Ticker

6/recent/ticker-posts

பச்சை ஆப்பிளின் நன்மைகள் | ஆரோக்கியம்

பச்சை ஆப்பிள்
பச்சை ஆப்பிள்

Benefits of green apple | Health

இயற்கைத்தாய் வழங்கிய பல்வேறு பழங்களில் ஆப்பிள்களும் ஒன்று. ஆப்பிள் உண்மையில் அற்புதமான பழம் ஆகும்.

தினம் ஒரு ஆப்பிள் என சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமில்லை என கருத்தையும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

இன்றைய காலத்தில் பல்வேறு வண்ணங்களில் ஆப்பிள்களை பார்த்து இருப்பீர்கள். நாம் பெரும்பாலும் சிவப்பு நிற ஆப்பிள்களை சாப்பிட்டும் இருப்போம்.

அந்தவகையில் இந்த பதிவின் மூலமாக பச்சை ஆப்பிளின் நன்மைகளையும், அதில் அடங்கியுள்ள சத்துக்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • பச்சை ஆப்பிள்
  • பச்சை ஆப்பிளில் அடங்கியுள்ள சத்துக்கள்
  • பச்சை ஆப்பிளில் உள்ள நன்மைகள்

பச்சை ஆப்பிள்

பொதுவாக சிவப்பு வண்ண ஆப்பிள்களை காட்டிலும், பச்சை வண்ண ஆப்பிள்களை காண்பது குறைவு.

சிவப்பு வண்ண ஆப்பிள்களை இனிப்பு சுவைக்கொண்டவை. ஆனால் பச்சை வண்ண ஆப்பிள் சற்று புளிப்பு சுவைக்கொண்டது.

ஆனாலும், இதன் பயன்கள் ஏராளம். நீண்ட நெடுங்காலமாக பச்சை ஆப்பிள்கள் ஆரோக்கியமான பழங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.


பச்சை ஆப்பிளில் அடங்கியுள்ள சத்துக்கள்

பச்சை ஆப்பிள்கள் மனித உடலுக்கு முக்கியமான பல தாதுப்பொருட்களை கொண்டவை. இவற்றை நாம் சாப்பிடும் பொழுது, பல சத்துக்கள் ஒரே பழத்தில் இருந்தே கிடைக்கின்றன.

பச்சை ஆப்பிளில் அடங்கியுள்ள சத்துக்கள் ஏராளம். அவையாவன;

      • இரும்பு சத்து,
      • துத்தநாகம்,
      • தாமிரம்,
      • மாங்கனீசு,
      • பொட்டாசியம்,
      • புரதம்,
      • வைட்டமின் ஏ, பி மற்றும் சி,
      • ஆன்டி ஆக்சிடென்டுகள்.


பச்சை ஆப்பிளில் உள்ள நன்மைகள்

பச்சை ஆப்பிளில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளதால், அதன் பயன்களும் ஏராளம். இந்த பதிவை படித்து முடித்தவுடன், கட்டாயம் தினமும் நீங்களும் ஒரு ஆப்பிள் சாப்பிட விரும்புவீர்கள்.

பச்சை ஆப்பிள்
பச்சை ஆப்பிள்


அழகை மேம்படுத்த உதவும் பச்சை ஆப்பிள்

நீங்கள் உங்களின் சருமத்தின் மீதும், அழகின் மீதும் அக்கறை கொண்டவராக இருந்தால், உங்களுக்கு இந்த பச்சை ஆப்பிளை மிகவும் பிடிக்கும்.

காரணம், இந்த ஆப்பிள்கள் சருமத்திற்கு செய்யும் நன்மைகளே!.

சருமம் ஜொலிக்க

இந்த பச்சை ஆப்பிளில் வைட்டமின் ஏ, பி, மற்றும் சி உள்ளதால் உங்களுடைய சருமத்தை மேம்படுத்த உதவுகின்றன.

இறந்த செல்களை புதுப்பிக்கவும், புது செல்களை உருவாக்கவும், வளர்ச்சியடைய செய்யவும் ஊக்குவிக்கின்றன. இதனால் உங்களுடைய சருமம் ஆனது ஜொலிக்க தொடங்கும்.

பச்சை ஆப்பிள் சாப்பிடும் பொழுது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கிறது. இதனால் தோல் வறட்சி அடையாமல் பொலிவுடன் வைக்க உதவுகிறது.

முகப்பரு

பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால், முகப்பரு என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தான் சொல்லவேண்டும். பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் முகப்பரு வராமல் தடுக்கும்.

