Ticker

6/recent/ticker-posts

தூதுவளையின் நன்மைகள் | Thuthuvalai benefits in tamil

தூதுவளை
தூதுவளை

Thuthuvalaiyin Nanmaikal | Health

நமது கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பெரும்பாலான நபர்களுக்கு தெரிந்த ஒரு மூலிகை தாவரமான தூதுவளையின் மருத்துவக்குணங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

பொருளடக்கம்

  • தூதுவளை
  • தூதுவளையின் தமிழ்ப்பெயர்கள்
  • தூதுவளையின் மருத்துவக்குணங்கள்


தூதுவளை

தூதுவளை ஒரு மூலிகை தாவரமாகும். நமது முன்னோர்கள் தொன்றுத்தொட்டு பயன்படுத்திய தாவரத்தில் தூதுவளை குறிப்பிட்ட ஒரு இடத்தை பிடித்துள்ளது.

தூதுவளை ஒரு கொடி வகையை சார்ந்த தாவரமாகும். இந்த தாவரத்தின் இலைகள், கொடிகள் என அனைத்திலும் சிறிய முற்கள் காணப்படும்.

இதன் காரணமாக, இதை வேலிகளில் பயிரிட்டு வளர்ப்பார்கள். இந்த தூதுவளையில் கத்திரிப்பூ வண்ணத்தில் மலர்கள் இருக்கும்.

இதன் பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த தூதுவளைக்கு எண்ணற்ற மருத்துவக்குணங்கள் உண்டு.


தூதுவளையின் தமிழ்ப்பெயர்கள் 

தூதுவளைக்கு தமிழியில் பலப்பெயர்கள் உண்டு. அதில் சில பெயர்களை குறிப்பிட்டுள்ளேன்.

      • சிங்கவல்லி,
      • அளர்க்கம்.


தூதுவளையின் மருத்துவப்பயன்கள்

நமது சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தூதுவளை பெரும் இடத்தை பெற்றுள்ளது. 

பெரும்பாலான நபர்களுக்கு தூதுவளை இருமல் மற்றும் சளிக்கு அருமையான மருந்து என தெரிந்து வைத்திருப்பார்கள்.

உண்மையில் சளி மற்றும் இருமலை போல பல்வேறு நோய்களுக்கு தூதுவளை அருமருந்தாகும்.

Solanum trilobatum flowers
தூதுவளை


நுரையீரல் சார்ந்த நோய்கள்

நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்திற்கும் தூதுவளை அருமருந்தாகும். தூதுவளையை சாப்பிட சளி, இருமல், ஜலதோஷம் என அனைத்தும் சரியாகும்.

தூதுவளையை வாரம் ஒருமுறை சாப்பிட மூச்சுப்பதை சீராகும்.

சின்னவெங்காயம், பூண்டு, மிளகுடன் தூதுவளை இலையை வதக்கி ஒரு மண்டலம் சாப்பிட்டுவர உடல் வலிமைப்பெறும்.

அதுப்போல, சளி, இருமல் மற்றும் இரைப்பு என அனைத்தும் சரியாகும்.

தூதுவளை இலைகளை பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து, காலை மற்றும் மாலை என இருவேளைகளில், பத்தியம் இருந்து தேனில் கலந்து ஒரு மண்டலம் உட்கொள்ள இருமல் மற்றும் இளைப்பு சரியாகும்.

தூதுவளையின் பழங்களை வெயிலில் காயவைத்து பொடிசெய்து தேனில் கலந்து சாப்பிட்டு வர மார்புசளி, இருமல் நீங்கும்.

பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.

தூதுவளை இலைகளை குடிநீரில் கலந்து குடித்து வர இருமல் மற்றும் இளைப்பு அண்டாது.

Sol trilob1
தூதுவளை


நோய்யெதிர்ப்பு சக்தி

தூதுவளை இலையை பறித்து முட்களை நீக்கி, நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளலாம்.

பின்னர், காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும், மிதமான வெந்நீரில் கலந்துக்குடிக்க நோய்யெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதனால் நோய்கள் வராமல், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

எலும்பு, பற்கள்

நமது உடலில் உள்ள எலும்பு மற்றும் பற்கள் வலிமையாக இருக்க கால்சியம் மிக முக்கியமானது.

அந்த கால்சியம் ஆனது தூதுவளையில் அதிகமாக இருப்பதால் உடலுக்கு தேவையான கால்சியத்திற்கு தூதுவளை முக்கியமானதாக உள்ளது.

