Ticker

6/recent/ticker-posts

உடலுக்கு உகந்த வாழைத்தண்டின் பயன்கள் | ஆரோக்கியம்

வாழைத்தண்டு
வாழைத்தண்டு

Benefits of Banana Stem | Health

வாழைமரத்தில் இருந்து பெறப்படும் அனைத்தும், பலவகைகளில் உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் என்பது யாவரும் அறிந்ததே. 

வாழைமரத்தில் இருந்து கிடைக்கப்பெறும் பூ, இலை, தண்டு, காய் மற்றும் பழம் என அனைத்தும் பயனளிக்கவல்லது.

அவ்வகையில் வாழைமரத்தில் இருந்து பெறப்படும் வாழைத்தண்டில் இருந்து கிடைக்கும் பயன்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • வாழைத்தண்டில் உள்ள சத்துக்கள்
  • வாழைத்தண்டின் மருத்துவக்குணங்கள்
  • வாழைத்தண்டை சுத்திகரிக்கும் முறை
  • வாழைத்தண்டின் நிறம் மாறாமல் இருக்க


வாழைத்தண்டில் உள்ள சத்துக்கள்

முதலில் வாழைத்தண்டில் இருக்கக்கூடிய சத்துக்களை முதலில் தெரிந்துக்கொள்வோம்.

பொதுவாக, வாழைத்தண்டில் அதிகமான நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளன.

அதுமட்டுமல்லாமல், வாழைத்தண்டில் மூன்றில் ஒரு பங்கு தசையும், இரண்டு பங்கு நீரும் உள்ளது.

வாழைமரம்
வாழைமரம்


வாழைத்தண்டின் மருத்துவக்குணங்கள்

நமது உடலில் ஏற்படும் பல முக்கிய பிரச்சனைகளுக்கு, மிக சிறந்த நிவாரணியாக வாழைத்தண்டு விளங்கி வருகின்றது. வாழைத்தண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

சிறுநீரக கற்கள்

இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்களுக்கு ஏற்படும் பிரச்சனை என்றால், அது சிறுநீரக கற்கள் தான். நமது உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகிறது.

சிறுநீரக கற்கள் வருவதற்கான காரணங்கள்

சிறுநீர் வரும் பொழுது, அதை கட்டாயமாக வெளியேற்ற வேண்டும். பலர் தங்களுடைய பணியின் காரணத்தினாலோ, அல்லது சூழ்நிலையின் காரணத்தினாலோ, சிறுநீர் கழிப்பதை தள்ளி போடுகின்றனர்.

இவ்வாறு சிறுநீரை கட்டுப்படுத்துவதன் காரணத்தினால், நமது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் சிறுநீரக கற்கள்.

இதுமட்டுமல்லாமல், அதிக காரமான உணவுகளை சாப்பிடுதல், மது அருந்துதல், மிக குறைவான அளவு தண்ணீர் அருந்துதல், நீண்ட தூரத்திற்கு வாகனங்களை ஒட்டி செல்லுதல், மற்றும் அதிக வீரியம் மிக்க மாத்திரைகளை உட்கொள்ளுதல் ஆகியவற்றின் காரணமாக சீறுநீரக கற்கள் உருவாகின்றன.

சிலர் பிளாஸ்டிக் குடுவைகளில் நீரை சேமித்து வைத்து அருந்துவதன் காரணமாகவும், சிறுநீரக கற்கள் உருவாகின்றது என்ற ஒரு கருத்தும் உள்ளது.

சிறுநீரக கற்களால் அதிதீவிரமான வலியினை அனுபவிக்க நேரிடும். இதனால் பலர் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவும் நேரிடும்.

ஆங்கில மருத்துவத்தில் சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்து மாத்திரைகள், மற்றும் அறுவை சிகிச்சை என பல வழிகள் உள்ளன. இவையாவும், அதிக செலவுமிக்கவையாகும்.

Posola
வாழைத்தண்டு

சிறுநீரக கற்களை சரிசெய்யும் வழிகள்

நமது இயற்கை மருத்துவத்தில், மிக எளிமையான வழியில் எளிதாக சிறுநீரக கற்களை போக்கலாம். அதற்கு வாழைத்தண்டு மிக சிறந்த உணவாக கருதப்படுகின்றது.

நாம் அன்றாட உணவில் அடிக்கடி வாழைத்தண்டை எடுத்துக்கொள்வதால், சீறுநீரக கற்கள் உருவாகும் பொழுதே வெளியேற்றப்படும்.

குறிப்பு: சிறுநீரக நோய்க்கான மருந்துகளை, வாழைத்தண்டு சாற்றுடன் கலந்துக்குடிக்க நோயானது விரைவில் சரியாகும்.

