சீரகத்தின் பயன்கள் |
Seerakam | Seerakaththaneerin Nanmaikal | Cumin benefits in Tamil
நம் சமையலில் அதிகம் பயன்படும், ஒரு பொருள்களில் சீரகம் மிக முக்கியமானது. உடலுக்கு உகந்த சீரகத்தில் எண்ணற்ற பயன்கள் உண்டு. அந்த பயன்களை தெரிந்துக்கொள்ள, இந்த பதிவு உதவியாக இருக்கும்.
பொருளடக்கம்
- சீரகம்
- சீரகம் உற்பத்தியாகும் இடங்கள்
- சீரகம் உள்ள சத்துக்கள்
- சீரகத்தின் மருத்துவக்குணங்கள்
- சீரகத்தண்ணீர் தயாரிக்கும் முறை
- சீரகத்தண்ணீரின் பயன்கள்
சீரகம்
சீரகம் = சீர் + அகம் என்று பிரித்து பொருள் கூறுவார்கள். இது தனது பெயருக்கு ஏற்றாற்போல், நம் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் நோய்களை எல்லாம் அகற்றி, நம் உடலை சீராக்குகிறது.
எனவே தான் நம் முன்னோர்கள் சீரகம் போல் சிரிக்கிறாள் என்றும் சிறுகுழந்தைகள் சிரிப்பைக்கூட சீரகத்தோடுஒப்பிட்டு கூறினார்கள்.
இதை நற்சீரகம் சீரகம் ஆங்கிலத்தில் Cumin என்றும், தாவர இயலில் Cuminum cyminum என்றும் வழங்கப்படுகிறது. இது ஒரு மருத்துவ மூலிகையாகும். காய்ந்த விதைகளையே சீரகமாக பயன்படுகின்றனர்.
சீரகம் |
சீரகம் உற்பத்தியாகும் இடங்கள்
உலகளவில் துருக்கி, சீரிய ஆகிய இடங்கள் சீரகம் உற்பத்தியில் முதலிடம் பிடிக்கின்றன. இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானம் மாநிலத்தில், அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சீரகத்தில் உள்ள சத்துக்கள்
நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சீரகத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில் இரும்பு சத்து, புரதம், நார்சத்து, பொட்டாசிம், செலினியம், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அடங்கியுள்ளன.
சீரகத்தின் மருத்துவக்குணங்கள் | Seerakathin Maruthuva Kunankal
சீரகத்தில் கணக்கில் அடங்காத பல்வேறு மருத்துவக்குணங்கள் உள்ளன. தினந்தோறும் சீரகத்தை பயன்படுத்தும் போது, உடலானது ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் மாறும்.
உறக்கம் |
தூக்கம் வரவழைக்கும் சீரகம்
நமது எண்ணஙகள் சீராகவும், நம் கவலைகள் தீரவும், சீரகத்தை வறுத்துப்பொடித்து வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிட நல்ல தூக்கம் வரும். சீரகத்தை தூளாக்கி, மெல்லிய துணியில் இறுக கட்டி முகர்ந்தாலும், உடனே தூக்கம் வரும்
கூந்தல் வளர்ப்பில் சீரகம்
இன்று நாம் கூந்தலை பராமரிக்க, கலப்படம் நிறைந்த பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.
ஆனால், நம் முன்னோர்கள் சீரகத்தை சீரகத்தை நன்கு கருமை நிறமாக வறுத்துப் பொடித்து அதனுடன் பால் கலந்து தலைக்கு தேய்த்து, அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் தலை முடி அடர் மாநிறமாகும்.
அதையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், தலை முடி கருமை நிறமாக மாறிவிடும். சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள், கூந்தலை வலுவாக்கி முடியின் வேர்கள் வளர்வதற்கும், முடி உதிர்தலை தடுப்பதற்கும் உதவுகிறது.
கல்லீரல் |
கல்லீரலுக்கு உதவும் சீரகம்
சீரகப்பொடி கால் தேக்கரண்டி, புதினா இலைச்சாறு இரண்டு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு பத்து சொட்டு, உப்பு சிறிது சேர்த்து, நீரில் கலந்து உணவுக்குப் பின் குடித்து வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.
