அழகிய பெண் |
கதையின் தொடர்ச்சி,
குணவதி மன்னருக்கும், அமைச்சர்களுக்கும் யாரும் எதிர்பார்க்காத விருந்தை கொடுத்ததால், பொறாமையில் நிறைந்து இருந்த தனவதி, எப்படியாவது குணவதியை பழிவாங்க எண்ணினாள்.
அமைச்சரவையும் கூடியது. அனைவரும், குணவதி கொடுத்த விருந்தை பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர். இதைக்கேட்ட தனவதி, குணவதியின் மீது மேலும் பொறாமை கொண்டாள்.
குணவதியை பழிவாங்க எண்ணி மன்னரிடம், மன்னா! வீமாபுரியில் உள்ள பேசாமடந்தையை பேசவைக்கும் ஆற்றல் கொண்டவர் என்னிடம் உள்ளார்.
எங்களால், பேசாமடந்தையை பேசவைக்க இயலும். ஆனால், அது குணவதியால் மட்டுமல்ல, அவளிடத்தில் உள்ள பண்டாரத்தாலும் முடியாது என்று கூறினாள்.
அவ்வாறு, பேசாமடந்தையை மட்டும் பேசவைத்து விட்டாள். அன்றிலிருந்து, நான் குணவதிக்கு அடிமை என்று சவாலுக்கு அழைத்தாள்.
மன்னன், தனவதி பேசியதை கேட்டு, குணவதியிடம், தனவதி விடுகின்ற சவாலை ஏற்கிறாயா? என்று கேட்டான்.
பொற்காசுகள் |
அதற்கு குணவதி, மிக அடக்கமாக, மன்னா! தனவதியிடம் இருப்பவரை விட்டு பேசாமடந்தையை பேசவைக்க சொல்லுங்கள்.
அவ்வாறு அவர் பேசவைத்து விட்டால், அன்றிலிருந்து நான் தனவதிக்கு அடிமை.
அவ்வாறு இயலாவிட்டால், நான் என் வீட்டில் உள்ள பண்டாரத்தால் பேசவைக்க சொல்கிறேன்.
அவ்வாறு பேச வைத்து விட்டால், அதற்காக தனவதி அடிமையாக இருக்க வேண்டாம் என்றாள்.
குணவதியின் அடக்கமான பேச்சைக்கேட்ட அனைவரும், குணவதி, அவளுடைய பெயருக்கு ஏற்ற குணமுடையவள் என்று பாராட்டினார்கள்.
தனவதி கூறியதை போல, அவளது வீட்டில் இருந்த பிராமணனை பேசாமடந்தையை பேச வைக்க அனுப்பி வைத்தாள்.
வீரர்கள் |
அவனும் வீமாபுரிக்கு சென்று தோற்று, மொட்டை மண்டையுடன் திரும்பி வந்தான்.
இதைக்கண்ட தனவதி, தான் கொண்ட ஆணவம் குறைந்து, தலைகுனிந்து அரசவைக்கு வந்தாள்.
மன்னன், குணவதியை பார்த்து, உனது வீட்டில் இருக்கும் பண்டாரத்தை முயற்சி செய்து பார்க்க சொல் என்றான்.
அதற்கு அவளும் சம்மதம் தெரிவித்து, பண்டாரம் வேடத்தில் இருந்த விக்ரமாதித்தனிடம் பேசாமடந்தையை பேச வைத்து வெற்றி பெற்று வருமாறு வேண்டினாள்.
விக்ரமாதித்தன் குணவதியிடம், வேண்டுமென்று என்னால் முடியாது என்றான். பின்னர், வேண்டுமென்றால் ஒரு இரண்டாயிரம் பொற்காசுகளும், நாற்பது வீரர்களும், ஒரு பல்லாக்கும் கொடுத்தல் முயற்சி செய்து பார்க்கின்றேன் என்றான்.
இதைக்கேட்ட குணவதி மகிழ்ச்சியடைந்தாள். விக்ரமாதித்தன் கேட்ட உதவியை மன்னனிடம் கேட்டாள்.
குணவதி கேட்ட உதவியை மன்னன் கேட்டதுடன் மகிழ்ச்சியாக சம்மதம் தெரிவித்தான்.
மாதங்கள் |
காரணம் என்னவென்றால், தனவாதியிடம் இருக்கும் பிராமணன், ஆயிரம் குதிரைகள், ஐம்பது யானைகள், பதினாறாயிரம் வீரர்கள் என வாங்கி சென்றதுடன், மூன்று மாதகாலம் அவகாசம் கேட்டு தோற்று வந்தான்.
அதற்கு குணவதி கேட்கும் உதவி, மிக எளியது என்று எண்ணினான் மன்னன். அதன்படியே! குணவதி கேட்ட உதவியையும் செய்தான்.
மன்னனிடம் கேட்டு பெற்ற உதவிகளுடன் வீடு வந்த குணவதி, விக்ரமாதித்தனிடம் நாற்பத்தி ஐந்து நாட்களுக்குள் திரும்பி வருமாறு கேட்டுக்கொண்டாள்.
அதற்கு சம்மதம் தெரிவித்து பல்லாக்கு, வீரர்கள் என அனைத்தையும் அழைத்துக்கொண்டு பேசாமடந்தையை பேச வைக்க புறப்பட்டு சென்றான்.
விக்ரமாதித்தன் காடு, மலை, ஆறு என அனைத்தையும் தாண்டி இறுதியாக, பேசாமடந்தை வசிக்கும் நகரத்தை வந்து அடைந்தான்.
தொடரும்...
0 Comments