Ticker

6/recent/ticker-posts

விக்ரமாதித்தனும், பத்து வாயில்களும் | விக்ரமாதித்தன் கதைகள்

வாயில்
வாயில்

விக்ரமாதித்தனும், பட்டியும் பாட்டி சொன்ன அனைத்தையும் நன்றாக கேட்டுக்கொண்டனர். 

பாட்டி, இருவரையும் பார்த்து நீங்கள் இருவரும் அப்போட்டியில் கலந்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது என்று அறிவுரை வழங்கினார்.

விக்ரமாதித்தன், பாட்டி இவ்வளவு சோதனைகளை கடந்து பேசாமடந்தையை மணக்க வேண்டும் என்றால், கட்டாயமாக பேரழகியாக தான் இருப்பாள் அல்லவா? என்றான்.

அதைக்கேட்ட பாட்டி, பேசாமடந்தை பற்றி கூறவேண்டும் என்றால் அதற்கு இந்த வருடம் முழுவதும் கூறினாலும் போதாது என்றாள்.

அவள் அழகிகளுக்கெல்லாம் அழகி, பேரழகியை காட்டிலும், பெரும் அழகை கொண்டவள். அடக்கமும், பண்பும் ஒருங்கப்பெற்றவள் என்றாள்.

அவளிடம் உள்ள செல்வங்களும் ஏராளம். பேரரசையும் விட பெரும் செல்வமும் கொண்டவள். தந்தை இறந்த பின்பு தாயின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றாள் என்றாள்.

செல்வம்
செல்வம்

பேசாமடந்தையை பற்றி நன்றாக அறிந்துக்கொண்டதும், விக்ரமாதித்தனும், பட்டியும் பாட்டியை பார்த்து, இவ்வளவு கடினமான சோதனைகளை தாண்டி நாங்கள் போகப்போறதில்லை என்றான்.

இதைக்கேட்ட பாட்டி, நீங்கள் இப்பதிலை சொன்னப்பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருக்கின்றது என்றாள்.

பாட்டி இருவருக்கும் உணவுக்கொடுத்து வழியனுப்பி வைத்தாள். விக்ரமாதித்தனும், பட்டியும் பாட்டிக்கு தெரியாமல் பேசாமடந்தையை பேச வைக்க புறப்பட்டு போயினர்.

விக்ரமாதித்தனும், பட்டியும் முதல் வாயிலில் இருந்த பெரிய மணியை அடித்தனர். மணியடித்த உடனே கணக்கன் வந்து ஆயிரம் பொற்காசுகள் கேட்க, பட்டியும் அதை கொடுத்தான்.

பின்னர் கணக்கன், அவர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்தான். அதில் வெந்த உணவுகளை இருவரும் உண்டனர். வேகாத உணவுகளை பட்டி பத்திரப்படுத்திக் கொண்டான்.

பின்னர் இரண்டாவது வாயிலிற்கு சென்றனர். பட்டி, கணக்கனிடம் பேசி நண்பனாக மாற்றிக்கொண்டான். 

வாயிற்கதவு
வாயிற்கதவு

அந்த வாயிலில் இருந்த கணக்கனின் குதிரையை பராமரிக்கும் வீரன்  வழிவிடாமல் நிற்க பட்டி அவனை தள்ளி விட்டான். 

அவன் இரண்டாவது வாயிலில் இருந்த பதுமையிடம் சிக்கிக்கொள்ள, அவனை ஒரு பதுமை நாற்காலியில் அமர வைத்து, மற்றொரு பதுமை மொட்டையடிக்க தொடங்கியது.

அந்த சமயத்தை பயன்படுத்தி விக்ரமாதித்தன், பட்டி மற்றும் கணக்கன் என மூவரும் மூன்றாம் வாயிலை அடைந்தனர். குத்துசண்டை வீரர்களை பார்த்ததும், விக்ரமாதித்தன் பட்டிக்கு சைகை கொடுத்தான்.

அந்த சமயம் பட்டி, கணக்கனை தள்ளிவிட குத்துச்சண்டை வீரர்கள் அவனை அடிக்க தொடங்கினர். அதை பயன்படுத்தி நான்காவது வாயிலை இருவரும் அடைந்தனர்.

அந்த வாயிலில் இருந்த கருங்குரங்குகளுக்கு பட்டி எடுத்து வைத்திருந்த வேகாத உணவை வைக்க, அதை உண்ண பிடிக்காமல் முழித்துக்கொண்டு இருந்தது.

