திருநீற்றுப்பச்சிலை |
Thiruneetru pachilai uses in tamil | sabja seeds in tamil
நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு மூலிகை தாவரங்களில் ஒன்றான திருநீற்றுப்பச்சிலையையும், அதன் விதையை பற்றிய அறிய பல தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.
பொருளடக்கம்
- திருநீற்றுப்பச்சிலை
- திருநீற்றுப்பச்சிலையின் வேறுப்பெயர்கள்
- சப்ஜா விதைகள்
- சப்ஜா விதைகளில் உள்ள சத்துக்கள்
- திருநீற்றுப்பச்சிலையின் நன்மைகள்
- சப்ஜா விதைகளின் நன்மைகள்
திருநீற்றுப்பச்சிலை
நமது முன்னோர்கள் அன்றாடம் பயன்படுத்திய மூலிகை தாவரங்களில் திருநீற்றுப்பச்சிலையும் ஒன்று. இந்த பச்சிலை ஆனது பல்வேறு மருத்துவக்குணங்களை கொண்டது.
இந்து துளசி தாவரத்தை போன்றே காட்சியளிக்கும். ஆனால் இதன் இலைகள் துளசியை விட சற்று பெரிதாகவும், கார்ப்பு சுவையும், மணமும் அளிக்கும்.
இந்த மூலிகை தாவரத்தை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். இதன் மூலமாக எளிதில் பல்வேறு நன்மைகளையும் பெறலாம்.
திருநீற்றுப்பச்சிலை |
திருநீற்றுப்பச்சிலையின் வேறுப்பெயர்கள்
திருநீற்றுப்பச்சிலைக்கு பல்வேறு ஊர்களில், பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கின்றனர். அதில் ஒரு சில பெயர்களை குறிப்பிடுகிறேன்.
- உருத்திரச்சடை,
- விபூதிப்பச்சிலை,
- கரந்தை,
- துன்னுத்துப்பச்சி.
சப்ஜா விதைகள் (Sabja seeds in tamil)
திருநீற்றுப்பச்சிலையின் விதைகள் பரவலாக, சப்ஜா விதைகள் என அழைக்கப்படுகிறது. இந்த விதைகள் எள் அல்லது கருச்சீரகத்தை போல இருக்கும். கருமையான நிறத்தை கொண்டது.
இந்த விதைகளை தண்ணீரில் ஊறவைக்கும் பொழுது, இந்த விதைகளை சுற்றிலும் வெண்மையான வழவழப்பான படலம் உண்டாகும்.
இந்த விதைகளை பெரும்பாலும் பலூடா மற்றும் சர்பத்களை சாப்பிடும் தருணத்தில் பார்த்திருப்பீர்கள்.
சப்ஜா விதைகள் |
சப்ஜா விதைகளில் உள்ள சத்துக்கள்
சப்ஜா விதைகள் எனப்படும் திருநீற்றுப்பச்சிலையின் விதைகளில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த விதைகளில் அடங்கியுள்ள சத்துக்களில் ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
- துத்தநாகம்,
- சல்பர்,
- ஆன்டி ஆக்ஸிடன்ட்,
- வைட்டமின் ஏ, பி மற்றும் சி,
- இரும்புச்சத்து.
திருநீற்றுப்பச்சிலையின் நன்மைகள்
திருநீற்றுப்பச்சிலையில் பல்வேறு மருத்துவக்குணங்கள் உண்டு. இதை அகத்திய முனிவர் வாந்தி மற்றும் கபநோய்களை குணப்படுத்த பயன்படுத்தி உள்ளார்.
இந்த திருநீற்றுப்பச்சிலையின் பல்வேறு மருத்துவக்குணங்களை ஒவ்வொன்றாக தெரிந்துக்கொள்வோம்.
திருநீற்றுப்பச்சிலை |
காய்ச்சல்
நமது உடலில் காய்ச்சலின் பொழுது உடல் ஆனது கனமாக தெரியும். இதற்கு காரணம் கெட்ட நீரானது உடலை விட்டு வெளியேறாமல் உடலின் உள்ளே தங்குவதே ஆகும்.
திருநீற்றுப்பச்சிலையின் செடியை கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை பருக உடலில் உள்ள கனநீரை வியர்வை வழியாக வெளியேற்றும்.
இதனால் உடலானது புத்துணர்ச்சி அடையும். காய்ச்சலும் சரியாகும்.
தலைவலி
திருநீற்றுப்பச்சிலையின் இலைகளை பறித்து, நன்றாக மசித்து சாறு பிழிந்து நெற்றியில் தடவ தலைவலி சரியாகும்.
சாதாரணமாக திருநீற்றுப்பச்சிலையின் இலைகளை கைகளால் மசித்து, மூக்கால் முகர தலைவலி மற்றும் மூக்கு கோளாறுகள் சரியாகும்.
திருநீற்றுப்பச்சிலை |
வாந்தி, குமட்டல்
திருநீற்றுப்பச்சிலையின் இலைச்சாறுடன், சரிபாதி வெந்நீரில் கலந்து குடிக்க வாந்தி மற்றும் குமட்டல் சரியாகும்.
