விநாயகர் |
Vinayagar Avatharam | Aanaimukanin Varalaru
நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு விநாயகப்பெருமானுக்கு, ஆனை முகம் எவ்வாறு வந்தது என்பது தெரிந்து இருக்கலாம். ஆனால், அந்த ஆனைமுகப்பெருமான் யார் என்பது சிலருக்கே தெரிந்து இருக்கும்.
இந்த பதிவின் மூலமாக, விநாயகர் தோன்றுவதற்கு காரணமாக அமைந்த சில தகவல்களை தெரிந்துக்கொள்ளலாம்.
பொருளடக்கம்
- பிரபஞ்சத்தின் மூலாதாரம்
- தாழம்பூவிற்கு கிடைத்த சாபம்
- விநாயகரின் அவதாரம்
- விநாயகரின் வேறு பெயர்கள்
- விநாயகர் பெயர்க்காரணம்
- விநாயகர் உருவம் சொல்லும் கருத்து
- விநாயகரும், மகாபாரதமும்
பிரபஞ்சத்தின் மூலாதாரம்
இந்துக்களின் நம்பிக்கையின் படி, தெய்வங்களுக்கு எல்லாம் தெய்வமாக விளங்கும் எம்பெருமான் ஈசன், உண்மையில் ஒளியைப்போன்ற சொரூபம் கொண்டவர். அவருக்கு உருவம் இல்லை.
பின்னர், பக்தர்களின் வேண்டுதலுக்காக அவர் லிங்கமாகவும், பின்னர், தில்லையில் மனிதனாக (நடராஜர்) காட்சிக்கொடுத்தார்.
அவர் ஒளிப்போன்ற சொரூபத்தை கொண்டவர். அவரே! முதலில் சிவபெருமானாக உருக்கொண்டு விஷ்ணுவை படைக்க, விஷ்ணுவில் இருந்து பிரம்மன் அவதரிக்க, பின்னர் பிரபஞ்சம் உருப்பெறுகின்றது.
சிவபெருமான் |
இவ்வாறு தோன்றிய பிரபஞ்சத்தில், யார் பெரியவன் என்ற எண்ணம் தோன்றி பிரம்மனும், விஷ்ணுவும் சண்டையிட்டு கொள்கின்றனர். பின்னர், தம்மில் யார் பெரியவன் என்று ஈசனிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் என எண்ணி ஈசனை அடைகின்றனர்.
ஈசனிடம், இந்த பிரபஞ்சத்தை படைத்த நானே பெரியவன் என பிரம்மனும், இந்த பிரபஞ்சத்தை படைத்தவனே, எண்ணில் இருந்து தோண்றியவன். ஆக, நானே பெரியவன் என விஷ்ணுவும் கேட்க, ஈசன் சிரிக்கிறார்.
பின்னர் இருவரையும் பார்த்து, தங்களுக்கு இடையில் ஒரு சிறு போட்டி வைக்கின்றேன். எவர் வெற்றிப்பெறுகின்றாரோ, அவரே பெரியவர் என ஏற்றுக்கொள்ளலாம் என கூறுகின்றார்.
பின்னர், அவர் தன்னுடைய ஆதி சொரூபமான ஒளியாக மாறி, தன்னுடைய அடியை விஷ்ணுவும், முடியை பிரம்மனையும் கண்டுவர கூறுகின்றார். யார் முதலில் வருகிறாரோ, அவரே பெரியவராக கருதலாம் என கூறுகின்றார்.
தாழம்பூவிற்கு கிடைத்த சாபம்
விஷ்ணு வராகம் உருக்கொண்டு ஆதியான சிவனின் அடியை காண செல்கின்றார். பிரம்மா, அன்னத்தில் அமர்ந்து சிவனின் முடியை காண செல்கின்றார். பலகாலம் ஆகியும் இருவராலும் இரண்டையும் காண முடியவில்லை.
