Ticker

6/recent/ticker-posts

தர்பூசணி பழத்தின் நன்மைகள் | Watermelon benefits in tamil

தர்பூசணி
தர்பூசணி

Benefits of Watermelon Fruit | Health

காலம்காலமாக கோடைக்காலம் என்றால் அனைவராலும் விரும்பி வாங்கி உண்ணக்கூடிய தர்பூசணிப்பழத்தை பற்றிய பல்வேறு தகவல்களையும், நன்மைகளையும் தெரிந்துக்கொள்ளலாம்.

பொருளடக்கம்

  • தர்பூசணி
  • தர்பூசணி பழத்தின் வேறுப்பெயர்கள்
  • தர்பூசணி பழத்தை தேர்ந்தெடுக்கும் முறை
  • சுவையான தர்பூசணியை தேர்ந்தெடுக்கும் முறை
  • மரபணு மாற்றமும், தர்பூசணியும்
  • தர்பூசணி பழத்தில் உள்ள சத்துக்கள்
  • தர்பூசணி பழத்தின் நன்மைகள்

தர்பூசணி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்தமான பழங்களில் ஒன்று தர்பூசணி (watermelon) பழம் ஆகும்.

இந்த பழத்தின் சுவை மற்றும் வண்ணம் அனைவரையும் கவரக்கூடிய ஒன்று. அதுமட்டுமின்றி, இதிலுள்ள சத்துக்களும் ஏராளம்.

தர்பூசணி ஒரு கொடி வகையை சார்ந்த தாவரமாகும். பழத்தின் வெளிப்புறத்தில் பச்சை, மஞ்சள் அல்லது சிலவேளைகளில் வெள்ளை நிறத்திலும், உட்புறத்தில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும்.

தர்பூசணி பழம்
தர்பூசணி பழம்

தர்பூசணி பழத்தின் வேறுப்பெயர்கள்

தர்பூசணி பல்வேறு இடங்களில், பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. அதில் ஒருசிலவற்றை கீழே குறிப்பிடுகிறேன்.

        • வத்தகை,
        • வத்தகப்பழம்,
        • தர்பீஸ்,
        • கோசாப்பழம்,
        • தண்ணீர் பழம்,
        • குமட்டி பழம்,
        • தண்ணீர்ப்பூசணி, மற்றும் தரைப்பூசணி.

தர்பூசணி தேர்ந்தெடுக்கும் முறை

தர்பூசணி பழத்தை பலர் தேர்ந்தெடுக்க தெரியாமல் பழம் என நினைத்து காயை தெரிந்துதெடுத்து இருப்பீர்கள். அவர்களுக்கு எளிய முறையில் எவ்வாறு பழத்தை கண்டறிவது என்று சொல்கின்றேன்.

பழத்தை திருப்பி பார்க்கும் பொழுது, பழமானது மண்ணில் இருந்தப்புறத்தில் வெள்ளை பகுதி இருக்கும். அது சுத்தமான வெள்ளை நிறத்தில் இருந்தால், அது காயாகும்.

அதுவே, சற்று மஞ்சளாகவோ, அழுக்கான நிறத்திலோ இருந்தால் அது பழமாகும். அதுமட்டுமின்றி, வடிவத்திற்கு ஏற்ற எடையும் இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பின் அது நல்ல பழுத்த பழமாகும்.

தர்பூசணி
தர்பூசணி

சுவையான தர்பூசணியை தேர்ந்தெடுக்கும் முறை

சில பழங்களின் மேற்புறத்தில் வண்டுகள் அரித்ததுப்போல வரிகள் காணப்படும். உண்மையில் அது வண்டுகள் அரித்தது அல்ல, தர்பூசணியானது பலராக இருக்கும் பொழுது தேனீக்கள் பலமுறை ஒரே மலரில் தேனை எடுத்ததால் ஏற்பட்ட வரிகளே ஆகும்.

இவ்வாறு வரிகள் உள்ள பழம், அதிக சுவை நிறைந்த பழமாக இருக்கும். காரணம் பல மலர்களின் மகரந்தமானது தேனீக்களால் ஒரே மலரில் சேர்க்கப்பட்டதே ஆகும்.

சில பழங்கள் நீளவாக்கிலும், சில பழங்கள் சற்று உருண்டையாகவும் இருக்கும். 

நீளவாக்கில் உள்ள பழத்தில் சற்று சுவை குறைவாகவும், அதிகமான நீர்ச்சத்தும் நிறைந்து காணப்படும். இதை தாகத்தை தீர்க்க விரும்புபவர்கள் சாப்பிட தாகம் தணிந்து உடல் குளிமையடையும்.

சற்று உருண்டையான வடிவத்தில் உள்ள பழத்தில் நீர்ச்சத்து குறைவாகவும், அதிக ருசியாகவும் இருக்கும்.

