Ticker

6/recent/ticker-posts

பேசாமடந்தையும், விக்ரமாதித்தனும் | விக்ரமாதித்தன் கதைகள்

பெண்
பெண்

முந்தைய கதையில் விக்ரமாதித்தன் பத்து வாயில்களை கடந்து எவ்வாறு வந்தோம் என பார்த்தோம். 

அடுத்து என்னென்ன சவால்களை விக்ரமாதித்தன், பட்டி மற்றும் வேதாளம் சந்திக்கிறது என்பதை பார்க்கலாம்.

கதையின் தொடர்ச்சி...

பேசாமடந்தையின் வேடத்தில் வந்த பெண்ணை கண்ட விக்ரமாதித்தன், வேதாளத்தை பார்த்து, வருவது பேசாமடந்தையா? என கேட்டான்.

வேதாளம், அந்த பெண்ணின் கையில் இருக்கும் விளக்கின் திரியை உள்ளே இழுக்கிறேன். 

அந்த பெண் பேசாமடந்தையாக இருந்தால், பணிப்பெண்களை அழைத்து சரி செய்ய சொல்வாள்.

அவ்வாறு இல்லாமல், தானே சரிசெய்து கையை தலையில் துடைத்தால், அவள் பேசாமடந்தையாக இருக்க இயலாது என்றது.

விக்ரமாதித்தனும் சம்மதம் தெரிவிக்க, வேதாளம் விளக்கின் திரியை உள்ளே இழுத்து. அந்த பெண் எதையும் யோசிக்காமல், சரிசெய்து எண்ணெயை தலையில் துடைத்தாள்.

விளக்கு
விளக்கு

விக்ரமாதித்தன் அந்த பெண்ணை பார்த்து, விளக்கேற்றும் பெண்ணே! உங்களின் அழகிய இளவரசி பேசாமடந்தைக்கு என்னை பார்க்க வெட்கமாக இருக்கின்றதா? என்று கேட்டான்.

அந்தப்பெண் விக்ரமாதித்தன் கூறியதை கேட்டு ஓடி சென்றாள். பேசாமடந்தையின் தாயோ, இந்த முறை சமையல் செய்யும் பெண்ணிற்கு பேசாமடந்தை வேடத்தை அளித்து அனுப்பி வைத்தாள்.

விக்ரமாதித்தன் அப்பெண்ணையும் பார்த்து, வேதாளத்தை சோதிக்க செய்தான். வேதாளம், அவள் உணவை பரிமாறும் பொழுது நெய்க்கிண்ணத்தை தட்டி விட, அந்த நெய்யை வழிக்க தொடங்கினாள்.

விக்ரமாதித்தன், அந்தப்பெண் பணிப்பெண்ணை அழைக்காமல், தானே சரி செய்வதை பார்த்து, உணவளிக்கும் பெண்ணே, பேசாமடந்தை எனக்கு உணவளித்தால் மகிழ்வாக உண்பேன் என்றான்.

விக்ரமாதித்தன், பேசாமடந்தை இல்லை என்பதை அறிந்துக்கொண்டான் என்பதை எண்ணி, அப்பெண்ணும் ஓடினாள்.

பேசாமடந்தையின் தாய் வேறுவழியின்றி, விக்ரமாதித்தனை பார்த்து, அநேக பல மன்னர்களை தோற்கடித்த எங்களால் உங்களை தோற்கடிக்க இயலவில்லை.

சாப்பாடு
சாப்பாடு

உங்களுக்கு எதிரில் ஒரு கட்டில் போடப்படும். அதில் என்னுடைய மகள் பேசாமடந்தை அமர்ந்து இருப்பாள். 

உங்களுக்கு இடையில் ஒரு திரைசீலை போடப்பட்டு மறைக்கப்பட்டு இருக்கும். 

நீங்கள் விடிவதற்குள் பேசாமடந்தையை மூன்று முறை பேச வைக்க வேண்டும். 

அவ்வாறு பேச வைத்து விட்டால், நீங்கள் வெற்றிப்பெற்றதாக அறிவித்து, பேசாமடந்தையும், இதுவரை நாங்கள் ஈட்டிய செல்வத்தையும் உங்களுக்கு அளிப்பேன்.