தாழைமரம் |
விஷ்ணு தன்னுடைய தவறான எண்ணத்தை கைவிட்டு எம்பெருமானே பெரியவர் என்று உணருகின்றார். பிரம்மன், ஈசனின் முடியை காண செல்லும் பொழுது தாழம்பூ ஒன்று கீழே வந்துக்கொண்டு இருப்பதை பார்த்து எங்கிருந்து வருகின்றாய் என கேட்கின்றார்.
அதற்கு ஈசனின் தலையில் சூடியிருந்ததாகவும், தவறி விழுந்துவிட்டதாகவும் கூறுகின்றது. அப்பொழுது பிரம்மன், ஈசனின் முடியை நெருங்கிவிட்டோம் என எண்ணி, தாழம்பூவிடம் எவ்வளவு நேரமாக விழுந்துக்கொண்டு இருக்கின்றாய் எனக்கேட்டார்.
அதற்கு தாழம்பூவானது, எத்தனை யுகங்களாக விழுந்துக்கொண்டு இருக்கின்றேன் என்றே தெரியவில்லை என கூறியது. இதைக்கேட்டு திடுக்கிட்ட பிரம்மன், தன்னால் ஒரு காலத்திலும் ஈசனின் போட்டியில் வெற்றிபெற இயலாது என உணர்ந்தார்.
ஆனால், தவறான சிந்தனைக்கொண்டு தாழம்பூவிடம் இணைந்து, ஈசனின் முடியை கண்டதாக பொய்யுரைக்க கூற, அதுவும் அவ்வாறு செய்கிறது. அனைத்தும் அறிந்த இறைவன், தன்னிடம் பொய்யுரைத்த பிரம்மாவிற்கு தக்க தண்டனை தருகின்றார்.
தாழம்பூவிற்கு, இனிமேல் என்னுடைய பூஜையில் நீ எந்தக்காலத்திலும் இடம்பெறாமல் போவாய் என சாபம் தருகின்றார். இதன் காரணமாகவே, தாழம்பூ சிவபூஜையில் இடம்பெறுவதில்லை.
மேற்கண்ட கதையின் மூலமாக, ஆதிசக்தியாக இருப்பது ஈசன் என அறிந்துக்கொள்ளலாம்.
விநாயகரின் அவதாரம்
ரதி தேவி, மன்மதன் இறப்பால் சிவபெருமானும், சக்திதேவியும் சேர்ந்து குழந்தை பெற இயலாமல் போகவேண்டும் என சாபம் விட்டதால், சிவபெருமானின் அருளால் குழந்தைப்பேறு அடையாளம் என எண்ணிய சக்திதேவி, அந்த ஆதிசக்தியை நோக்கி தவமிருந்து, தன்னுடைய குழந்தையாக தாம் பிறக்க வேண்டும் என கோருகிறாள்.
ஆதிசக்தியும், சக்திதேவியின் கரத்தினால், தங்களுடைய புதல்வனாக உருபெறுவேன் என வரமளிக்கிறது.
விநாயகப்பெருமான் |
தான் வாங்கிய வரத்தை எண்ணிக்கொண்டிருந்த சக்தி, சிவபெருமான் தவத்தில் இருந்ததால், நீராட செல்லும் முன்பு, தான் பூசியிருந்த மஞ்சளினால், ஆதிசக்தியின் வரத்தைக்கொண்டு, முழுமுதற்கடவுளை புதல்வனாக உருவாகின்றாள்.
தவத்தில் இருந்து மீண்ட ஈசன், பார்வதியை தன்னுடைய கணங்கள் கொண்டு அழைப்பு விடுக்க, காவலுக்கு இருந்த விநாயகரை தாண்டி செல்ல இயலாத காரணத்தால், தேவர்களும், கணங்களும் விநாயகரிடம் பெரும் யுத்தம் செய்கின்றனர்.