மரபணு மாற்றமும், தர்பூசணியும்

சிலர் தங்களின் சுய இலாபத்திற்காக தர்பூசணியின் வண்ணம், சுவை, மற்றும் எடையை அதிகரிக்க, தர்பூசணி பிஞ்சுகளாக இருக்கும் பொழுது மருந்துகளை ஊசியின் மூலமாக செலுத்துகின்றனர்.

இதனால் நமது உடலுக்கு பல்வேறு கெடுதல்கள் வருகின்றன. இவ்வாறு ஊசிகள் மூலமாக வளர்க்கப்பட்ட பழங்களை வெட்டி பார்க்கும் பொழுது பழத்தில் சில வெற்றிடங்கள் தெரியும். இதன் மூலமாக ஊசிகள் போட்டு வளர்ந்த பழத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

தர்பூசணி பழம்
தர்பூசணி பழம்

தர்பூசணியில் உள்ள சத்துக்கள்

உடலின் வெப்பத்தை தணித்து, உடலுக்கு குளிர்ச்சியளிக்கக்கூடிய தர்பூசணியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் சில,

        • வைட்டமின் பி,
        • தாது உப்புக்கள்,
        • இரும்புசத்து,
        • சுண்ணாம்புச்சத்து,
        • பாஸ்பரஸ்,
        • கால்சியம்.

தர்பூசணியின் நன்மைகள்

கோடைக்காலத்திற்கு உகந்த பல்வேறு நன்மைகளை கொண்ட தர்பூசணியை சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றது.

உடல்சூடு

தர்பூசணி உடலுக்கு குளுமை அளித்து கோடை வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கோடை வெப்பத்தால் ஏற்படக்கூடிய நோய்களை தடுக்கிறது.

தர்பூசணி சாப்பிடுவதால் உடல் வெப்பம் குறைந்து, உடல் சோர்வை குறைக்கிறது.

தர்பூசணி பழம்
தர்பூசணி பழம்

மலச்சிக்கல்

பெரும்பாலோர் தற்போதைய காலக்கட்டத்தில் நார்ச்சத்து குறைந்த உணவும், மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதே, மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம் அமைகிறது.

தர்பூசணியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.

ஆண்மை குறைபாடு

தர்பூசணி ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. தர்பூசணியின் வெள்ளை பகுதியில் சிட்ருலின் சத்து அதிகம் உள்ளது.

அதை சாப்பிடுவதால் ஆண்மை குறைபாடு நீங்கி, ஆண்மை அதிகரிக்கும்.

தர்பூசணி பழம்
தர்பூசணி பழம்

இளமைத்தோற்றம்

தர்பூசணி சாப்பிடுவதால், நமது சருமத்தில் விழும் சுருக்கம் மற்றும் தோல் கடினமாவதை தடுக்கும் தன்மைக்கொண்டது. 

அதுமற்றுமின்றி தர்பூசணி சாப்பிடுவதால் செல்களின் வளர்ச்சியானது அதிகரிக்கும், ஈரப்பதம் குறைவால் ஏற்படும் சரும வறட்சியை தடுத்து சருமத்தை பளபளக்க செய்யும் தன்மை கொண்டது.

இதனால் தர்பூசணி சாப்பிடுபவர்கள் இளமையாக தோற்றம் அளிப்பார்கள்.

இதயம்

ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் இதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது.

தர்பூசணி சாப்பிடுவதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். அதுமற்றுமின்றி, இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையும் தர்பூசணிக்கு உண்டு.

தர்பூசணி பழம்
தர்பூசணி பழம்

உடல் எடையை குறைக்க

பல்வேறு கடைகளில் கிடைக்கின்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு, உடலில் கெட்டக்கொழுப்பானது அதிகமாக சேர்ந்து உடல் எடையை குறைக்க இயலாமல் பலர் தவித்து வருகின்றனர்.

தர்பூசணியில் கெட்டக்கொழுப்பை குறைக்கும் வேதிப்பொருள் ஆனது அதிகமாக உள்ளது.

தர்பூசணியை சாப்பிடும் பொழுது, விரைவில் கொழுப்பானது குறைகிறது. அதுமற்றுமின்றி, மேலும் கொழுப்பு சேராமல் தடுக்கிறது.

கண்பார்வை

தர்பூசணியில் கண்பார்வையை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளது. தர்பூசணி சாப்பிடும் பொழுது கண்ணில் உள்ள செல்களின் வளர்ச்சியானது அதிகரித்து, வயதாவதால் ஏற்படும் பார்வை குறைபாடுகளை தடுக்கிறது.

தர்பூசணி பழம்
தர்பூசணி பழம்

புற்றுநோய்

தர்பூசணிப்பழத்தை சாப்பிடும் பொழுது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. இதனால் நோய்யெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

அதுமற்றுமின்றி, புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

முடிவுரை

தர்பூசணியால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது என்பதை அறியாமல் பலரும் சாப்பிடுகின்றனர். இனி அறிந்து மேலும் சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

Post a Comment

0 Comments