Ticker

6/recent/ticker-posts

நடராஜர் ஆலயத்திலுள்ள கோவில்கள் | பகுதி 2 | Thillai Natrajar Temple

மேற்கு வாசல்
மேற்கு வாசல்

தில்லை என்றது நினைவிற்கு வரும், எம்பெருமான் ஈசனின் ஆனந்த தாண்டவமும், சிவகாமி அன்னையின் கருணை உள்ளமும் தான். முந்தைய பதிவில் தில்லை நடராஜர் ஆலயத்தின் அமைப்பை பார்த்தோம்.

இந்த பதிவின் மூலமாக, தில்லை நடராஜர் ஆலயத்திலுள்ள பிற சந்நிதிகளையும், அதன் சிறப்புகளையும் பார்க்கலாம்.

பொருளடக்கம்

  • தில்லை நடராஜர் கோவிலின் மூலவர்
  • சிவகாம சுந்தரி சந்நிதி
  • முக்குறுணி விநாயகர் சந்நிதி
  • சுப்ரமணியர் சந்நிதி
  • கற்பக விநாயகர் சந்நிதி
  • மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி
  • சிவகங்கை தீர்த்தம்
  • கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி
  • புண்டரீக தாயார் சந்நிதி


தில்லை நடராஜர் கோவிலின் மூலவர்

இன்று தில்லையில் மூலவராக நடராஜர் இருந்தாலும், உண்மையில் நடராஜர் மூலவர் அல்ல. மற்ற திருக்கோவில்களைப் போலவே, இங்கும் மூலவர் லிங்க வடிவில் தான் காட்சியளித்து வந்தார்.

பின்னாட்களில் தான், நடராஜர் பெருமானை மூலவராக வழிப்பட ஆரம்பித்தனர். தில்லை நடராஜர் ஆலயத்தில், இரண்டாம் பிரகாரத்தில் மூலநாதர் என்ற பெயரில், எம்பெருமான் ஈசன் கிழக்கை நோக்கி அருள் பாலிக்கிறார்.

தட்சணாமூர்த்தி ஆலயம்
தட்சணாமூர்த்தி ஆலயம்

அவருக்கு அருகிலுள்ள தனி சந்நிதியில் உமை அன்னை தெற்கு பார்த்து அருள் பாலிக்கின்றார். திருமூலநாதர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். அவரது திருமேனியானது மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளது.

சிவகாம சுந்தரி சந்நிதி

வடக்கு இராஜகோபுரத்தின் வழியாக வந்தால், மூன்றாம் பிரகாரமான வெளிப்பிரகாரத்தில் சக்தியின் முழுவுருவமான அன்னை சிவகாம சுந்தரி அம்பாள் திருக்கோவில் அழகாக காட்சியளிக்கும்.

அந்த திருக்கோவிலின் உள்ளே சிவகாமி அம்பாள் அருள் பொழிகின்றாள்.  இந்த கோவிலின் கொடிமரம் இருக்கும் திருமண்டபம் இடைத்தாங்கல் ஏதுமின்றி, அகலமான கருங்கல் மண்டபமாக உள்ளது. இதுபோன்ற மண்டபங்களை பார்ப்பது அரிது.

சிவகாமி அம்மன் ஆலயம்
சிவகாமி அம்மன் ஆலயம்

இந்த மண்டபத்தின் மேற்புறத்தில் தேவியுடைய மகாத்மியம் சித்திரமாக வரையப்பட்டுள்ளது. மிகுதியான வேலைப்பாடுகள் நிறைந்த, இக்கோவிலில் சிவகாமி கிழக்கு நோக்கி நின்று, அவளது அழகான திருமுகத்தால் அருள் பாலிக்கிறாள்.

 இந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில், எங்கும் காண இயலாத சித்ரகுப்தர் திருச்சந்நிதி தனியாக உள்ளது.

முக்குறுணி விநாயகர் சந்நிதி

தெற்கு கோபுரத்தின் வழியாக வந்தால், திருக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு திசையில் தனியாக கோவில் கொண்டு முக்குறுணி விநாயகர் அருள் புரிகின்றார்.

இவரது திருவுருவமானது சுமார் எட்டு அடி உயரம் கொண்டவராக உள்ளார். இவர் வேண்டியவருக்கு வேண்டிய வரத்தை அளிக்கும் வல்லமை கொண்டவராவார்.

முக்குறுணி விநாயகர் ஆலயம்
முக்குறுணி விநாயகர் ஆலயம்

இவர் வேண்டுதலை நிறைவேற்றி தருவதால், அவரது மனதை குளிர்விக்கும் வண்ணம் பக்தர்கள் இன்றளவும் 108 முதல் 1008 வரை தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சுப்ரமணியர் சந்நிதி

மேற்கு கோபுரத்தின் உட்பகுதியில் வடக்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி, பாலசுப்பிரமணியர், வள்ளி, தேவானையுடன் அருள்பாலிக்கிறார்.

