Ticker

6/recent/ticker-posts

வெள்ளரிக்காயின் நன்மைகள் | Cucumber benefits | Tamil

வெள்ளரி
வெள்ளரி

Benefits of Cucumber | Health

வெள்ளரிக்காயை பற்றி அறியாதவர் இருக்க இயலாது என்பது உண்மை தான். இவ்வுலகியில் அதிகமான இடங்களில் பெரும்பாலும் உண்ணக்கூடிய வெள்ளரியின் நன்மைகளை தெரிந்துக்கொள்வோம்.

பொருளடக்கம்

  • வெள்ளரிக்காய்
  • வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்
  • வெள்ளரிக்காயின் நன்மைகள்
  • வெள்ளரிக்காயை தவிர்க்க வேண்டிய நேரம்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் என்றதும் அனைவருக்கும் நினைவில் வருவது கோடைக்காலம் தான். கோடை வெயிலுக்கு இதமாக வெள்ளரிக்காயை சாப்பிட்டு தாகத்தை தனித்தும் இருப்போம்.

வெள்ளரிக்காய் ஒரு கொடி வகையை சார்ந்த தாவரமாகும். வெள்ளரியில் வெள்ளரிக்காய், வெள்ளரிப்பிஞ்சு, மற்றும் வெள்ளரிப்பழம் என அனைத்து வடிவங்களிலும் சாப்பிடலாம்.

வெள்ளரி
வெள்ளரி

பெரும்பாலான நபர்களுக்கு வெள்ளரிப்பிஞ்சு மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது.

வெள்ளரிக்காய் மஞ்சள் நிறப்பூக்களை பூக்கும். அதிகமான நீர்ச்சத்துக்களை கொண்டது. கோடைக்காலங்களில் அதிகமான விளைச்சலை தரும்.

மிகக்குறைந்த கலோரிகளை கொண்ட வெள்ளரிக்காய் ஆராட்சியாளர்களால், பழங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இதை காய்கறிப்பட்டியலில் வைத்து பயன்படுத்துகின்றனர்.

வெள்ளரிக்காயில் உள்ள சத்துக்கள்

வெள்ளரியில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும் தன்மைக்கொண்டது.

        • சோடியம்,
        • கால்சியம்,
        • மக்னீசியம்,
        • இரும்பு,
        • பாஸ்பரஸ்,
        • கந்தகம்,
        • சிலிகான்,
        • குளோரின்,
        • பொட்டாசியம்,
        • உயர்தரமான புரதம்,
        • கொழுப்பு,
        • மாவுச்சத்து,
        • வைட்டமின் பி மற்றும் சிறிதளவு வைட்டமின் சி.


வெள்ளரிக்காயின் நன்மைகள்

வெள்ளரிக்காயில் பல்வேறு சத்துக்கள் உள்ளதைப்போல, பல்வேறு நன்மைகளும் நிறைந்துள்ளது. இதை உணவில் எடுத்துக்கொள்ளும் பொழுது உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.

இதனால் உடல் வலிமையடைவது மற்றுமின்றி நோய்கள் இன்றி ஆரோக்கியமாக வாழ வழி செய்கிறது.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய்

உடல் வெப்பம்

உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை குறைக்கும் தன்மை வெள்ளரிக்காய்க்கு உண்டு. இதில் அதிகப்படியான நீர்ச்சத்து உள்ளதால் நீர்வறட்சியை தடுக்கும்.

கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல் சூட்டைக்குறைத்து, உடலை குளிர்ச்சியடைய செய்யும் தன்மைக்கொண்டது.

அதுமற்றுமின்றி கல்லீரல் சூட்டை தணிக்கும் தன்மையும் கொண்டது. அதிகப்படியான வேலைப்பளுவால் மூளை சூடு ஏற்படும், வெள்ளரிக்காய் மூளை சூட்டை தணித்து, புத்துணர்ச்சியை அளிக்கும். இதனால் மூளை வலுப்பெறும்.

