநாள் தான்.
அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி, தலைக்கு எண்ணெய் வைத்து (கங்கா ஸ்தானம்) செய்து, புத்தாடைகள் உடுத்தி, இனிப்புகளை பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து பெரியோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டாடுவார்கள்.
தீபாவளி திருநாள் |
தீபாவளி கொண்டாட காரணங்கள்
தீபாவளி பண்டிகை இந்து, சீக்கியம், பௌத்தம் மற்றும் சைனம் என பல்வேறு மதங்களில், பல்வேறு காரணங்களுக்கான கொண்டாடுகின்றனர்.
நமது இந்தியாவில் தீபாவளி பண்டிகை ஒவ்வொரு இடங்களில், ஒவ்வொரு காரணங்களை குறிப்பிட்டு கொண்டாடுகின்றனர்.
அதில் குறிப்பிட்ட சில காரணங்களை இப்பொழுது பார்க்கலாம்.
- கிருஷ்ணன், தனது மனைவியான பத்தமாவதியின் மூலமாக நரகாசுரனை வதம் செய்த தினம்.
- இராமன், இராவணனை அழித்து, தன்னுடைய 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்து நாடு திரும்பியதை சிறப்பிக்க விளக்குகள் ஏற்றி மக்கள் கொண்டாடிய தினம்.
- கந்தபுராணத்தில் சக்தி, சிவனில் விரதமிருந்து பாதி உடலை பெற்று, அர்த்தநாதீஸ்வராக அவதாரம் எடுத்த தினம்.
- சைனர்கள், மகாவீரர் மோட்சம் அடைந்த தினமாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
- சீக்கியர்கள், பொற்கோவிலை கட்ட தொடங்கிய தினமாக தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
இதில் உங்களுக்கு தெரிந்து கொண்டாடும் தினத்தை கமெண்ட்-யில் தெரிவியுங்கள்.
தீபாவளி |
தமிழர்களின் தீபாவளி
நமது முன்னோர்கள் உண்மையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்களா? என்பது சிலருக்கு ஐயமாக இருக்கலாம்.
இந்த பதிவின் மூலம், அந்த ஐயமானது தீரும் என்பது உண்மை. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி.
நமது முன்னோர்கள் கோவிலை சுற்றியே வாழ்ந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே!.
அந்த கோவில்களில் தங்களுடைய வாழ்வியல் முறைகளை சிற்பங்களாகவும், கல்வெட்டுகளாகவும் உலகிற்கு கொடுத்துள்ளனர்.
அதன் மூலமாக அவர்கள் கொண்டாடிய சில பண்டிகைகளை தெரிந்துக்கொள்ளலாம்.
தமிழர்கள் தீபாவளி பண்டிகை |
தீபாவளியும், கல்வெட்டு சான்றுகளும்,
நாம் பல்வேறு ஆண்டுகளாக கொண்டாடி வருகின்ற தீபாவளி பண்டிகை 16 ஆம் நுற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வரலாறு பெரும்பாலும் கோவில்களை சார்ந்தே உள்ளது என்பது அனைவராலும் ஏற்கத்தக்க ஒன்றாகும்.
ஏனென்றால் கோவில்கள் மூலமாக கிடைக்கப்பெற்ற பல கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் மூலமாகவே, நமது பண்டைய தமிழ் மக்களின் சிறப்புகளை நாம் அறிகின்றோம்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த தமிழ்மன்னர்கள், பல ஆண்டுகளை தாண்டியும், தங்களுடைய வரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்த கோவில்களையே பயன்படுத்தினர்.
அந்த வகையில் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள், கொண்டாடிய தீபாவளி பண்டிகையை பற்றிய குறிப்புகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோவிலில் உள்ள ஒரு தமிழ் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
கோவில் |
அந்த கல்வெட்டு ஆனது பொ.ஆ(பொது ஆண்டு அல்லது பொது மக்கள் ஆண்டு) 1542-இல் பொறிக்கப்பட்டது ஆகும்.
அந்த கல்வெட்டுல் "திருப்பதி திருவேங்கடவனுக்கு தீபாவளி நாள் அதிரசபடி இரண்டு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது திருப்பதியில் உள்ள திருவேங்கடவனுக்கு தீபாவளியன்று படைக்கப்பெறும் அமுது படைத்தலுக்கான கட்டளை பற்றிய செய்தியாகும்.
இந்த செய்தியின் மூலமாக பல நூற்றாண்டுகளாக, நமது முன்னோர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வந்தனர் என்பதை அறிய இயலும்.
தீபாவளியும், செப்பேடுகளும்
திருவாரூர் அருகே உள்ள சித்தாய்மூர் என்ற ஊரில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளிலும், தீபாவளி பண்டிகைப்பற்றிய தகவல்கள் தெளிவாக எழுதப்பட்டு உள்ளன.
ஆதாவது, அங்குள்ள கோவிலில் உள்ள இறைவன் பொன்வைத்தநாதருக்கு ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த அபிஷேகமானது, பல்வேறு கிராம மக்களும், அரசு அதிகாரிகளும், தாங்கள் பெரும் வருமானத்தில் இருந்து சிறுதொகையை செலவிட்டு, பல்வேறு திருவிழாக்களை கொண்டாடியுள்ளனர்.
அந்த பலவிழாக்களில், ஒன்றுதான் தீபாவளி அபிஷேக விழா என்று பொ.ஆண்டு 1753 டிசம்பர் 7 ஆம் தேதி எழுதப்பட்ட செப்பேட்டின் மூலமாக தெரிய வருகின்றது.
அபிஷேகம் |
அந்த செப்பேட்டின் படி கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஜாதி வேறுபாடின்றி இறைவன் பொன்வைத்தநாதர் என்ற இறைவனுக்கு அபிஷேகமும், பல்வேறு விழாக்களையும் நடத்தி உள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவர்கள் இறைவனுக்காக தென்னை மரக்கன்றுகளும், இலுப்பை மரக்கன்றுகளும் நற்று தொன்று புரிந்துள்ளனர் என்பதை அச்செப்பேட்டின் மூலமாக அறிய முடிகின்றது.
முடிவுரை
இதன் மூலமாக தீபாவளி பண்டிகையானது பல்வேறு காலமாக நமது முன்னோர்கள் ஜாதிய வேறுபாடின்றி கொண்டாடிவரும் ஒரு பண்டிகை என்பதை அறிந்துக்கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், இது வீடுகள் மட்டுமின்றி கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகை என்பதையும் புரிந்துக்கொள்ளலாம்.
இந்த தகவல்கள் அனைத்தும் தஞ்சாவூரில் நவம்பர் 5 ஆம் நாள் வெளிவந்த, ஒரு தனியார் செய்தித்தாளில் வரலாற்று ஆய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் வெளியிட்ட செய்தியாகும்.
0 Comments