கருங்குரங்கு
கருங்குரங்கு

இதைப்பயன்படுத்தி விக்ரமாதித்தனும், பட்டியும் ஐந்தாவது வாயிலை அடைந்தனர். அங்கு இருந்த புலியை கண்ட பட்டி தான் கொண்டுவந்த மாமிசத்தை எடுத்து வைக்க அதை புலி உண்ண தொடங்கியது.

பின்னர் இருவரும் ஆறாவது வாயிலை அடைந்தனர். அங்கிருந்த யானைக்கு தான் எடுத்துவைத்த கரும்பு மற்றும் பழங்களை பட்டி வைக்க, அதை யானை உண்ண தொடங்கியது.

பின்னர், இருவரும் ஏழாவது வாயிலை அடைந்தனர். அங்கிருந்த கிணற்றை தாண்ட இயலாமல் என்ன செய்வது என்று யோசிக்க, வேதாளம் இருவரையும் தூக்கிக்கொண்டு மறுபக்கம் விட்டது.

பின்னர் இருவரும் எட்டாவது வாயிலை அடைந்தனர். அங்கிருந்த சேற்றுவாய்க்களில் இறங்கி மறுகரை சென்று, வேதாளத்தின் உதவியால் உடலை சுத்தமாக்கி கொண்டு நத்தை கூட்டில் இருந்த பாதி தண்ணீரை ஊற்றிவிட்டு மீதியை வைத்தனர்.

பின்னர் ஒன்பதாவது வாயிலை அடைந்தனர். அந்த வாயிலானது பளிங்கு பாறைகளால் ஆனதால், நடந்தால் கீழே விழுந்து மண்டை உடைந்து விடும் என எண்ணினார்.

பின்னர் பட்டி வேதாளத்திடம், மெழுகை கொண்டுவர செய்து, அதை உருக்கி காலில் பூசிக்கொண்டு அந்த தரையில் நடந்து மறுபக்கம் சென்றனர்.

இறுதியாக பத்தாவது வாயிலை இருவரும் அடைந்தனர். அந்த வாயிலானது இருளடைந்த அறை என்பதால், பட்டி வண்டாக உருமாறி ஒலி எழுப்ப அந்த ஒலியை கேட்டுக்கொண்டே விக்ரமாதித்தனும் கடந்து சென்றான்.

இப்பொழுது சிறிய வாயில் ஒன்று தென்பட, அதில் மூவரும் நுழைந்தனர். அங்கு பல தாதிப்பெண்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர்.

அதற்கு அருகில் ஒரு கட்டில் ஒன்று போடப்பட்டு இருந்தது. அந்த கட்டிலின் கால்மாடு, தலைமாடு எது என்பது தெரியாமல் இருந்தது.

கட்டில்
கட்டில் 

விக்ரமாதித்தன், அந்த கட்டிலின் மத்தியில் எலுமிச்சை பழத்தை வைத்தான். அது சாய்வாக இருந்த பகுதியை நோக்கி உருண்டது. இதன் மூலமாக சாய்வான பகுதியை கால்மாடு என விக்ரமாதித்தன் அறிந்தான்.

விக்ரமாதித்தன், கட்டிலில் சரியாக அமர, புதுமைகள் தோன்றி முகம் பார்க்கும் கன்னடியளித்தது. 

பின்னர் வாசனை திரவியங்கள் பூச, பலவிதமான பணிவிடைகளை செய்தது.

பட்டி அங்கிருந்த பெண்களின் தலைமுடியை ஒன்றாக முடிந்தான். பின்னர், ஒருவரின் துடையை கிள்ளினான்.

தலைமுடி ஒன்றாக பின்னப்பட்டு இருந்ததால் அனைவரும் அலறி எழுந்தனர். பின்னர், விக்ரமாதித்தன் சரியாக அமர்ந்து இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

இன்றைக்கு பேசாமடந்தையை பேச வைக்கும் ஆற்றல் கொண்ட ஒருவன் வந்துவிட்டான் என பேசிக்கொண்டே, பேசாமடந்தையின் தாயிடம் சென்று நடந்ததை கூறினார்கள்.

இதைக்கேட்ட பேசாமடந்தையின் தாயோ, விளக்கேற்றும் பெண்ணை ஜோடித்து, கையில் விளக்குடன் அனுப்பி வைத்தாள்.

தொடரும்...

Post a Comment

0 Comments