அதிசக்தியே, அவதரித்துள்ளது என தெரியாமல் போரிட, அனைவரும் தோற்றுவிடுகின்றனர். இறுதியாக ஈசனே, விநாயகரிடம் சண்டைக்கு வருகின்றார். தன்னுடைய சூலாயுதத்தால் விநாயகரின் தலையை துண்டிக்கின்றார்.
விநாயகர் ஆதிசக்தியாக இருந்தாலும், குழந்தை உருவில் இருந்தார். ஈசன், ஆதிசக்தியின் மறுசொரூபம் ஆவார். இது அனைத்தும் ஆதிசக்தியின் திருவிளையாடல்களே ஆகும்.
விநாயகர் தலை துண்டிக்கப்படும் பொழுது, அம்மா என அழைக்க சக்திதேவி ஓடி வருகின்றாள். தன்னுடைய புதல்வனின் நிலையை கண்டு மனம் கலங்கி, குழந்தை பெற்றதை கூறி உயிர்ப்பிக்க வேண்டுகின்றாள்.
ஆனால், ஈசனின் திரிசூலத்தால் அறுபட்ட தலையை சேர்க்க இயலாது என்பதால், உயிர்ப்பிக்க முடியாது எனக்கூற, சக்தியாக இருந்த தேவி, காளியாக அவதரிக்கின்றாள். அவளது சொரூபம் கண்டு தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுக்குகின்றனர்.
விநாயகப்பெருமான் |
தன்னுடைய மகனுக்கு உயிர்வரவில்லை எனில் அகிலத்தை அழித்துவிடுவேன் என்று ஆவேசமாக கர்ஜிக்கின்றாள்.
விஷ்ணு, பிரம்மா, சிவன் மூவரும் ஆலோசித்து, இறுதியாக பிரம்மன் வடக்கு திசையில் நோக்கி செல்லுங்கள். முதலில் கண்ணில் படும், வடக்கு தெற்கு என திசைமாறி தலைவைத்து உறங்கும் தாய், மற்றும் குழந்தையை கண்டறிந்து குழந்தையின் தலையை வெட்டி எடுத்து வாருங்கள் என கட்டளையிடுகிறார்.
அதன்படி பூதக்கணங்கள் தேடியலைகின்றன. யானை ஒன்று பிரம்மன் சொன்னதைப்போல உறங்குவதை கண்ட பூதக்கணங்கள், குழந்தை யானையுடைய தலையை வெட்டி செல்கின்றன.
பூதக்கணங்கள், யானை தலையுடன் வருவதை கண்ட அனைவரும் திகைக்க, நேரமில்லாத காரணத்தால், வேறு வழியின்றி யானை தலையை சேர்த்து உயிர்பெற செய்கின்றனர்.
உயிர்பெற்ற கணபதிக்கு அனைவரும் தங்களால் முடிந்த வரத்தை அளிக்கின்றனர். ஆதிசக்தியின், அவதாரமான விநாயகப்பெருமான் யானை தலையுடன் விநாயகராக அவதரிக்கின்றார்.
விநாயகப்பெருமான் |
எம்பெருமானும், சக்திதேவியும் சேர்ந்து விநாயகருக்கு அளிக்கும் வரமானது, உன்னை முதலில் எண்ணி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் சித்தி பெரும், எந்தவொரு சுபகாரியமாக இருந்தாலும் முதல் மரியாதை உனக்கே கிடைக்கும் என வரமளிக்கின்றனர்.
இதன் காரணமாகவே, தாங்கள் தொடங்கும் காரியமானது சித்திப்பெற வேண்டும் என நினைத்து அனைவரும் விநாயகருக்கு முதலில் பூஜைகளை செய்து தொடங்குகின்றனர்.
விநாயகரின் வேறு பெயர்கள்
விநாயகப்பெருமானை பல்வேறு பெயர்களைக்கொண்டு மக்கள் வழிப்பட்டு வருகின்றனர். மக்களின் தேவைகளை கருதி, பல்வேறு அற்புதங்களை நடத்தி உள்ளார்.