மாறாக, உங்களால் பேசவைக்க இயலவில்லை என்றால், காலையில் உங்களுக்கு மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதையின் மீது அமர்த்தி அனுப்பப்படுவீர்.

அதுமட்டுமல்லாமல், எனது பெண்ணை பேசவைக்கும் முன்பே நீங்கள் தொட்டால் உங்களது தலை வெடித்து சிதறிவிடும் என்றாள்.

விக்ரமாதித்தனும் சம்மதம் தெரிவிக்க, அவனுக்கு முன்னால் ஒரு கட்டில் போடப்பட்டு, இருவருக்கும் இடையில் திரைசீலை ஒன்று போடப்பட்டது.

பேசாமடந்தையிடம், எவ்வாறாவது விடியும் வரை பேசாமல் இருந்துவிடு, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடலாம் என்று அவளது தாய் கூறினாள்.

திரைசீலை
திரைசீலை

பேசாமடந்தையும், அவ்வாறே செய்கின்றேன் என்றுகூறி விக்ரமாதித்தன் முன்பு போடப்பட்டு இருந்த கட்டிலில் அமர்ந்தாள்.

விக்ரமாதித்தன், பேசாமடந்தையை நோக்கி, இவ்வாறு நீ பேசாமல் இருந்தால் என்ன செய்வது? உன்னுடைய வாழ்க்கையில் இவ்வாறு தான் இருக்க போகிறாயா? என்றான்.

இதைக்கேட்ட பேசாமடந்தை, விக்ரமாதித்தன் கூறியதை யோசித்துக்கொண்டே இருந்தாள்.

பேசாமடந்தையை எவ்வாறாவது பேச வைக்க வேண்டும், அதற்கு வேதாளத்தை திரைசீலையில் நுழைந்துக்கொள்ள செய்தான்.

பின்னர், திரைசீலையே! எப்படியும், விடியும் வரை பேசாமடந்தை பேசப்போவதில்லை. 

நேரமும் வீணாக போகின்றது. ஆகையால் நீ ஒரு கதை சொல்வாயா? என கேட்டான்.

அதற்கு திரைசீலையில் இருந்த வேதாளம், மன்னருக்கெல்லாம் மன்னனே! நான் பட்டக்கதையை சொல்லவா? அல்லது கேட்டக்கதையை சொல்லவா? என்று கேட்டது.

பேசாமடந்தை, திரைசீலை பேசுவதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.

பருத்தி
பருத்தி

விக்ரமாதித்தன், நீ பட்டக்கதையை முதலில் சொல் என்றான். திரைசீலையும், ஒரு விவசாயி விதையாக இருந்த என்னை மண்ணில் இட்டு, தண்ணீர் விட்டு, செடியாக வளர்ந்து, பூக்களாக, காய்களாக மாறி பஞ்சு வெடித்து, என்னை நூலாக மாற்றி விற்றான்.

மன்னா! இதுதான் என்னுடைய பட்டக்கதை ஆகும். இனி நான் கேட்டக்கதையை கூறுகின்றேன்.

நூலாக இருந்த என்னை சாயமேற்றி, நெய்து அழகான திரைசீலையாக மாற்றினார்கள். 

ஆனால் என்னுடைய நேரம், என்னை உங்களுக்கு முன்னால் கட்டி தொங்கவிட்டு கொடுமைப்படுத்தி கொண்டு இருக்கின்றனர் என்றது.

இதைக்கேட்ட பேசாமடந்தை, பணிப்பெண்களுக்கு சைகை கொடுத்து திரைசீலையை அவிழ்க்க செய்தாள்.

விக்ரமாதித்தன், பேசாமடந்தையின் அழகில் மெய்மறந்து போனான். பின்னர், சுயநினைவிற்கு வந்து, திரைசீலையே! பேசாமடந்தையின் இரக்ககுணத்தை கண்டாவது இனி ஒரு நல்ல கதையை கூறு என்றான்.

திரைசீலையும் கதைச்சொல்ல தொடங்கியது.

தொடரும்...

Post a Comment

0 Comments