தேங்காய் |
Benefits of Coconut | Health
நமது பாரம்பரியத்தில் கலந்த, தொன்றுதொட்டு பயன்படுத்தி வரும் ஒன்று தேங்காய் என்றால் மிகையாகாது. தேங்காயில் பல்வேறு வகையான நன்மைகள் நிறைந்துள்ளது.
அவற்றை இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொள்வோம்.
பொருளடக்கம்
- தேங்காய்
- தேங்காயின் பெயர்க்காரணம்
- தேங்காயும், பாரம்பரியமும்
- தேங்காயில் உள்ள சத்துக்கள்
- தேங்காயின் மருத்துவக்குணங்கள்
- தேங்காயும், ஆராய்ச்சியும்
தேங்காய்
தென்னை மரத்தில் இருந்து கிடைக்கின்ற இளநீரின் முற்றிய காயானது தேங்காய் என அழைக்கப்படுகிறது.
தேங்காயானது அடர்த்தியான நார்கள் மத்தியில், சற்று கடினமான ஓட்டின் உள்ளே இருக்கக்கூடிய பருப்பாகும். அந்த பருப்புடன், தேங்காய் நீரும் இருக்கும். இது இனிப்பு சுவையுடையது.
அந்த தேங்காய் முற்றிய நிலையில், தேங்காய் நீர் வற்றிவிடும். அந்த தேங்காயை, நெற்று தேங்காய் என அழைப்பார்கள்.
இவ்வாறு நீர் வற்றிய நெற்று தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணெய் பிழிந்து எடுக்கப்படுகிறது.
பொதுவாக, தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் பயன்படக்கூடியவை ஆகும்.
தேங்காய் |
தேங்காயின் பெயர்க்காரணம்
தேங்காய் ஆனது இந்தோனேசியா, இலங்கை மூலமாக இந்தியாவிற்கு வந்தாலும், தெற்கிலிருந்து வந்ததாலும், இதை தென் காய் என அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தேங்காய் ஆனது.
நன்னுலில் தேங்காய் தெற்கிலிருந்து வந்ததன் காரணமாக தெங்கு+காய்=தேங்காய் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
தேங்காயும், பாரம்பரியமும்
நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் கலந்த ஒன்று என்றால் அது தேங்காய் தான். இந்துமதத்தில் தேங்காயை கற்பகத்தரு என குறிப்பிடுகின்றனர்.
அதுமற்றுமின்றி, தேங்காயை புனிதமான பொருளாகவும் கருதுகின்றனர்.
தேங்காயில் உள்ள தண்ணீர் அசுத்தமில்லாது எனவும், உயிர்களை பலியிடுவதற்கு பதிலாக, தேங்காயை உடைத்து வழிபடலாம் என்றும் கருதினர்.
அதன் காரணமாக, கடவுளுக்கு படைக்க பயன்படும் முக்கிய பொருளாக தேங்காய் உருப்பெற்றது.
தேங்காய் |
தேங்காயில் உள்ள சத்துக்கள்
தேங்காயில் பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. தேங்காயில் உள்ள சத்துக்களை கீழே பட்டியலிடுகிறேன்.
- மாவுச்சத்து,
- கொழுப்பு,
- புரதம்,
- மாங்கனீசு,
- வைட்டமின் சி, சி9,
- பொட்டாசியம்,
- துத்தநாகம்,
- பாஸ்பரஸ்,
- செலினியம்,
- கால்சியம் மற்றும் இரும்புச்சத்து.
மேலும், தேங்காயில் 61 சதவீதம் நீரில் கரையாத நார்சத்துக்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக தேங்காய் கலந்த உணவுகளை சாப்பிட்டால் விரைவில் பசிக்காது.
தேங்காயின் மருத்துவக்குணங்கள்
தேங்காய் பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டுள்ளது. தேங்காய் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் என அனைத்திலும் பயன்படுத்தி வருகின்றனர்.
தேங்காயில் உள்ள சத்துக்கள் காரணமாகவும், அதன் தன்மைகள் காரணமாக கிடைக்கப்பெறும் நன்மைகளை பார்க்கலாம்.
தேங்காய் |
நீரிழிவு நோய்
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேங்காய் பாலில் உள்ள மாங்கனீசு நல்ல தீர்வாக அமைகிறது.
இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
சருமம்
அனைவருக்கும் தங்களுடைய அழகை மேம்படுத்த எண்ணம் இருக்கும். தங்களுடைய அழகை பேணிக்காக்கவும் செய்வார்கள்.
அதற்கு தேங்காய் பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. தேங்காய் மூலமாக பல்வேறு அழகு சாதனப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்தில் பயன்படுத்துவது சிறந்தது.
இந்த பொருட்கள் மூலமாக நமது சருமம் பளபளப்பாகவும், சுருக்கங்கள் இன்றியும் இருக்கும். இதனால் முதுமையிலும் இளமையாக இருப்பார்கள்.
எலும்பு
நமது உடல் வலிமைக்கு எலும்புகளே முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புகள் வலுவாக இருந்தால், உடலும் வலிமையாக இருக்கும்.
தேங்காயில் கால்சியம் சத்து மிக குறைவு. ஆனால் எலும்புகளுக்கு தேவையான பாஸ்பரஸ் சத்து எலும்பு முறிவை தவிர்க்க உதவுகிறது.
அதுமட்டுமன்றி, இதில் உள்ள செலினியம் சத்தானது கீழ்வாத நோய் வராமல் தவிர்க்கும். எலும்புருக்கி நோய் வராமலும் காக்கிறது.