ஒவ்வொரு அற்புதமும், ஒவ்வொரு காரணகாரியதுடன் நடந்தவை ஆகும். அந்த அற்புதங்களுக்கு ஏற்ப பல பெயர்களைக்கொண்டு, விநாயகர் அழைக்கப்படுகிறார்.
பொதுவாக, விநாயகருக்கு பதினாறு பெயர்கள் உண்டு. அவற்றில் ஒரு சிலவற்றை கீழே குறிப்பிடுகின்றோம்.
- விநாயகர்,
- பிள்ளையார்,
- கணபதி,
- ஐங்கரன்,
- சுகர்.
விநாயகர் பெயர்க்காரணம்
வி என்பதற்கு இதற்கு மேலாக எதுவும் இல்லை என்று பொருள். நாயகர் என்பதற்கு தலைவர் என்று பொருள். விநாயகர் என்பதற்கு, இதற்கு மேல் தலைவர் யாருமில்லை என்று பொருள்.
இதன் காரணமாகவே, விநாயகரை அனைத்து தெய்வங்களுக்கும் மேலாக, முழுமுதற் கடவுளாக வணங்குகிறோம்.
விநாயகப்பெருமான் |
ஐங்கரன் என்பதற்கு ஐந்து கரங்களை உடையவர் என்று பொருள். விநாயகப்பெருமான், தன்னுடைய நான்கு கரங்களுடன், தும்பிக்கையை ஒரு கையாக கொண்டு, தன்னுடைய பக்கதர்களுக்கு மேலும் ஒரு கையால் நம்பிக்கை அள்ளி கொடுக்கும் வள்ளல் ஆவான்.
கணபதி என்பதற்கு கணங்களுக்கு அதிபதி என்றும், க என்பதற்கு ஞானத்தை குறிக்கும். ண என்பதற்கு ஜீவன்களின் மோட்சத்தை குறிக்கிறது. பதி என்பதற்கு தலைவர் என்று பொருள்.
சுகர் என்பதற்கு அழகான தோற்றம், முகத்தை கொண்டவர் என்று பொருள்.
விநாயகர் உருவம் சொல்லும் கருத்து
விநாயகர் உருவம் நமக்கு சொல்லும் உண்மையான கருத்து பெரும்பான்மையான மக்களுக்கு தெரிவதில்லை. உண்மையான கருத்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
பெரிய தலை - பரந்த அறிவையும் ஞானத்தையும் தேடு, பெரிய காதுகள் - நற்கருத்துக்களை அகன்றும் ஆழ்ந்தும் கேள், சிறிய கண்கள் - எதையும் கூர்ந்து கவனி, சிறிய வாய் - குறைவாக பேசு, நீண்ட துதிக்கை - பரந்த மனப்பான்மையோடு எதையும் தேடு, பெரிய வயிறு - செயல்களில் சிக்கல்கள் தடைகள் தோல்விகள் வரலாம், அவை அனைத்தையும ஜீரணித்து முன்னேறு என்பதாகும்.
விநாயகப்பெருமான் |
விநாயகரும், மகாபாரதமும்
வியாச முனிவர் மகாபாரதத்தை கூறவதை கேட்டு, விநாயகப்பெருமான் அதை எழுதிக்கொண்டு இருந்தார். அவர் எழுதும் பொழுது அடிக்கடி எழுத்தாணி உடைய, விநாயகர் தன்னுடைய தந்ததை உடைத்து எழுத்தாணியாக பயன்படுத்தினார்.
இதிலிருந்து, நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், தன்னுடைய அழகை விட அறிவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதாகும்.
முடிவுரை
அனைத்து உயிர்களுக்கும் முழுமுதற்கடவுளாக விநாயகப்பெருமானின் அருளை பெற்று வாழ்வில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்.
0 Comments