எடையை குறைக்க உதவும் சீரகம்
இரவு முழுவதும் சீரகத்தை ஊறவைத்து, அதனை காலையில் கொதிக்க வைத்து, பின்னர், அந்த நீரை வடிகட்டி, அதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரங்களுக்கு, தினமும் காலையில் குடித்து வர விரைவில் எடை குறைவதைக் காணலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்
சீரகம் அரை தேக்கரண்டி, வேப்பம் பூ ஒரு தேக்கரண்டி மற்றும் சிறிதளவு மிளகுப்பொடி சேர்த்து கொதிக்கவைத்து, அந்த நீரை வடிக்கட்டி தேன் கலந்து பருக, சர்க்கரை நோயால் ஏற்படும் கால் எரிச்சல், நரம்பு பாதிப்பு தீரும்.
வயிற்றுவலி |
வயிற்றுப்புண் அகற்றும் சீரகம்
சீரகப்பொடி அரை ஸ்பூன் சேர்த்து, இஞ்சி சாறு சிறிதுடன் கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து 25 மில்லி அல்லது 50 மில்லி குடிக்க, வயிற்றுப்புண், அல்சர், செரிமானமின்மை, பசியின்மையை போக்கும்.
தலைவலி தீர்க்கும் சீரகம்
ஒரு நெல்லி வற்றலை ஊறவைத்து, அரை தேக்கரண்டி சீரகத்தை தண்ணீரில் கொதிக்கவைத்து, பனம் கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்து 48 நாட்களுக்கு ஒருவேளை குடித்து வர, அடிக்கடி வரும் தலைவலி நீங்கும்.
தலைவலி |
மாதர் நலம் காக்கும் சீரகம்
பெண்கள் மாதவிடாய் வருவதற்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பு, முருங்கை இலையுடன், சீரகத்தை சாறெடுத்து வெறும் வயிற்றில் மூன்று நாட்களுக்கு காலை வேளையில் தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குறையும்.
கர்ப்பக்காலத்தில் பெண்கள், கொதிக்கவைத்த சீரக நீர் குடித்துவர அஜீரணத்தினால் ஏற்படும் செரிமான பிரச்சனைகள் தீரும்.
அதுமட்டுமல்லாமல், சீரகத்தை வறுத்து, அதை பொடித்து வெல்லம் சேர்த்து, குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட, அவர்களுக்கு வரும் இருமல் குணமாகும். அதுமட்டுமல்லாமல், பால் சுரப்பிகளை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
சீரகத்தண்ணீர் தயாரிக்கும் முறை
ஒரு தேக்கரண்டி சீரகத்தை, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிக்கட்ட சீரகத்தண்ணீர் தயார். இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கவல்லது.
சீரகத்தண்ணீர் |
சீரகத்தண்ணீரின் பயன்கள் | சீரக தண்ணீரின் நன்மைகள்
சீரகத்தண்ணீர் குடிப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைகிறது. இத்தண்ணீரில் பொட்டாசியம் அதிகளவு இருப்பதால் இரத்த அழுத்தம் சீராகும்.
அதுமட்டுமல்லாமல், இதய வீக்கம் அடைப்புகளை தடுக்கும். இரத்தத்தில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றி, இரத்தத்தை சுத்திகரிக்கும்.
சீரகத்தண்ணீர் குடிப்பதால், பித்தத்தை நீக்கி பித்தப்பைக்கு பாதுகாப்பு அளிக்கிறது. தினம் மூன்று வேளை கொதிக்க வாய்த்த, இந்த சீரகத்தண்ணீரை அருந்துவதால் உடலில் ஏற்படும் பலவீனம் நீங்குவது மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களையும் தீர்க்க வல்லது.
சீரகத்தண்ணீர் வாரம் ஒரு குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும். மேலும், அகத்தை சீராக்கும் சீரகம், ஈரலையும் பலப்படுத்தும்.
சீரகம் மூளையின் செல்களைப் பாதுகாக்கும். சீரகப்பொடியுடன் நெய் மற்றும் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து, இலேகியம் செய்து மெலிந்த தேகம் உள்ளவர்கள் சாப்பிட்டு வர நன்கு சதை பிடிக்கும்.
உடல்நலம் |
பின்குறிப்பு
நமது கன்னியாகுமாரி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் திருமணவிழாக்களில் சீரகத்தண்ணீர், இன்றளவும் கொடுக்கும் பழக்கம் உள்ளது.
முடிவுரை
நம்முடைய உணவுக்கும், உடலுக்கும் பயன்தரும் சீரகத்தையும், சீரகத் தண்ணீர் பற்றியும், இந்த பதிவின் மூலமாக தெரிந்துக்கொண்டோம். இவ்வளவு பயன்கள் வாய்ந்த சீரகத்தைப் பயன்படுத்தி, சீரும் சிறப்புடனும் வாழ்வோம்.
0 Comments