Ticker

6/recent/ticker-posts

முலாம் பழத்தின் நன்மைகள் | கிர்ணி பழம் | Muskmelon in tamil

கிர்ணி பழம்
கிர்ணி பழம்

Benefits of Muskmelon

கோடை வெப்பத்தை தாங்காமல் பலரும் வேதனை படுகின்றோம். ஆனால் இயற்கை நமக்கு எல்லா பிரச்சனைகளில் இருந்தும் நம்மை காக்கிறது.

கோடைக்காலத்தில் கிடைக்கக்கூடிய, நமது உடலின் வெப்பத்தை குறைத்து குளிமையளிக்கக்கூடிய பழங்களில் ஒன்றான கிர்ணி பழத்தை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • கிர்ணி (அ) முலாம் பழம்
  • முலாம் பழத்தை தேர்ந்தெடுக்கும் முறை
  • முலாம் பழத்தை சாப்பிடும் முறை
  • முலாம் பழத்தில் உள்ள சத்துக்கள்
  • முலாம் பழத்தின் நன்மைகள்

கிர்ணி (அ) முலாம் பழம்

கிர்ணி பழம் என்பது கிட்டத்தட்ட வெள்ளரிப்பழத்தின் சுவையை ஒத்த நீர்ச்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இது ஒரு கொடி வகையை சார்ந்தது.

இந்த பழத்தின் மேற்புற தோலானது கடினமாகவும், உட்புறம் மென்மையாகவும் இருக்கும்.

இது வெள்ளரி போல அல்லாமல் பழமாக இருக்கும் பொழுது மட்டுமே உண்ண இயலும்.

இந்த பழத்தை சில இடங்களில் முலாம் பழம் என்றும், சில இடங்களில் கிர்ணி பழம் என்றும் அழைப்பர்.

கிர்ணி பழம்
கிர்ணி பழம்

முலாம் பழத்தை தேர்ந்தெடுக்கும் முறை

முலாம் பழத்தை காயாக இருக்கும் பொழுது உண்ண இயலாது. பழமாக இருக்கும் பொழுது மட்டுமே உண்ண இயலும்.

நன்றாக பழுத்த முலாம் பழத்தை தேர்ந்தெடுக்க முலாம் பழத்தின் காம்பு பகுதியிலோ, அல்லது தோலிலோ நகத்தால் சிறிதாக கீறி மூக்கால் முகர, நல்ல நறுமணம் வரும்.

அவ்வாறு மணம் வந்தால், அது நன்றாக பழுத்த பழமாகும். இல்லையெனில் அது காயாக இருக்கும்.

முலாம் பழத்தை சாப்பிடும் முறை

முலாம் பழத்தை மற்ற பழங்களை போல அல்லாமல் வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். இல்லையெனில், முலாம் பழத்தில் உள்ள சத்துக்கள் ஆக்சிஜனிறக்கம் அடைந்து விடும்.

இதனால் முலாம் பழத்தில் உள்ள சத்துக்கள் இல்லாமல் போய்விடும். இந்த பழத்தை சாப்பிடுவதால் நமக்கு எவ்விதமான பயனும் இருக்காது.

இந்த பழத்தை சாதாரணமாகவோ, அல்லது ஜூஸ் ஆகவோ மாற்றியும் அருந்தலாம்.

முலாம் பழம்
முலாம் பழம்

முலாம் பழத்தில் உள்ள சத்துக்கள்

நமது உடலுக்கு முலாம் பழம் குளிர்ச்சியளிப்பது மற்றுமின்றி பல்வேறு சத்துக்களையும் அளிக்கிறது. முலாம் பழத்தில் உள்ள சத்துக்களை கீழே குறிப்பிடுகிறேன்.

      • வைட்டமின் ஏ, இ, சி,
      • பீட்டா கரோட்டின்,
      • பொட்டாசியம்,
      • மாங்கனீசு,
      • கரையக்கூடிய நார்ச்சத்துக்கள்.

முலாம் பழத்தின் நன்மைகள்

முலாம் பழத்தில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. முலாம் பழத்தை நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலானது ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.