தூதுவளையின் இலைகளை உட்கொள்ளும் பொழுது எலும்பு மற்றும் பற்கள் வலிமையாகிறது.

நடுத்தர வயது உடையவர்கள், அடிக்கடி தூதுவளையை சாப்பிட்டு வர எலும்பு தேய்மானம் ஏற்படாது. 

அதுபோல பருப்புடன் 48 நாட்கள் தூதுவளையை சாப்பிட்டு வர பற்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும்.

தூதுவளையின் பூக்களை நிழலில் உலர்த்தி பாலில் கலந்து குடிக்க உடல் வலிமையடையும்.

Solanum trilobatum L - Flickr - lalithamba
தூதுவளை


வாதம், பித்தம்

நமது உடலில் பித்தம் என்பது குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டிய ஒன்றாகும். 

பித்தமானது அதிகமானாலும், அல்லது குறைந்தாலும் தேவையில்லாத பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழி வகுத்துவிடும்.

எனவே பித்தமானது குறிப்பிட்ட அளவில் சீராக இருக்க வேண்டும்.

மிளகு கல்பகத்தை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டபின், 48 நாட்கள் தூதுவளையை சாப்பிட்டு வர பித்தம் சமநிலையடையும்.

அதுபோல வாதத்தினால் ஏற்படும் விளைவுகளையும் சரிசெய்யும் தன்மை கொண்டது.

கபம், மந்தம்

தூதுவளையின் இலைகளில் அடை செய்து சாப்பிட தலையில் உள்ள கபம் ஆனது குறையும். அதுமற்றுமின்றி, காது மந்தம், நமைச்சல் மற்றும் பெருவயிறு மந்தம் என அனைத்தும் சரியாகும்.

மூக்கில் நீர் வடிதல், பல் ஈறுகளில் நீர் சுரத்தல், வாயில் அதிகப்படியான நீர் சுரத்தல் மற்றும் சூலை நீர் போன்ற பிரச்சனைகளுக்கும் தூதுவளை சிறந்த மருந்தாகும்.

கண்

தூதுவளையின் காய் மூலம் தயாரிக்கப்படும் வற்றல், ஊறுகாய் போன்றவற்றை ஒரு மண்டலம் கற்பக முறைப்படி சாப்பிட்டு கண்ணில் உண்டான பித்த நீர் சரியாகும்.

தூதுவளையின் இலைகள், வேர்கள், காய்கள் என வற்றல் அல்லது ஊறுகாய் செய்து 48 நாட்கள் சாப்பிட்டு வர கண்ணெரிச்சல் சரியாகும்.

அதுபோல கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.

Solanum trilobatum flower
தூதுவளை


புற்றுநோய்

தூதுவளைக்கு பல்வேறு மருத்துவக்குணங்கள் உண்டு. தூதுவளையை சாப்பிடுவதை முறைப்படி சாப்பிட்டு வர பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

தூதுவளையை கற்பக முறைப்படி சாப்பிட்டு வர ஆயுள் அதிகரிக்கும்.

அதுமற்றுமின்றி, தூதுவளையை அடிக்கடி சாப்பிட்டு வர கருப்பை புற்றுநோய், வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் வராமல் தடுக்கும்.

வயிறு

தூதுவளையை சாப்பிடுவதால் செரிமானம் சீராகும். வயிற்று பொறுமல் பிரச்சனை உடையவர்கள் தூதுவளையை சாப்பிட சரியாகும்.

ஆண்மை அதிகரிக்க

தூதுவளையின் பூக்கள், இலைகள், காய்கள், பழங்கள் மற்றும் வேர்கள் அனைத்தும் மருத்துவக்குணங்கள் உடையவை.

இவற்றை சாப்பிடும் பொழுது ஆண்மை மற்றும் நியாபக சக்தி அதிகரிக்கும்.


முடிவுரை

பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்ட தூதுவளையை பராமரிப்பது என்பது எளிது. 

இவற்றை வீட்டிற்கு ஒதுக்குப்புறமாகவோ, அல்லது ஒரு தொட்டியிலோ வைத்து வளர்ப்பதன் மூலமாக அடிக்கடி பயன்படுத்தலாம்.

உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து ஆயுளை கூட்டக்கூடிய தூதுவளையை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.

Post a Comment

0 Comments