அதுமட்டுமல்லாமல், சிறுநீரக பாதையில் உள்ள கழிவுகளையும் அகற்றி, சிறுநீரக பாதையை மேம்படுத்தவும் செய்கிறது.

இதனால், சிறுநீரக கற்களால் ஏற்படும் வலிகளை தவிர்க்கலாம்.

செரிமானம்

வாழைத்தண்டில் அதிகப்படியான நார்ச்சத்து உள்ளதால், குடலின் செரிமான தன்மையை மேம்படுத்தும். இதனால், மலச்சிக்கல் வராமல் தவிர்க்கலாம்.

நமது குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல், வயிற்று பகுதியில் முடி ஏதேனும் சிக்கியிருந்தால் அதை வெளியேற்றும் தன்மையும் கொண்டது.

சிறியவர் முதல் பெரியவர் வரை, இன்றைய உணவு முறைகளால் அமிலத்தன்மை(அசிடிட்டி) ஏற்பட்டு செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.

இந்த வாழைத்தண்டை ஜூஸ் செய்து குடித்தால், விரைவாக சரியாகும். அதுமட்டுமல்லாமல், வயிற்றெரிச்சலையும் சரிசெய்யும் மற்றும் வயிற்றில் இருக்கும் புண்களை ஆற்றும் தன்மையையும் கொண்டது.

வாழை
வாழை


உடல் எடையை குறைக்க

வாழைத்தண்டில் இரும்பு சத்து இருப்பதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். 

உயர் இரத்த அழுத்த்ததை குறைக்கும். இதில் கொழுப்பு சத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழைத்தண்டானது மிக குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. இதனால் உடல் எடையானது அதிகரிக்காமல் இருக்கும்.

இதில் நார்ச்சத்து உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

இரத்தத்தை தூய்மை செய்யும் தன்மை கொண்டது. இரத்ததில் கொழுப்பு அதிகமாக கொண்டுள்ளவர்கள், அடிக்கடி வாழைத்தண்டை சமைத்து சாப்பிட்டு வரலாம்.

நீரிழிவு நோய்

வாழைத்தண்டில் வைட்டமின் பி6 இருப்பதால் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். 

வாழைத்தண்டு லெக்டின் இன்சுலின் என்சைம்களை ஊக்குவிக்கும்.

இதனால், நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை குறைத்து ஆரோக்கியமாக வாழ வைக்கும்.

Banana stem
வாழைத்தண்டு

மாதவிடாய்

வாழைத்தண்டு சாப்பிடுவதால், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும்.

அதுமட்டுமல்லாமல், உடலை குளிர்ச்சியாகவும் வைக்கும். வாழைத்தண்டு சாறு சிறுநீரை பெருக்கும் தன்மைக்கொண்டது.

அதனால், நீர்க்கட்டு மற்றும் நீர் எரிச்சல் போன்ற சீறுநீரக தொற்றுக்கொண்டவர்கள், வாழைத்தண்டு சாறை பருகலாம்.

இதயத்தசை, பித்தப்பை கற்கள்

வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம், இதய தசைகளை நன்கு இயக்கவைக்கும் ஆற்றல் கொண்டது. 

அதுமட்டுமல்லாமல், பித்தப்பையில் உருவாகும் கற்களையும் போக்கும் தன்மை கொண்டது.

வாழைத்தண்டில் டானின் என்னும் துவர்ப்பு சத்து நிறைந்துள்ளது. வாழைத்தண்டு சித்த மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

Vazhaithandu koottu
வாழைத்தண்டு கூட்டு

வாழைத்தண்டை சுத்திகரிக்கும் முறை

வாழைத்தண்டை குறுக்கு வாட்டத்தில், மெலிதாக வட்டமாக வெட்டி நூலை கையால் சுற்றி எடுக்க வேண்டும். 
இவ்வாறு செய்வதன் மூலமாக, அதில் உள்ள நார்களை எளிதாக பிரித்து எடுக்க இயலும்.


வாழைத்தண்டின் நிறம் மாறாமல் இருக்க

ஒரு பாத்திரத்தில் 50 மி.லி அளவு மோருடன், தேவையான அளவு தண்ணீர் கலந்து வெட்டிய துண்டுகளை போடுவதன் மூலம், வாழைத்தண்டின் நிறமானது மாறாமல் இருக்கும்.

முடிவுரை

உடலுக்கு நல்ல குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கவல்ல வாழைத்தண்டை சமைத்து நலம் பெறுங்கள்.

Post a Comment

0 Comments