கொத்தவரங்காய் |
Nutritious Cluster beans | Health
நாம் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளும் உணவில் பல்வேறு காய்கறிகளை செத்துக்கொள்வதன் மூலம், உடலை மட்டுமல்லாது மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்
இந்த பதிவில் பல்வேறு சத்துக்கள் நிறைந்த சீனிஅவரை என்று அழைக்கப்படும் கொத்தவரங்காயின் நன்மைகளையும், மருத்துவக்குணங்களை தெரிந்துக்கொள்ளலாம்.
பொருளடக்கம்
- கொத்தவரங்காய்
- கொத்தவரங்காயில் உள்ள சத்துக்கள்
- கொத்தவரங்காயின் மருத்துவ குணங்கள்
கொத்தவரங்காய்
கொத்தவரங்காய் செடி வகையை சார்ந்த தாவரம். இது மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது.
இதை பெரும்பாலும் கொத்தவரங்காய் என அழைத்தாலும், சில இடங்களில் இதை சீனி அவரைக்காய் என்றும் அழைப்பார்கள்.
கொத்தவரங்காயில் எண்ணற்ற பயன்கள் உள்ளன. இதை பல்வேறு வகைகளில் உணவாக உட்கொள்ள கூடிய ஒன்றாகும். இது பச்சை நிறத்தில் இருக்கும்.
கொத்தவரங்காயில் உள்ள சத்துக்கள்
- புரதச்சத்து,
- இரும்பு சத்து,
- வைட்டமின் சி,
- நார்ச்சத்து,
- கார்போ ஹைட்ரேட்டுகள்,
- ஆன்டி-ஆக்சிடென்டு,
- போலிக் அமிலம்.
கொத்தவரங்காயின் மருத்துவ குணங்கள்
நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மை கொண்ட கொத்தவரங்காயில் மருத்துவ குணங்கள் ஏராளம்.
கொத்தவரங்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பது மிக நல்லது. கொத்தவரங்காயின் மருத்துவக்குணங்களை முதலில் தெரிந்துக்கொள்ளலாம்.
கர்ப்பிணி பெண்கள்
கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காயை உணவில் சேர்ப்பது மிக நல்லது. கொத்தவரங்காயில் உள்ள இரும்பு சத்து இரத்தவோட்டத்தை சீராக வைக்க உதவும்.
அதுமட்டுமல்லாமல், இதில் போலிக் அமிலம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிக நல்லது.
கொத்தவரங்காயை சாப்பிடுவதால் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கும். கருவுற்ற பெண்ணுக்கு ஊட்டமளிப்பது மட்டமல்லாமல், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியையும் அதிகரிக்கும்.
இரத்தவோட்டம்
மனித உடலில் செயலுக்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பது இரத்தவோட்டம் தான்.
கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இரத்தவோட்டம் சீராக இருப்பது மட்டுமின்றி, தசை வளர்ச்சிக்கும் உதவுகின்றது.
இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தன்மையும் கொத்தவரங்காய்க்கு உண்டு. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எளிதில் நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழ்வளிக்கும். இரத்தசோகை வராமல் காக்கும்.
கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால் குழந்தைகளின் வளர்சிக்கு மிக உதவும்.
கொத்தவரங்காய் |
ஜீரணம், மலச்சிக்கல், கொழுப்பு நீங்க
கொத்தவரங்காயில் நீரில் கரையும் நார்ச்சத்தும், நீரில் கரையாத நார்ச்சத்தும் அடங்கியுள்ளது. நீரில் கரையாத நார்ச்சத்து ஜீரணத்திற்கு உதவும்.
இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும் ஆற்றலும் உண்டு.
ஜீரணப்பாதையை ஆரோக்கியமாக இயங்கவும், மேம்படுத்தவும் உதவும்.
நீரில் கரையாத நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்புகளையும், இரத்தத்தில் உள்ள கொழுப்புகளையும் குறைக்க உதவும்.
நீரிழிவு நோய்
நாம் கொத்தவரங்காயை சாப்பிடும் பொழுது, அதில் உள்ள சர்க்கரை மெதுவாக ஜீரணம் ஆகும்.