தேங்காய்கள் |
உடல் எடை
நமது உடலில் கொழுப்பானது, தேங்காயை உணவில் சேர்ப்பதால் அதிகரிக்கும் என்கின்ற தவறான எண்ணமானது பெரும்பாலானோர் மத்தியில் உள்ளது.
இது முற்றிலும் தவறான ஒன்றாகும். தேங்காயில் கொழுப்பு சத்தானது குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு அதிகரிப்பது இல்லை.
உடலெடையை குறைக்க விரும்புபவர்கள் தேங்காயை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
நமது உடலில் பல்வேறு நோய்கள் வராமல் காப்பது நோய் எதிர்ப்பு சக்தியாகும். இது நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மைக்கொண்டது.
தேங்காயை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்க செய்யும். தேங்காய் பாலானது வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவற்றை அழிக்கும் தன்மை கொண்டது.
இளநீர் |
உடல் சூடு
பொதுவாக உடல் சூடால் பெரும்பாலான நபர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் சூட்டின் காரணமாக, உடல் எடையானது அதிகரிக்காது.
கோடைக்காலங்களில் உடல் சூடு மேலும் அதிகரிக்கும். இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இளநீர், தேங்காய் தண்ணீர், தேங்காய் பால் போன்றவற்றை அருந்துவதன் மூலமாக உடல் சூட்டை தவிர்க்கலாம்.
இரத்தம் சுத்திகரிக்க
இரத்தம் அசுத்தமாவதன் காரணமாக தோல் நோய்கள் பல ஏற்படுகின்றன. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
தேங்காய் பாலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதன் மூலமாக இரத்தமானது சுத்தமாகிறது.
இதனால் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக குறைபாடுகள் வராமல் தவிர்க்கலாம். உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது.
வயிற்றுப்போக்கு
கோடை வெப்பத்தால் பல்வேறு நபர்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். அதுபோன்ற சமயங்களில் இளநீரை பருகுவது நல்ல பலனை தரும்.
இளநீர் உடல் சூட்டை குறைத்து வயிற்றுப்போக்கை தவிர்க்க செய்யும். சிறுநீரக தொற்று பிரச்சனை உள்ளவர்களுக்கும் இளநீர் சிறந்த மருந்தாகும்.
இளநீர் |
வயிற்றுப்புண்
பல்வேறு நபர்கள் வயிற்றுப்புண் காரணமாக பிடித்தமான உணவுப்பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்து வருவார்கள். அவர்களுக்கு தேங்காய் பால் சிறந்த மருந்தாகும்.
தேங்காய் பால் வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் என அனைத்தையும் குணப்படுத்தும் தன்மைக்கொண்டது.
மூளை
தேங்காய் பால் அடிக்கடி பருகி வருவதன் மூலமாக மூளை மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களை வராமல் தவிர்க்கலாம்.
மூளை சம்பந்தப்பட்ட நோயான அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் குறைவு (மறதி) நோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.
தாய்ப்பால்
பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாகவும், இன்றியமையாததாகவும் இருக்கின்ற தாய்ப்பாலில் மட்டுமே இருக்கின்ற லாரிக் அமிலமானது தேங்காய்ப்பாலில் உள்ளது.
தேங்காய்கள் |
சிறுநீரக தொற்று
சிறுநீரக தொற்றின் காரணமாக அவதிப்படுவோர், தேங்காய் பூவை நெய்யில் வறுத்து, பொடி செய்து காலை மற்றும் மாலை என இருவேளைகள் சாப்பிட்டு வர சிறுநீர் கழிக்கும் உணர்வு கட்டுப்படும்.
மாதவிடாய் கோளாறு பிரச்சனை கொண்ட பெண்களும் இதை சாப்பிட்டு வர சரியாகும்.
தேங்காயும், ஆராய்ச்சியும்
தேங்காயில் பல்வேறு நன்மைகள் இருப்பினும், சமீபக்காலமாக அதன் பயன்பாடு குறைந்துவிட்டது என்பது உண்மை ஆகும். காரணம், இதில் உள்ள அதிகப்படியான உறையும் தன்மை கொண்ட கொழுப்பை பற்றிய பயமாகும்.
இந்த உறையும் தன்மைக்கொண்ட கொழுப்பிற்கு "ஸாச்சூரேட்டட் பேட்" என்று பெயர்.
தேங்காய் எண்ணெய் |
இது இரத்தக்குழாய்களில் படிந்து மாரடைப்பை ஏற்படுத்தும் என்றும், உடல் எடையை அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த அச்சத்தின் காரணமாகவே, தேங்காய் மற்றும் அதன் எண்ணெய் பயன்பாடானது குறைந்துவிட்டது.
ஆனால் தற்பொழுது நடத்தப்பட்ட சில ஆய்வுகளில், இந்த கொழுப்பு மத்திம கொழுப்பு அமிலத்தை சார்ந்தது எனவும், இது உடலுக்கு நன்மையளிக்க கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
இது உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுவதில்லை, மாறாக கல்லீரலை அடைந்ததும், உடலுக்கு தேவையான சக்தியாக மாறுகிறது.
முடிவுரை
இந்த பதிவின் மூலமாக தேங்காய் மற்றும் தேங்காய் பாலை பற்றிய பல தகவல்களை தெரிந்துக்கொண்டு, பயன்பெற்று இருப்பீர்கள் என நம்புகிறேன்.
0 Comments