முதுமையை தவிர்க்க

பச்சை ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகாரணிகள் மற்றும் உயர்தர நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை தோலின் நெகிழ்வு தன்மையை அதிகரிக்க செய்யும் ஆற்றல் கொண்டவை.

அதுமட்டுமல்லாமல், செல்கள் முதுமை அடைவதை தவிர்த்து, நீண்ட நாட்கள் இளமையாக வைக்க உதவுகின்றது. இதனால் தோல்களில் சுருக்கம் வராமல் தடுக்கிறது.

பச்சை ஆப்பிள்
பச்சை ஆப்பிள்


வெண்மையாக மாற

தினந்தோறும் பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால், தோலில் வெண்மை நிறத்தை அதிகரிக்க செய்யும். இதனால் உங்களுடைய அழகு மேலும் மேம்படும்.

கருவளையங்களை தடுக்க

கண்களை சுற்றிலும் காணப்படும் கருவளையங்களை, நீக்க பச்சை ஆப்பிள் சாப்பிடுவது மிக்க நல்லது. இதனால், கருவளையங்கள் மறைவது மற்றுமின்றி கண்களுக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கும்.

பொடுகு நீங்க, முடி வளர

பச்சை ஆப்பிள்களின் தோல் மற்றும் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் பசை (ஷாம்பு) தலையில் உள்ள பொடுகை நீங்கும் வல்லமை கொண்டவை.

அதுமட்டுமின்றி, பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் முடி உதிர்தல் குறைந்து, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

Turning-a-green-apple-blue-2
பச்சை ஆப்பிள்


உடல்நலத்தை மேம்படுத்த உதவும் பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் அழகு மட்டுமின்றி ஆரோக்கியமும் மேம்படும். நமது உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை அடங்கியுள்ளது.

இதயம் மேம்பட

பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவும். இதனால் இதயத்தின் செயல்திறன் அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி இதயத் தமனிகளில் அடைக்கும் கொழுப்பான எல்.டி.எல் என்கிற கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் மற்றும் நல்ல கொழுப்பான எச்.டி.எல் -லை அதிகப்படுத்தி இதயத்தை பலப்படுத்தும்.

உடல் எடையை குறைக்க

உடல் எடையால் அவதிப்படுவோர், தினமும் ஒரு பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வர, இரத்தத்தில் உள்ள கொழுப்பு குறைவது மட்டுமின்றி, உடலில் கொழுப்பு சேர்வதையும் குறைக்க உதவும்.

எலும்பு வலுப்பெற

மனித உடலுக்கு தேவையான பல முக்கிய தாதுப்பொருட்கள் அடங்கியுள்ளதால், எலும்பின் வளர்ச்சியை மேம்பட உதவும்.

அதுமட்டுமின்றி, எலும்பை ஆரோக்கியமாகவும், வலுவாகவும் வைக்க உதவும்.

தைராய்டு மற்றும் கல்லிரல்

தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வர தைராய்டு சுரப்பியின் செயல்திறன் அதிகரிக்கும். இதனால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும்.

பச்சை ஆப்பிள் சாப்பிடுவது கல்லிரலை பாதுகாக்கவும், சரியாக செயல்படவும் உதவும் மற்றும் வாதநோய் வராமலும் தடுக்கும்.

பச்சை ஆப்பிள்
பச்சை ஆப்பிள்


நினைவாற்றலை அதிகரிக்க,

தினமும் ஒரு பச்சை ஆப்பிள் சாப்பிடுவது, வயதாகுவதால் ஏற்படும் நினைவாற்றல் இழப்பை தடுக்கவும், நிறைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன.

ஆஸ்துமா, நீரிழிவு நோய் நீங்க

அன்றாடம் பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் ஆஸ்துமா பிரச்சனைகள் குறையும். அதுமற்றுமின்றி, இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும்.

இதனால் நாளடைவில் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம்.

மலச்சிக்கல்

பச்சை ஆப்பிளில் உயர்தர நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளதால், வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி, குடலை தங்கு தடையின்றி இயங்க உதவும்.

இதனால் குடலின் செயல்திறன் மேம்படும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீரும்.

பச்சை ஆப்பிள்களை தோலுடன் சாப்பிடுவது மிக்க நல்லது.


முடிவுரை

எண்ணற்ற பயன்களை கொண்ட பச்சை ஆப்பிள்களை, தினந்தோறும் சாப்பிட்டு ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருங்கள்.

Post a Comment

0 Comments