இந்த சந்நிதியில் ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டியில், ஆறு நாட்களுக்கு சூரசங்காரம் ஆனது மிக சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

சுப்ரமணியர் ஆலயம்
சுப்ரமணியர் ஆலயம்

கற்பக விநாயகர் சந்நிதி

ஸ்ரீ நடராஜர் திருக்கோவிலில், கற்பக விநாயகர் திருச்சந்நிதியும் அமைந்துள்ளது. இவர் கிழக்கு நோக்கி அருள்புரிகின்றார். இவரே, இக்கோவிலின் தலவிநாயகர் ஆவார்.

இந்த விநாயகப்பெருமான் ஏழு திருக்கரங்களோடு, நர்த்தன கணபதியாக திருக்காட்சி அளிக்கின்றார். இவ்விநாயகர், துருவாச முனிவருக்கு இரவு சாமவேளையில் நடனம் செய்து காட்சியளித்தார்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி

மேற்கு வாசலில் இருந்து வடக்கு நோக்கி சென்றால், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருச்சந்நிதி அமைந்துள்ளது.அதற்கு வடக்கே நூற்றுக்கள் மண்டபமும் அமைந்துள்ளது.

அம்மண்டபத்தின் அருகில் ஒற்றைக்கால் மண்டபத்தில் திருமூல விநாயகப்பெருமான் அருள்பாலிக்கின்றார்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்

சிவகங்கை தீர்த்தம்

திருமூல விநாயகர் சந்நிதிக்கு முன்பு, என்றும் வற்றாத சிவகங்கை தீர்த்தம் அழகுற அமைந்துள்ளது. இந்த தீர்த்தமானது மிகவும் விசேஷமானது. கோவிலுக்கு உள்ளே அமைந்துள்ள, இந்த தீர்த்தம் ஆனது நாற்புறமும் நல்ல படிக்கட்டுகள் அமைந்துள்ளது.

அதுமற்றுமின்றி, திருக்குளத்தின் படிக்கட்டுகளுக்கு சுற்றிலும் மண்டபமும் அமைந்துள்ளது.

சிவகங்கை தீர்த்தம்
சிவகங்கை தீர்த்தம்

கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி

தில்லை நடராஜனின், ஆனந்த தாண்டவத்தை பார்த்து இரசித்து பிரகாரத்தை சுற்றி வந்தால், அங்கு விநாயகர், லிங்கோத்பவர், சுப்ரமணியர், பள்ளியறை, ஜெமினி பிட்சாடனர், பைரவர், சந்திரர், சூரியர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் இருக்கும்.

பின்னர் நடராஜர் சந்நிதிக்கு எதிர்புறத்தில் அமைந்துள்ள படிகள் மேலே ஏறி மேற்கே பார்த்தால் கோவிந்தராஜ பெருமான் கிழக்கு நோக்கி சாயனக்கோலத்தில் அருள்புரிகின்றனர்.

அங்கு நின்று பார்த்தல் தெற்கு நோக்கி நடராஜர் பெருமானும், கிழக்கு நோக்கி கோவிந்தராஜ பெருமானும் அருள் புரிகின்றனர்.

இவ்வாறு ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் ஒரே கோவிலில் பார்க்கும் திருச்சந்நிதி வேறு எங்கும் இல்லை. இதுவே இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

நூற்றுக்கால் மண்டபம்
நூற்றுக்கால் மண்டபம்

புண்டரீக தாயார் ஆலயம்

நடராஜர் பெருமான் தெற்கு நோக்கி பார்க்கும் வழியாக வெளியே வந்தால் மேற்கு புறத்தில் புண்டரீக தாயார் அருள் புரிகின்றார்.

நவலிங்க சந்நிதி

தில்லை நடராஜர் கோவிலில் மற்றொரு சிறப்பு, ஈசனின் ஒன்பது லிங்க சொரூபங்களுக்கு என்று தனி சந்நிதி அமைந்துள்ளது.

வடக்கு வாசல் வழியாக வந்தால், வலப்புறத்தில் கிழக்கு நோக்கி நவலிங்ககளும், வேண்டியவருக்கு வேண்டியவற்றை அருளுகின்றன.

நவலிங்க சந்நிதி
நவலிங்க சந்நிதி

முடிவுரை

இதுபோல, பல்வேறு தெய்வங்களின் திருச்சந்நிதிகள் தில்லை நடராஜர் ஆலயத்தில் அமைந்துள்ளது. இதில் நடராஜர் பெருமானின் ஊர்த்துவ தாண்டவத்திற்கான தனி சந்நிதியும் உள்ளது.

தெற்கு கைலாயமான தில்லையில் நடராஜரின் கோவிலில் சென்று ஆதியும், அந்தமும் இல்லாத, எம்பெருமானின் ஆனந்த தாண்டவத்தை பார்த்து அருள் பெறுக!.

Post a Comment

0 Comments