வயிறு

வெள்ளரிக்காய் செரிமானத்தை அதிகரித்து, பசியை தூண்டும் தன்மையை கொண்டது. குடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மற்றும் இரைப்பை புண்களை ஆற்றும் தன்மையும் கொண்டது.

வெள்ளரிக்காய் சாறை 2 மணி நேரத்திற்கு ஒருமுறை, 6 அவுன்ஸ் எடுத்துக்கொள்ள வயிற்றுப்புண் குணமாகும்.

அதுபோல, இளநீருடன் வெள்ளரிச்சாறு கலந்துக்குடிக்க பேதி சரியாகும்.

தினசரி இரண்டு வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ள, இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை குணப்படுத்தும். மேலும் குடல் சுத்தமாகும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய்

சிறுநீரக பிரச்சனைகள்

வெள்ளரிக்காய் சாப்பிட சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். சிறுநீர் நன்றாக பிரிய செய்யும் தன்மையும் கொண்டது. கீழ்வாத நோய்கள் வராமல் தடுக்கும் தன்மைக்கொண்டது.

நீரிழிவு நோய்

பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை குறைக்க வழி தெரியாமல் தவிப்பார்கள். பல்வேறு உணவுக்கட்டுப்பாட்டால் சரியாக சாப்பிட முடியாமலும் தவிப்பார்கள்.

அவர்கள் வெள்ளரிக்காயை விதையுடன் அரைத்து சாறை பருக உடல் எடையானது கணிசமாக குறைகிறது.

ஆண்மை அதிகரிக்க

ஆண்மை குறைபாடு உடையவர்கள், வெள்ளரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆண்மை அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய்

சருமம் மேம்பட

சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளான பரு, வறண்ட சருமம், கரும்புள்ளிகள் வெள்ளரிக்காயை அரைத்து 15 நிமிடங்கள் பூசியிருக்க சரியாகும்.

தினந்தோறும் செய்து வர முகமானது பொலிவடையும். அழகாக மாறும்.

முடி வளர்ச்சி

தினசரி வெள்ளரிக்காய் சாறை பருக, இதிலுள்ள உயர்தரமான சிலிகானும், கந்தகமும் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். அதுப்போல முடி உதிர்வதை தடுக்கும்.

வெள்ளரிக்காயை தவிர்க்க வேண்டிய நேரம்

வெள்ளரிக்காயில் உள்ள விதைகளில் குக்குர்பிட்டின் என்கிற எம்சைம் ஆனது உள்ளது. இது வெள்ளரிக்காயை இரவு நேரங்களில் எடுத்துக்கொள்ளும் பொழுது ஜீரணத்தையும், துக்கத்தையும் கெடுக்கும்.

அதனால் தூங்குவதற்கு 2 அல்லது 3 மணிநேரம் முன்பாக எடுத்துக்கொள்வது நல்லது.

அதுப்போல உணவுடன் வெள்ளரிக்காயை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிடும் பொழுது செரிமானத்தை பாதிக்கும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய்

அதிகளவு வெள்ளரிக்காயை எடுத்துக்கொள்ளும் பொழுது, இதில் வைட்டமின் கே, மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்டு இருந்தாலும், இதிலுள்ள குக்குர்பிட்டின் நீரிழிப்பை ஏற்படுத்தும்.

மேலும் இதனால் வாயுத்தொல்லை, உப்புசம், ஜீரணக்கோளாறு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

அதுமற்றுமின்றி சிலருக்கு குக்குர்பிட்டின் தோல் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் மருத்துவரை உடனடியாக நாடுவது நல்லது.

சைனஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பொதுவாக, குளுமையான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

அதுப்போல நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள், கபம் மற்றும் இருமல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிட்டால் அதிலுள்ள பொட்டாசியம், மற்றும் பாஸ்பரஸ் அழிந்துவிடும்.

முடிவுரை

வெள்ளரிக்காயில் உள்ள நன்மைகளை தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன். வெள்ளரிக்காயை அளவோடு பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழுங்கள்.

Post a Comment

0 Comments