இதனால் இன்சுலின் ஹார்மோன் குறைவாக சுரந்தாலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.
இதனால் கொத்தவரங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த உணவாக இருக்கும். கொத்தவரங்காயின் பொடி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.
உடல் எடை
பெரும்பாலன நபர்கள் உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு கொத்தவரங்காய் மிக சிறந்த உணவாகும்.
கொத்தவரங்காயில் மிக குறைந்த கலோரிகள் இருந்தாலும், நமது உடலுக்கு தேவையான தாது உப்புகள், வைட்டமின்கள் ஏராளம்.
இதனால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பது மட்டுமின்றி, உடல் எடையை அதிகரிக்காமல் இருக்கவும் உதவுகின்றது.
குறிப்பு: கொத்தவரங்காயின் விதைப்பொடியை, ஒரு தேக்கரண்டி எடுத்து 200 மி.லி தண்ணீரில் கலந்து சாப்பிடுவதற்கு முன்பாக குடிப்பதால் அதிகம் பசிக்காது.
இதனால் சாப்பிடும் உணவின் அளவும் குறையும். உடல் எடை அதிகம் கொண்டவர்கள், இந்த முறையை பின்பற்றலாம்.
மனஅழுத்தம்
கொத்தவரங்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள நரம்புகள் வலுவடைந்து, மன அழுத்தத்தை குறைகின்றது. இதனால் உடல்நலம் மட்டுமின்றி மனநலமும் மேம்படும்.
பற்கள், எலும்புகள்
நமது உடலுக்கு தேவையான கால்சியம் கொத்தவரங்காயில் நிறைந்துள்ளதால், கொத்தவரங்காயை உணவில் சேர்ப்பதன் மூலமாக பற்கள் மற்றும் எலும்புகள் மேம்படுகின்றது.
சரும நலன்
கொத்தவரங்காய் சாப்பிடுவதால் நமது முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், மற்றும் பருக்கள் குறைவது மட்டுமின்றி வராமலும் தடுக்கின்றது.
கொத்தவரங்காயின் விதைகளில் புரதமும், நார்ச்சத்தும் இருப்பதால், இதன் விதைப்பொடி பெருங்குடல் அழற்சி நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.
கண் பார்வை
இன்றைய காலத்தில் கணினி மற்றும் தொலைபேசி பயன்படுத்துவதால், பெரும்பாலானோரின் கண்பார்வை பாதிப்படைகிறது.
அவர்கள் கொத்தவரங்காயை உணவாக எடுத்துக்கொள்ளும் பொழுது, கொத்தவரங்காயில் உள்ள வைட்டமின் சி கண் பார்வையை அதிகரிக்கும்.
இதயநோய்
கொத்தவரங்காயை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வதால் மாரடைப்பு வராமல் தவிர்க்கலாம்.
மேலும் சில;
கொத்தவரங்காய் சற்று கசப்பு சுவை கொண்டது. அதுமட்டுமின்றி, இதை சாப்பிடுவதால் வாதம் அதிகரிக்கும் என்றும், கை மற்றும் கால்களில் வலி உண்டாகும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
கொத்தவரங்காயை சமைக்கும் பொழுது, அதனுடன் சிறிதளவு தேங்காய் துருவல், மிளகு மற்றும் சீரகம் சேர்ப்பதால், வாதத்தன்மை சமநிலை அடைந்துவிடும்.
அதனால் கவலையின்றி கொத்தவரங்காயை சமைத்து சாப்பிடலாம். கொத்தவரங்காய் செடியின் வேர்கள் மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்டது.
இதனால் மண்ணின் வளமானது அதிகரிக்க செய்யும். பெரும்பாலான விவசாயிகளுக்கு கொத்தவரங்காய் விருப்ப பயிராக இருக்கின்றது.
இராஜஸ்தானில் கொத்தவரங்காயின் விதை பொடியை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
முடிவுரை
இந்த பதிவின் மூலமாக கொத்தவரங்காயின் சிறப்புகளை தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகின்றேன்.
0 Comments