தேவையெனில், தேன் கலந்தும் குடிக்கலாம். இதுபோல் குடிக்கும் பொழுது நாள்பட்ட வாந்தியையும், சரியாகும்.
பரு, கண்கட்டி, புண்கள்
பருக்களால் அவதிப்படுவோர், திருநீற்றுப்பச்சிலையின் இலையை அரைத்து, அந்த சாறை பருக்களின் மீது தடவ பருக்கள் அழுந்திவிடும்.
அதுபோல சீழ் போன்ற பிரச்சனைகள் இருந்தால், அதை வெளியேற்றவும் செய்யும்.
இந்த சாற்றை புண்களின் மீது தடவ புண்கள் விரைவில் ஆறிவிடும்.
திருநீற்றுப்பச்சிலை |
சருமம்
திருநீற்றுப்பச்சிலை சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை தரும். அதன் இலைகளில் பல்வேறு நன்மைகள் அடங்கியிருக்கும்.
திருநீற்றுப்பச்சிலையின் இலைச்சாறை தேமல், படை ஆகியவற்றின் மீது தடவ, விரைவில் சரியாகும்.
திருநீற்றுப்பச்சிலையின் சாறை,வசம்புடன் குழைத்து பூச சரும பிரச்சனைகள் தீரும்.
அதுபோல விஷசந்து ஏதேனும் கடித்துவிட்டால் அதன் கடிவாயில் தடவ விஷம் இறங்கும்.
புற்றுநோய்
சமீபத்தில் திருநீற்றுப்பச்சிலை மீது நடத்தப்பட்ட ஆய்வில் திருநீற்றுப்பச்சிலையில் இருந்து தயாரிக்கப்படும் வேதிப்பொருள் புற்றுநோய் உண்டாகும் செல்கள் பரவுவதை தடுக்கும்.
திருநீற்றுப்பச்சிலை |
சப்ஜா விதையின் நன்மைகள்
கோடை வெப்பத்தில் உடல் வெப்பம் அதிகரித்து அவதிப்படுகிறீர்களா? உங்களுக்கு சப்ஜா விதை அவசியமானது.
சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து குளிர்பானத்தில் கலந்து குடிக்க உடல் சூடானது விரைவில் குறையும்.
இந்த சப்ஜா விதையில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் சிலவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்.
சிறுநீரக கோளாறுகள்
உடல் சூட்டால் ஏற்படும் நீர் கடுப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சப்ஜா விதைகளை எடுத்துக்கொள்ளும் பொழுது சரியாகும்.
சப்ஜா விதைகள் |
குடல் (ம) வயிற்றுப்புண்கள்
திருநீற்றுப்பச்சிலையின் விதைகளான சப்ஜா விதைகள் வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது.
இதை தண்ணீரில் ஊறவைத்து குடிக்கும் பொழுது வயிறு குளுமை அடைகிறது. பின்னர், உடல் சூடும் குறைந்து, வயிறு மற்றும் குடல் புண்கள் ஆறுகின்றன.
அதுமற்றுமின்றி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் இருப்பின், அவைகளுக்கும் சப்ஜா விதைகள் தீர்வாக அமைகிறது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும் தன்மைக்கு கொண்டது.
நோய் எதிர்ப்பு சக்தி
திருநீற்றுப்பச்சிலை விதைகள் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
இதை சாப்பிடுவதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்து, ஏனைய பல நோய்கள் வராமல் காக்கிறது.
சப்ஜா விதைகள் |
இரத்தசோகை
நமது இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையானது குறையும் பொழுது இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக்கக்கூடும்.
சப்ஜா விதைகள் இரத்தசோகையை போக்கும் ஆற்றல் கொண்டது.
ஆண்மை அதிகரிக்க
பொதுவாக உடல் சூடு என்பது பல்வேறு கெடுதல்களை ஏற்படுத்தும். அதில் ஆண்மை குறைபாடும் ஒன்று. சப்ஜா விதைகளை எடுத்துக்கொள்ளும் பொழுது உடல் சூடு குறைகிறது.
அதுமற்றுமின்றி ஆண்மை அதிகரிக்கவும் செய்கிறது.
திருநீற்றுப்பச்சிலை |
காது வலி
திருநீற்றுப்பச்சிலையின் இலை சாறை காது வலி ஏற்படும் தருவாயில், காதில் ஊற்ற காது வலி குணமாகிறது. அதுபோல காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகள் இருப்பின் அதும் சரியாகும்.
திருநீற்றுப்பச்சிலையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.
திருநீற்றுப்பச்சிலையின் எண்ணெய் சிறிதளவு எடுத்து உடலில் பூசிக்கொள்வதன் மூலம் கொசுக்கடியில் இருந்து விடுபடலாம்.
முடிவுரை
திருநீற்றுப்பச்சிலை மற்றும் திருநீற்றுப்பச்சிலையின் விதைகளான சப்ஜா விதையின் நன்மைகளை தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள்.
இனி திருநீற்றுப்பச்சிலையை பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
0 Comments