உடல்சூடு

முலாம் பழம் உடலுக்கு குளிச்சியை வாரி வழங்கும் தன்மைக்கொண்டது. கோடை வெப்பத்தால் அவதிப்படும் மக்களுக்கு இன்றியமையாதது ஆகும்.

அதிக சாறு நிறைந்த, இந்த பழத்தை சாப்பிடும் பொழுது உடல்சூடு குறைவதுடன், புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

கிர்ணி பழம்
கிர்ணி பழம்

கண்விழித்திரை

முலாம் பழம் பார்வைத்திறனை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த பழத்தை சாப்பிடுவதால் வயதாகுவதால் ஏற்படும் விழித்திரை சேதமடைவதை தடுக்கும் தன்மை கொண்டது.

அதுமட்டுமில்லாமல், இதிலுள்ள பீட்டா கரோட்டின் கண்பார்வை குறைபாடுகளை தடுக்கும் தன்மை கொண்டுள்ளது.

நிரிழிவு நோய்

முலாம் பழத்தில் மிக குறைந்தளவே கிளைசிமிக் இன்டெஸ் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது.

இதனால் அவர்களுடைய சர்க்கரை அளவானது அதிகரிப்பது இல்லை.

முலாம் பழம்
முலாம் பழம்

வயிறு கோளாறுகள்

முலாம் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும் தன்மைக்கொண்டது.

தினசரி முலாம் பழத்தை எடுத்துக்கொள்ளும் பொழுது வயிற்றில் ஏற்படும் கோளாறுகள் குறையும். பசியின்மை போன்ற பிரச்சனைகளும் தீரும்.

இந்த முலாம் பழத்தின் விதைகளுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப்பூச்சிகள் நீங்கும்.

அதுமற்றுமின்றி வயிற்றில் உண்டாகும் அமில பிரச்சனைகளையும், அல்சர் நோயையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது.

முலாம் பழத்துடன் சிறிது இஞ்சிச்சாறு, சீரகம் மற்றும் உப்பு கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்பொருமல், குடல்நோய் மற்றும் எரிச்சல் போன்ற நோய்கள் சரியாகும்.

எடை குறைய

உடல் எடையால் அவதிப்படுவோர்கள், உடல் எடையை குறைக்க முலாம் பழம் ஒரு சிறந்த உணவாகும். அடிக்கடி முலாம் பழத்தை சாப்பிட உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் குறைந்து எடையும் குறையும்.

மேலும் உடலில் சேரும் கெட்டக்கொழுப்புகளை சேராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.

கிர்ணி பழம்
கிர்ணி பழம்


வாதம், பித்தம் நீங்க

நமது உடலில் உள்ள வாதம் மற்றும் பித்தத்தை சமநிலையில் இருக்கவும், அதிகமான வாதம் மற்றும் பித்தத்தை குறைக்கவும் முலாம் பழம் அற்புதமான ஒன்றாகும்.

அதுமற்றுமின்றி உடலின் களைப்பையும் சரி செய்யும் தன்மைக்கொண்டது.

சருமம் மேம்பட

கோடைக்காலத்தில் முகம் வறச்சியால் முகத்தின் பொலிவானது குறைகின்றது. இதை தடுக்க, முலாம் பழத்தை மசித்து முகத்தில் தடவ முகமானது பளிச்சிக்கும்.

முலாம் பழம்
முலாம் பழம்

ஆஸ்துமா

இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்களிடம் ஆஸ்துமா பிரச்சனையானது பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் காற்று மாசு ஆகும்.

முலாம் பழத்தை தொடர்ந்து சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் அபாயமானது குறையும்.

அதுமற்றுமின்றி, அமெரிக்காவில் உள்ள கான்சஸ் பல்கலைக்கழத்தில் 2003-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், சிகரெட்டால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பானது, முலாம் பழத்தில் உள்ள வைட்டமின் சி-ஆல் ஓரளவிற்கு குறைகிறது என தெரியவந்தது.

முடிவுரை

கோடைவெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை களைய முலாம் பழத்தை சாப்பிட்டு, உடலை ஆரோக்கியமாக வையுங்கள்.

Post a Comment

0 Comments