வெந்நீர் |
Benefits of drinking hot water | Health
மனித வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று நீர் தான். மனித உடலில் சராசரியாக 60 முதல் 70 சதவீகிதம் நீர் தான் உள்ளது.
பொதுவாக, நாம் சாதாரண தண்ணீரை குடிப்பதை காட்டிலும், வெந்நீர் குடிப்பது உடல்நலத்திற்கு மிக நல்லது.
இந்த பதிவின் மூலமாக, நாம் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.
பொருளடக்கம்
- வெந்நீர்
- வெந்நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்
வெந்நீர்
சாதாரண தண்ணீரில் கண்ணுக்கு தெரியாத பல கிருமிகள் இருக்கலாம். அதை நாம் அருந்தும் பொழுது சில பிரச்சனைகள் வரலாம்.
அதனால் தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமளிக்கும்.
வெந்நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்
வெந்நீர் அருந்துவதால் பல நன்மைகள் கிடைக்கும். பொதுவாக, மருந்து மாத்திரைகள் உட்கொள்ளும் பொழுது வெந்நீரில் அருந்த மருத்துவர் அறிவுறுத்த கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
காரணம், மருந்து, மாத்திரைகள் விரைவில் வயிற்றில் கரைந்து செரிமானம் ஆகவே ஆகும்.
வெந்நீர் குடிப்பதால் பாக்டீரியா தொற்றை பெரும்பாலும் தவிர்க்கலாம்.
வெந்நீர் |
முகப்பரு நீங்க
இளம்வயதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் வரும் மிகப்பெரிய தொல்லை என்றால், அது முகப்பரு தான். முகப்பருவால் முகத்தின் அழகு குறைவாக தெரியும்.
முகப்பருவால் அவதிப்படுபவர்கள், அடிக்கடி வெந்நீரை அருந்தி வர முகப்பருக்கள் குறையும். முகப்பரு வருவது குறையும்.
தாகம் தீர
சில நேரத்திற்கு, சிலருக்கு தீராத தாகம் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். அந்த நேரத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தீராது.
அந்த நேரத்தில் வெந்நீர் குடிப்பதன் மூலமாக தாகம் குறையும். குளிர்காலத்தில் வெந்நீர் குடிப்பதால் மூக்கடைப்பு, தொண்டைவலி போன்ற பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
செரிமானம், நெஞ்செரிச்சல் பிரச்சனை தீர
தினமும் காலையில் காபி மற்றும் தேநீர் குடிப்பதற்கு பதிலாக, வெந்நீர் குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை வராது.
அதிகமான எண்ணெய் பலகாரங்கள், இனிப்புகள் மற்றும் உணவு சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானம் போன்ற பிரச்சனை ஏற்பட்டு அவதிப்படுவார்கள்.
இதுப்போன்ற சமயங்களில் வெந்நீர் குடிப்பதால், செரிமானம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் தீரும்.
வெந்நீர் |
வாயுத்தொல்லை நீங்க
இரவு நேரங்களில், தூங்கப்போவதற்கு முன்பாக வெந்நீர் பருகிவிட்டு உறங்க சென்றால் புளித்த ஏப்பம், வாயுப்பிரச்சனை போன்ற பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம்.
காபி மற்றும் தேநீர் அருந்துவதற்கு பதிலாக, வெந்நீரில் சுக்கு கலந்து குடிக்க வாயுத்தொல்லை மற்றும் மூலம் போன்ற பிரச்சனைகள் வராது.
உடல் எடையை குறைக்க
இன்றைய தலைமுறையினரில் பலர் உடல் எடை மிகுதியால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர்.
தினமும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக வெந்நீர் அருந்திவிட்டு உணவு சாப்பிடுவதால் உடல் எடையானது குறையும்.
இரத்தவோட்டம் சீராக
தினமும் வெந்நீர் குடிப்பதால் இரத்தவோட்டம் சீராகும் மற்றும் நரம்பு மண்டலம் மேம்படும். அதுமட்டுமல்லாமல், நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் இருக்கும் கொழுப்பானது குறையும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியானது, வெந்நீர் குடிப்பதால் குறையும்.
வெந்நீர் |
உடலில் உள்ள நஞ்சுகள் நீங்க
தினமும் வெந்நீர் குடித்து வரும் பொழுது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் வியர்வை அதிகரித்து, வியர்வை வழியாக உடலில் உள்ள நஞ்சுகள் நீங்கும்.
இளமை, முடி வளர்ச்சி அதிகரிக்க
தினமும் வெந்நீர் அருந்தி வந்தால், வேகமாக வயதாகுவதை தவிர்த்து இளமையாக வாழலாம்.
வெந்நீர் அருந்துவதால், முடி உதிர்தல் குறையும். முடியின் வேறானது உறுதியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
கால்வலி நீங்க
சிலர், சில நேரங்களில் கால்வலி தாங்க இயலாமல் அவதிப்படுவார்கள். அந்நேரங்களில் வெந்நீரில் 2 தேக்கரண்டி கல் உப்பு கலந்து, அதில் 15 நிமிடங்கள் காலை வைத்து எடுக்க வலி நீங்கும்.
முடிவுரை
வெந்நீரை குடிப்பதால், தேவையில்லாத நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள இயலும். வெந்நீரை பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
0 Comments